சிறுதானிய உணவில்

...............................…..…...…............அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது சிறுதானிய உணவில் புரதச்சத்து, நார்ச்சத்து அதிகமாக உள்ளது. கம்பு, சோளம், வரகு, சாமை, திணை, குதிரைவாலி, கேழ்வரகு போன்றவையே சிறுதானிய உணவுகள் ஆகும். இதனை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். இவை அதிக ஆற்றலை தரக்கூடியவை. 1.திணை: திணையில் அதிக அளவு ஸ்வீட் பலகாரம் செய்யலாம். அதாவது சர்க்கரை பொங்கல், உளுந்தங்களி, பாயாசம், அதிரசம், மைசூர்பாக் மற்றும் லட்டு ஆகியவற்றை செய்யலாம். இருப்பினும் திணையை உட்கொள்ளும் போது உடல் சூடு அதிகரிக்கும். திணை மாவுடன் தேனை கலந்து சாப்பிடும் போது கபம் நீங்கும், விரைவில் செரிமானமாகும். ......... . 2.சாமை: எல்லாவித சமையலுக்கும் உகந்த சிறுதானியமாக சாமை விளங்குகிறது. சாதம், இட்லி, தோசை மற்றும் கிச்சடி போன்ற உணவுகளை இவற்றில் செய்யலாம். அரிசியை காட்டிலும் 7 மடங்கு நார்சத்து கொண்டதால் மலச்சிக்கல் மற்றும் ரத்த சோகை உள்ளவர்களுக்கு சாமை சிறந்த தீர்வை தருகிறது....................... . 3.குதிரைவாலி: குதிரைவாலி சுவை மிகுந்தது. இவற்றில் இட்லி, இடியாப்பம் கொழுக்கட்டை போன்ற ஆவியில் வேக வைக்கும் உணவுகள் மிகவும் மிருதுவாக இருக்கும். அல்சர் மற்றும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். மேலும் வாய்வு பிரச்சினைகளை குணப்படுத்தும். குதிரைவாலி, உளுந்து சேர்த்து களியோ அல்லது கஞ்சியோ செய்து சாப்பிட இடுப்பு வலி மற்றும் வயிற்று கடுப்பு பிரச்சினை சரியாகும். ........... . 4.வரகு: உடலின் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் அனைத்து வகையான திண்பண்டங்களையும் செய்யலாம். அதுவும் பிரியாணி செய்வதற்கு ஏற்றது. பித்த உடம்புக்காரர்கள், சளித் தொல்லையுள்ளவர்கள், தோல் பிரச்சினை உள்ளவர்கள் வரகரிசியை மிகவும் குறைவாக சாப்பிட வேண்டும்......... 5.கேழ்வரகு: கேழ்வரகில் கஞ்சி, கூழ், களி, தோசை, அடை, லட்டு, அல்வா மற்றும் பக்கோடா என பலவகையான பலகாரங்கள் செய்யலாம். கேழ்வரகில் அதிகளவு கால்சியம் இருப்பதினால் மூட்டுவலி பிரச்சினைக்கு தீர்வாகிறது. கேழ்வரகு கூழானது மாதவிடாயின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. . 6.கம்பு கம்பு உடலுக்கு குளிர்ச்சி அளிக்க கூடிய சிறுதானிய உணவு. புரதம் மற்றும் கால்சியம் கம்பில் அதிகம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதே சமயம் சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் தோல்நோய் பிரச்சினை உள்ளவர்கள் கம்பை குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும். . 7.வெள்ளை சோளம்:. மக்காசோளம் தான் நம்மில் பெரும்பாலனவர்கள் சாப்பிட்டிருப்போம். ஆனால் வெள்ளை சோளம் பற்றி நம்மில் பலபேருக்கு தெரியாது.வெள்ளை சோளத்தில் இருக்கும் அதிகபடியான நார்சத்து இரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இதனால் இரத்தம் சுத்தமாகவும், கொழுப்பு இல்லாமல் ஆரோக்கியமாகவும் இருக்கும். எலும்புகள் பலப்படும் வெள்ளை சோளத்தில் இருக்கும் மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து எலும்புகளை வலுவடைய செய்கின்றது. வெள்ளை சோளம் வயது முதிர்வால் ஏற்படும் நாட்பட்ட மூட்டு வலி மற்றும் எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது. எலும்பு வலு பெறுவதுடன் தேய்மானம் சரிசெய்யப்படுகின்றது. சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் செள்ளை சோளத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல பலனை பெறலாம் Dr.அமிர்தசெல்வராஜன்,B.N.Y.S........ நெய்தல் யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை, நாகப்பட்டினம்.-7558189351

