காலம் முடிவு!!!

*யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை. அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது.* *வாய் தவறி விழும் பேச்சுக்கள். கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது. யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.* *நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை. வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.* *மற்றவர் தவறைக் கவனித்துக்கொண்டே இருப்பவர்கள். தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.* *பணம் இருந்தால் நீங்கள் உயர்ந்தவர் நடித்தால் நீங்கள் நல்லவன். உண்மை பேசினால் பைத்தியக்காரன். அன்பு காட்டினால் ஏமாளி. எடுத்துச் சொன்னால் கோமாளி.* *இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து. அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறான்.* *நிலவை தூரத்தில் இருந்து ரசிப்பதை போல சில உறவுகளையும் தூரத்திலிருந்து ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். சில வலிகள் இல்லாமல் இருக்கும்.* *தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியன்று வாதாடுபவர்கள் மத்தியில் அமைதி மட்டும் உங்கள் ஆயுதமாக வைத்துக்கொள்ளுங்கள்.* *அவர்களுக்கு புரியவைக்க வரும் காலம் ஒன்று உள்ளது. சிந்தித்து செயல்படுங்கள். இதுவும் கடந்து போகும்.* *நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில். ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்று தரவே வருகின்றது.* *யாரும் உங்கள் கண்ணீரை பார்ப்பதில்லை. யாரும் உங்கள் கவலைகளை பார்ப்பதில்லை. யாரும் உங்கள் வலிகளை பார்ப்பதில்லை. ஆனால் எல்லோரும் உங்கள் தவறை மட்டும் பார்ப்பார்கள்.* *மனிதனும் வாழை மரமும் ஒன்று தான். தேவைப்படும் வரை வைத்திருப்பார்கள். தேவை முடிந்தவுடன் வெட்டி வீசி விடுவார்கள்.*