பணம்

படித்ததி பிடித்தது பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியாது . பணத்தால் அவமானம் படாமல் வாழலாம். 1.பணம் உங்களிடம் இல்லை என்றால் நீங்கள் எவ்வளவு பெரிய நேர்மையாளனாக இருந்தாலும் உங்கள் மீது எவ்வளவு மரியாதை இருந்தாலும் அது கானல் நீர் ஆகிவிடும் . 2. உங்களிடம் பணம் இல்லை என்றால் உதாசீனப்படுத்தப்படுவீர்கள் 3. உங்களிடம் பணம் இல்லை என்றால் உங்களை ஒதுக்கி வைத்து அவமானப்படுத்துவார்கள் 4. உங்களிடம் பணம் இல்லை என்றால் கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள்,உறவுகள்,நண்பர்கள் இவர்களால் பல நேரங்களில் அவமானப்பட நேரிடும். 5. மரம் சுட்டே கரியாகவில்லை மயிறு சுட்டா கரியாக போகிறது என்கிற வசனம் எல்லாம் பேசுவதற்கு நல்லா இருக்கும். அவமானத்தை தலை குனிவதை தடுக்க இயலாது. 6. பணத்தால் எல்லாவற்றையும் சாதித்து விட முடியாது என்கிற டயலாக் எல்லாம் தூக்கி போடுங்கள் பணம்தான் உங்களை மரியாதை உள்ள மனிதனாக வாழ வைக்கும் .இது நான் கண்ட அனுபவ உண்மை. 7. நம்மிடம் பணம் இல்லை என்றால் நம் மனமே நம் சொல்வதைக் கேட்காது நம் எண்ணமே நம்மை தூற்ற தொடங்கும்.இவன் ஒரு Useless, பிழைக்கத் தெரியாதவன்,வாய் பட்டா, என்று பேசுவது நக்கலாக பார்ப்பது இதெல்லாம் நடக்கும். 8. இளமையில் பணத்தை தேடி சம்பாதிக்கவில்லை என்றால் முதுமையில் அவமானப்பட வேண்டி இருக்கும் .மனம் சஞ்சல ப்படும். 9. உன்னிடம் உள்ள குறைந்த தொகை வைத்து சிறப்பாக நீ வாழ்ந்தாலும் மற்றவரிடம் கையேந்தி நிற்காமல் இருந்தாலும் சபைகளில் சங்கடங்களுக்கு நிச்சயமாக ஆளாக வேண்டி வரும். 10. இளமையில் சம்பாதித்த தந்தையின் சொத்தை சந்ததிகள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்க நன்றாக சம்பாதியுங்கள் தங்களை வளர்த்த பெற்றோர்கள் சந்தோஷமாக வாழ பணம் ஒரு பிரதானம். 11. எனது பதிவில் நிச்சயமாக பலருக்கு மாற்று கருத்து இருக்கலாம் .சர்க்கரை என்று சொல்லியும் பேப்பரில் எழுதியும் நாக்கால் நக்கினால் நிச்சயம் இனிக்காது. 12. ஓடுகின்ற வரை ஓடிக்கொண்டே இருங்கள் உழைத்துக் கொண்டே இருங்கள் பணத்தை சம்பாதித்துக் கொண்டே இருங்கள் கடைசி காலம் வரை. 13.எந்த கஷ்டமாக இருந்தாலும் பணத்தால் அதை தீர்ப்பதற்கும் குறைப்பதற்கும் வழி வகை உண்டு . 14.ஏதோ ஒரு சில சந்தர்ப்பங்களில் பணத்தால் முடியாத சில சூழல்களும் மனிதனுக்கு ஏற்படுவது உண்டு. 15.அதை விதிவிலக்காக வைத்துக் கொள்வோம் பணத்தைத் தேடி ஓடுவோம் பந்தங்களும் பாசங்களும் சொந்தங்களும் நட்புகளும் நாடிவரும். உங்களை தேடி வரும். மீண்டும் ஒரு பதிவுடன்