வாழ்க்கை♥️

_*நம்ம*_ _*வாழ்க்கையில் இவர்களை*_ _*எல்லாம் மறக்கவே*_ _*கூடாதுன்னு*_ _*சில பேரை மனசுல வச்சிருப்போம்.*_ _அவர்களை எல்லாம் இப்ப_ _நினைச்சுப் பாருங்க, அழகாய் அவங்களை மட்டும்_ _மறந்திருப்போம்._ _*யார் இல்லாம இருக்கவே*_ _*முடியாதுன்னு*_ _*நினைச்சிட்டு*_ _*இருந்தமோ,*_ _*அவர் இல்லாமல் தான்*_ _*கூடிய சீக்கிரம் இருக்கப்*_ _*போறோம்னு இந்த உலகம் காட்டும்,*_ _*அவர்களை இழக்கப் போறோம்னு காட்டும்.*_ _எப்பவுமே இங்க ஒரு_ _புதுப்பித்தல் தேவைப்படுகிறது,_ _ஃபோன் அப்டேட் மாதிரி_ _எல்லா மனிதர்களும்_ _ஒவ்வொரு_ _காலகட்டத்திலும்_ _ஒவ்வொரு_ _விதமாய்ப் புதிதை நோக்கி ஓடத் தொடங்குகின்றனர்._ _*அது ஒவ்வொரு நட்பாய்,*_ _*ஒவ்வொரு காதலாய்,*_ _*ஒவ்வொரு உறவாய்,*_ _*ஒவ்வொரு பழக்கமாய்*_ _*மாறி மாறி எதுவும் நிரந்தரமற்ற நிலையாய் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.*_ _எல்லாம் மாறக் கூடியதே,_ _எதுவும் நிரந்தரம் அல்ல,_ _அந்த சமயத்தில்_ _அந்த நேரத்தில்_ _இருப்பவை_ _எவையாவினும்_ _ஒரு விலகலோடு_ _ஒரு புரிதலோடு பழகினால் ஒரு இடைவெளி விட்டு நேசம் கொண்டால் பிரியும் போது வலி இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால் பிரிவின் வலி சாவை விடக் கொடியது.பகிர்வு

மரணம்

படித்ததில் பிடித்தது கட்டிய மனைவி சலிப்படைந்து எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். பெற்ற பிள்ளை சனியனே என்று சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். சொத்து சேர்த்த தகப்பனை தவிக்க விட்டு சொத்துக்கு மக்கள் அடித்துக் கொள்ளும் நிலை வருவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். இழுத்துக் கொண்டிருப்பதை பார்த்து நாளை போக வேண்டும் என்று கடவுளை மகள் வணங்குவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். மூன்று வேளை உணவில் ஒருவேளை உணவை கொடுத்து தின்னு தொலை சனியனே என்று சொல்லும் முன் மரணம் வந்து விட வேண்டும். உறவுகள் எல்லாம் கூடி அறியாமல் செய்த பாவத்தை எடுத்துரைத்து கைத்தட்டி சிரிப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். நோயில்லாத உடல் ஆரோக்கியமாக இருக்கும் நேரத்தில் மரணம் வந்துவிட வேண்டும். பெற்ற பிள்ளைகள், கட்டிய மனைவி எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். நீ எல்லாம் வாழ்ந்து என்ன பயன் என்று மனைவியும் மக்களும் மற்றவர்களும் சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.......