*50 வயதைக் கடந்து 60 நோக்கி

*50 வயதைக் கடந்து 60 நோக்கிச்
சென்று கொண்டிருக்கும் ஒருவரிடம் 'உங்களிடம் என்ன மாற்றங்களை உணர்கிறீர்கள் ?' என்று கேட்டேன்.* அவர் அனுப்பிய பதில் இதோ : *1) என் பெற்றோரை, என் உடன் பிறந்தவர்களை, என் மனைவியை, என் குழந்தைகளை, என் தோழர்களை நேசித்த பிறகு, இப்போது என்னை நேசிக்கத் துவங்கி உள்ளேன்.* *2) நான் 'உலக வரைபடம்' அல்ல என்று உணர்ந்து கொண்டுள்ளேன். இந்த உலகத்தை என் தோள்களில் சுமப்பதில்லை.* *3) காய்கறி விற்கும் தங்கச்சியிடம், பழம் விற்கும் தம்பியிடம் பேரம் பேசுவதை நிறுத்தி விட்டேன். பத்து ரூபாய் அதிகமாகக் கொடுத்து விட்டேனே என்று மண்டையை உடைத்துக் கொள்வதில்லை. அவர்கள் மகள்களின் படிப்புச் செலவுக்கு சேமிக்க இது உதவட்டுமே.* *4) உணவகங்களில் கூடுதலாக டிப்ஸ் தருகிறேன். அன்றாட வாழ்க்கையை நடத்த, என்னை விட அதிகமாகப் போராடும் சர்வர் முகம் மலரலாம்.* *5) 'எத்தனை தடவை இந்தக் கதையைச் சொல்லுவீங்க' என்று இப்போதெல்லாம் முதியவர்களிடம் சொல்வதில்லை. அவர்கள் இந்தக் கதைகளால், தமது பழைய நினைவுகளை அசை போடுகிறார்கள்; கடந்த காலத்திலிருந்து விடுபடுகிறார்கள்.* *6) சில நேரங்களில் பிறர் சொல்வது தவறு என்று தெரிந்தாலும், அவர்களைத் திருத்தாமலிருக்கக் கற்றுக் கொண்டேன்.* *எல்லோரையும் திருத்தும் பொறுப்பு என்னுடையது அல்ல.* *எல்லோரும் சரியாக இருக்க வேண்டும் என்பதை விட என் மன அமைதி எனக்கு முக்கியம்.* *7) பெருந்தன்மையுடன், தாராளமாகப் பாராட்டுகிறேன். இது, பாராட்டுப் பெறுபவருக்கு மட்டுமல்ல, என்னுடைய மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. சின்ன ஆலோசனை - ஒருவர் உங்களைப் பாராட்டும்போது, ஒருபோதும் மறுக்காதீர்கள், நன்றி சொல்லி முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள்* *8) என்னுடைய ஆடையில் எண்ணெய்க் கறை பட்டு விட்டால் அலட்டிக் கொள்வதில்லை. தோற்றத்தை விட ஆளுமைதான் உரக்கப் பேசுகிறது.* *9) என்னுடைய மதிப்பை உணராதவர்களிடம் இருந்து விலகிப் போகிறேன். அவர்கள் என் மதிப்பை அறியாமல் இருக்கலாம், நான் அறிவேன்.* *10) யாராவது பந்தயத்தில் என்னை முந்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, மோசமாகச் செயல் பட்டாலும் நான் நிதானமாகவே இருக்கிறேன். நான் பந்தயத்தில் இல்லை. என் வாழ்க்கையை வாழ்கிறேன்.* *11) என் உணர்வுகளை எண்ணி சங்கடப்படாமல் இருக்கக் கற்றுக் கொள்கிறேன். என்னை மனுசனாக்குபவை என் உணர்வுகள் மட்டும்தான்.* *12) ஒரு உறவை முறித்துக் கொள்வதை விட, ஈகோ-வை விட்டு விடுவது நல்லது என்று அறிந்து கொண்டுள்ளேன். என் ஈகோ என்னைத் தனிமைப்படுத்தும்; உறவுகளால் நான் தனிமைப்பட்டுப் போக மாட்டேன்.* *13) ஒவ்வொரு நாளையும், இறுதி நாளைப் போல வாழக் கற்றுக் கொண்டுள்ளேன். இது கடைசி நாளாகவும் இருக்கலாம்.* *14) என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பவற்றைச் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய சந்தோசத்திற்கு நான்தான் பொறுப்பு. மகிழ்ச்சி என்பது ஒரு தேர்வு. அதைத் தேர்ந்தெடுத்து எந்த நேரத்திலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.* - *இப்பதிவில் சொன்ன பதில் எல்லா வயதினருக்கும் பொருத்தமானது என்று நினைக்கிறேன், இதைச் செயல்படுத்த 50, 60, 70 வயது வரை காத்திருக்க வேண்டுமா என்ன ? சிந்திப்போம்....