அழகு எல்லாம் 45சில் பளிச்சிடும்...

45 வயதிற்கு பிறகு நமக்கென்ன வேண்டி கிடக்கிறது என எதையும் புறந்தள்ளாதீர்கள்... அதன் பின்பு தான் வாழ்வே தொடங்குகிறது... பதினெட்டில் வராத அழகு எல்லாம் 45சில் பளிச்சிடும்... இளைத்து விட்டேன், பருமனாகி விட்டேன், தோல் தடிமனாகி விட்டது, வயிற்றுப் பகுதி பெருத்து விட்டது, குழந்தைகள் தான் இனி, நமக்கெதற்கு இதெல்லாம், இனி என்ன என்ற உப்புக்கு சப்பில்லாத கேள்வி யோசனைகளை தூக்கி எறியுங்கள்... இப்போது நீங்கள் இருக்கும் நிலை தான் அழகு... அது எந்த நிலையில் இருந்தாலும் அழகென்பது “தான்” முடிவு செய்வது... அடுத்தவர் பார்த்து முடிவெடுப்பது அல்ல... தன்னை அழகாக்கிக்கொள்ள தன்னை தன்னம்பிக்கை யாக்க தன்னை உயிர்ப்பாக காட்டிக்கொள்ள என்ன தயக்கம் உங்களுக்கு... எவருக்கும் வயது ஏறாது குறைந்து கொண்டு தான் போகும்... வயது ஏறிவிட்டதென்ன எதையும் ஒதுக்காதீர்கள்... எனக்கு இதில் உடன்பாடில்லை என்றால் விட்டுவிடுங்கள்... அடுத்தவர்கள் என்ன சொல்ல போகிறார்கள் என்று நினைத்தால் இன்றே அதற்குண்டான வேலைகளை தொடங்குங்கள்... வாழ்க்கைக்கும் வயதுக்கும் சம்பந்தமேயில்லை... இதுவும் கடந்து போகும்... வயதல்ல வாழ்க்கை...!...!...!