அழகு.......!

காணகாண திகட்டாத அழகு எது? உண்மையான அழகு எது?

 வானத்து சந்திரனை ஆயிரம் முறை பார்த்தாலும் மீண்டும், மீண்டும் பார்த்து ரசிக்க தோன்றும் அது தான் திகட்டாத அழகு.



முறம் போன்ற காதுகளை வீசி, கயிறு போன்ற வாலை அசைத்து கொண்டே குன்றென நிற்குமே யானை அதுவும் தனி அழகு தான்.

ஓயவே ஓயாத சமுத்திரம் ஒவ்வொரு நாளும் புதுப்புது அழகை காட்டி நிற்கும்.


மனித படைப்பில் கூ வென கூவி குபு குபு யென புதை தள்ளி தடதட என ஓடுமே ரயில் அதுவும் பார்க்க பார்க்க தெவிட்டாத அழகு தான்.

ஆனால் உண்மையான நிரந்தரமான அழகு எது தெரியுமா?


தானம் வழங்கும் கைகள்,
பெயோரை கண்டால் குனியும் தலை,
துக்கத்திலும் சோராத முகம்,
உண்மை மட்டுமே பேசும் நாவு,
நல்ல ஒழுக்கத்தில் இருந்து வழுவாத மனம்,
கெட்டதை கேட்காத காதுகள் இவைகள் தான் உண்மையான அழகு

ஏன் ?

சிங்கத்தில் அழகு..
ஆண் சிங்கம்!

யானைஇல் அழகு
ஆண் யானை!!

மயிலில் அழகு
ஆண் மயில்!!!

மனித இனத்தில் மட்டும் –
ஏன் பெண்கள் அழகு????.

தூக்கம்.......!



மனிதர்களுக்கு இன்றியமையாத ஒரு வேலை ஆனால் நம்மால் பெரிதாக கவனம் செலுத்தப்படாத ஒன்று. நல்ல தூக்கம் நம்மை உடலளவிலும்,மனதளவிலும் ஆரோக்கியமாகவும் புத்துணர்வோடும் இருக்க உதவுகின்றது.
நம்மில் பலர் நமது வேலைகளை காரணம் காட்டி தூக்கத்தை புறக்கணிப்பது உண்டு. தியாகமில்லாமல் எதுவுமில்லை என்று அதற்கு காரணம் சொல்வதும் உண்டு.ஆனால்
தூக்கமின்மையால் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் பல.
சரியான தூக்கம் இல்லையெனில்,

* நீங்கள் அதிகம் வாக்குவாதம் செய்பவர்களாக மாறுகின்றீர்கள்.
* நம் வேளைகளில் கவனம் செலுத்துவது சிரமாமாக அமையும்.
* களைப்பாக உணர்வீர்கள்.
* தலைவலி உண்டாகும்.
* மேலும் பொதுவாகவே நீங்கள் நோய்வாய் பட்டதை போல் உணர்வீர்கள்.

இது உங்களை நீங்கள் எந்த வேலைக்காக உங்கள் தூக்கத்தை தொலைத்தீர்களோ, அந்த வேலையில் சரியாக செயல்பட முடியாதவராக மாற்றிவிடும்.
இரவில் சரியான தூக்கம் உங்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல் உங்களை ஆரோக்கியமாகவும்,அழகாகவும் மாற்றுகின்றது என்று ஒரு ஆய்வு கூறுகின்றது.
இந்த ஆய்வினை சுவீடனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 18 முதல் 31 வயது நிரம்பிய 23 ஆண் மற்றும் பெண்களிடம் சோதித்தனர்.
இவர்களை முதலில் 8 மணி நேரம் தூங்க செய்து அவர்களை புகைப்படம் எடுத்தார்கள். பின்னர், அவர்களை இரவில் 5 மணி நேரம் தூங்க செய்து 31 மணி நேரம் விழித்திருக்கச் செய்தனர்.
ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் பங்கேற்பாளர்கள் படமெடுக்கப்பட்டனர்.
இந்த புகைப்படங்களை கலவை செய்து 65 நபர்களிடம் பங்கேற்பாளர்களுடைய தோற்றம், ஆரோக்கியம் மற்றும் களைப்பு ஆகியவை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இதில் நன்றாக தூங்காத புகைபடங்களுக்கு 19% அதிக களைப்பாகவும், 6% ஆரோக்கியமின்மையாகவும் 4% அழகிய தோற்றம் இல்லாமலும் இருப்பதாக கருத்து தெரிவிக்கப்பட்டது.

தூக்கம் என்பது விலை மலிவான சிறந்த அழகு சாதனம் என்று Karolinska Institute ஐ சேர்ந்த பேராசிரியர் John Axelsson தெரிவிக்கிறார்.மேற்கூறப்பட்ட ஆய்வினை நடத்தியது இவரே.
தூக்கமின்மை நாம் கண்களை நன்றாக திறக்காமல் செய்கின்றது. மேலும் முகத்தின் தசைகளை சோர்வடைய செய்கின்றது. படுக்கையின் போது நமது முகத்திர்க்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது.
மேலும் தூக்கத்தின் போது நமது உடல் அதிக (மனித வளர்ச்சி) ஹார்மோன்களை சுறக்கின்றது.
இந்த ஹார்மோன்கள் நமது உடலின் குறைபாடுகளை சரிச்செய்ய பெரிதும் உதவுகின்றது.
நல்ல உணவோடு சிறிது உடற்பயிர்ச்சியும் சரியான அளவு தூக்கமும் நம்மை மனதளவிலும்,உடலளவிலும் நமது வேலைகளுக்காக தயார் படுத்தும்.



http://www.thapalpetti.tk/

வாழ்க்கை.....



ஆரோக்கியம் / உடல் நலம்


1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும், இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. தியானம், யோகா மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. 2010விட இந்த வருடம் நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்..

தன்னம்பிக்கை / சுயமுன்னேற்றம்

10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.


சமூகம்

21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்..
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.

வாழ்க்கை

26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டேஇருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.