அதிகமாகத் தெரிந்தாலும் ஆபத்து

இடது பக்கமாக படுங்க என்றார் ஒருவர். 🤔 அப்டியா ன்னுட்டு படுத்தேன்.👍 👉 வலது பக்கமாக படு ன்னார் இன்னொருத்தர் 🤔 ஓகே சொல்லி படுத்தேன்.👍 👉மறந்தும் குப்புற படுத்திராதீங்க ..படுத்தி விட்டுரும் பயமுறுத்தினார் ஒருத்தர்... வா பிளந்து குறட்டை விட மல்லாக்க படுக்காதீங்க என்றார் இன்னொருவர்..🤔 👉 படுக்கவிடாமல் படுத்தாறங்களே...😰 👉 காலையில் நடக்க சொன்னார்கள்..🤔 நடந்தேன்.🚶 நேராக நடக்க கூடாது, எட்டு போட்டுத் தான் நடக்க வேண்டும் என்று ஒருத்தர் சொல்ல, இன்னொருவர் ஒம்போது மாதிரி நளினமா நடங்க என்றார்🤔.. 👉 காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தேன்.🤔 போதாது போதாது.. அதனுடன் எலுமிச்சையும் பிழிந்து குடிக்க வேண்டும் என்று சொன்னார்கள் ..🤔 கேன்சர் உறுதியாக வராதாம்.!!🤔 👉 உருளைக்கிழங்கு அளவோடுதான் ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். வாயு என்றார்..🤔 வாயில் படுவதை மறந்தேன்...🤔 வாயு பகவான் நிக்காம ராகம் போட ஆரம்பிச்சதே மிச்சம்.. 👉 இனிப்பை தொட்டுவிடாதீர்கள்.. அவ்வளவுதான்.. Sugar ஏறிவிடும் என்றார்..🤔 சரி என்று நிறுத்தினேன்.🙏 👉 நடக்கும் போது நண்பர் சொன்னார்.. low sugar ஆகிவிடும், பாத்துக்குங்க.. அப்பப்ப கொஞ்சம் sugar சாப்பிடுங்க என்றார்..🤔 👉 இப்படித்தான் குளிக்க வேண்டும் என்றார்...🤔 ஐயோ, தப்பு, அப்படி குளிங்க என்றார்...🤔 தந்திரமா குளிக்கனும் என்றார்.👍நல்லவேளை தலை கீழா நின்னு குளி என யாரும் சொல்லலை... குளிக்கக்கூட சுதந்திரம் இல்லை...😭 👉 காபி, டீ வேண்டாம்,👎 👉 அரிசி கஞ்சி வேண்டாம்,👎 👉 பால் வேண்டாம்,👎 👉 ஐஸ் வாட்டர் வேண்டாம்,👎 👉 பாட்டில் ஜூஸ் வேண்டாம் என்றார்...👎 👉 சரி என்று பழகினேன்..👍 👉 ஒன்று புரிந்தது..🤔👌 👉 ஒன்றும் தெரியாமல் இருந்தாலும் ஆபத்து,😳 👉 அதிகமாகத் தெரிந்தாலும் ஆபத்து..😳 👉 "Over qualification is disqualification" என்று எங்கோ படித்த நினைவு..🤔👌 👉 Too much information will make you to suffer from distinguishing between useful & useless information.👍 👉 நல்லா போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில், உடம்பை பாத்துக்கங்க என்று சொல்லி உடம்பையே பார்த்துட்டு இருந்ததன் விளைவு, மனசு வம்பா போச்சு...😰 👉 எல்லோர் பேச்சும் கேட்பதும் ஆபத்து.. ஒருத்தர் பேச்சும் கேட்காமல் இருந்தாலும் ஆபத்து..🤔 👉 வாழ்க்கை, வாழை இலையில் விழுந்த ரசம் போல.. எந்தப் பக்கம் ஓடுது என்றே தெரியாமல் ஓடுகிறது. வாழ்க்கை ரசத்தை குடிக்க முடியலையே?🤔 👉 அதிக விஷயம், விஷம்.😳 👉 இயல்பா இருங்க. ஒண்ணும் குடி முழுகிப் போய்விடாது.👍🙏 👉 என்ன நான் சொல்றது.?🤔

நமக்கு இதுவே தேவை!!

மண்ணை உழுபவருக்கு பெண்ணைக் கொடு.. மரத்தை நடுபவருக்கு விருதைக் கொடு.. பொது வேலையில் ஈடுபட சொல்லிக் கொடு.. பொது சேவை செய்பவருக்கு புகழ் கொடு.. தண்ணீரை சேமிக்க சொல்லிக் கொடு.. தாமதித்தால் பாலைவனமாகும் என்பதை சொல்லி விடு.. தாய் தந்தைக்கு நல்லதைச் செய்.. அவர்கள் தளர்ந்த பின் நீ தளராமல் செய்.. உனக்காக ஒர் மரம் வை.. உன் குடும்பத்திற்காக ஒரு பத்து மரம் வை.. இதை சொந்தங்களையும் செய்யச் சொல்லி வை.. பிள்ளை பிறந்தாலும் மரம் வை.. பேர் வைத்தாலும் மரம் வை.. மகள் பெரியவள் ஆனாலும் மரம் வை.. நாட்டுக்காக நாளும் நூறு மரம் வை.. இச்செயலை நண்பர்களையும் செய்ய வை.. இதை ஊராரிடமும் சொல்லி வை.. பசுமையைப் பற்றி சொல்லிக் கொடு.. அதை உருவாக்க இப்பவே முயற்சியை எடு.. பணம்..வாழத் தேவை.. காற்று..வாழவே தேவை. மரம் அதற்குத் தேவை.. நமக்கு இதுவே தேவை.. மறந்தால் நாம் தான் பேதை.. குளத்தை வெட்டி வை.. மரத்தை நட்டு வை.. நிலத்தை உழுது வை.. தண்ணீரை சேமித்து வை.. பல்லுயிரும் செழிக்க பசுமை வேண்டும் என்று சொல்லி வை.. பூமித்தாயை குளிர்விக்க நாம் விதைப்போம் ஒரு செடியை.. நம்மை குளிர்விக்க அந்த செடி மரமாக வளர்ந்து நமக்கு ஆயுளைத் தரும்!!!

தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்

தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்......* 😁😁😁😁😁😁😁😁 *கரியையும் சாம்பல்தூளையும் கொடுத்து* _பல் விளக்கச்சொன்னபோது_ , *பட்டிக்காடு* என *இளித்த பற்கள்* *இன்று வேரற்று போனபோது*... *ஓடி நின்றேன்* *சர்வோதயா காதிகிராப்ட்*.. *பல்பொடி வாங்க*... தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்... *வெந்தயமும் சிகைக்காயும்* *வடிதண்ணீரில் அரைத்து* *தேய்த்துக்குளி என்றபோது* , *பித்துக்குளிகள்* என *எள்ளி நகையாடி*... *சிக் ஷாம்புவை* *சிக்கென பிடித்தும்* *இன்று வெண் கேசம்* *வந்தபின்பு* *ஓடுகின்றேன்* _சீகைக்காய் வாங்க_...... தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்... *பாசிப்பயறோ* *கடலை மாவோ* *அரைத்துக்குளி* என்ற போது , *லிரில்* , *லக்ஸ் சினிமா* *நட்சத்திரங்களின்* *அழகு சோப்* என *கைகாட்டிய* *கட்டிகளை* *எல்லாம் போட்டு*,, *தோள் சுருங்கி* *வயோதிகம் தெரிந்த பின்பு*.. *ஓடுகின்றேன் பயத்த மாவு அரைக்க*.... தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்..... *இருமலோ தும்மலோ* *வந்தபோது*... *துளசி, தூதுவளை, சுக்கு, மிளகு போட்டு* *கசாயம் தந்தபோது* , *முகத்தைச் சுளித்து* *காஃப் சிரப் குடித்து* *தைராய்டு வரை சென்ற பின்பு* , *ஓடுகின்றேன் துளசி , தூதுவளைச்செடி வளர்க்க*..... தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்..... *வயிற்று வலி என்றபோது* *வெறும் வயிற்றில்* *வெந்தயக்களியோ*,, *கற்றாழைச்சாறோ* *கொண்டு வந்து தந்தபோது*.. *சீறித் தூக்கி எறிந்து* , *ப்ருஃபென்னும்* *பெயின்கில்லரும்* *போட்டு* *கருப்பை பழுதடைந்த பின்பு* , _ஓடுகின்றேன் கற்றாழை வளர்க்க_ ...... தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்..... *நல்லெண்ணெய் செக்கில் ஆட்டி* *மணமாய் தந்தபோது* , *சன்ஃபிளவர் ஆயில்* *பார்* *முகம் காட்டும் தூய்மை* எனக்கூறி *முகத்தில் அறைய,* *பதிலுரைத்துவிட்டு*, *இன்று உடல் நோய்க்கு* *ஓடுகின்றேன் செக்கு நோக்கி* ..... தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்.... *மண்பானை சமையல்* *மண்பானை குளிர் நீரை* எல்லாம் மாற்றி விட்டு , *ஆர்வோ வாட்டர் என* *புழு பூச்சி கூட வாழத்தகுதியற்ற* *நீரைக்குடித்து குடித்து* *சவமான பின்பு ஓடுகின்றேன்* *மண்பானை வாங்க*..... தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்...... *படித்த தலைமுறை எனும் நாகரீகத்தில் திளைத்து*.. *குருகுலக்கல்வியை* *கோடிக்கணக்கான ரூபாய்* *கல்வியாக்கி* , *கொல்லைப்புற துளசியின்* *வைத்தியம் மறந்து* , *மாடிகளில் குளீருட்டப்பட்ட அறைக்கு* *இலட்ச இலட்சமாய்க்கொட்டி* *நடைப்பிணமாக வாழும்* *வாழ்வில் எங்கே சுதந்திரம்* *ஏது சுகாதாரம்* என்று அலைகிறேன்..... தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள் ....... *மூத்தோர் சொல்லு *முது நெல்லிக்காயும்* *முன்னே கசக்கும்* , *பின்னே இனிக்கும்*

முன்னோர்கள் சொன்ன பழமொழி

🌝 தவளை கத்தினால் மழை. 🌝 அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாராம். 🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை. 🌝 எறும்பு ஏறில் பெரும் புயல். 🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. 🌝 தை மழை நெய் மழை. 🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும். 🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு. 🌝 புற்று கண்டு கிணறு வெட்டு. 🌝 வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய். 🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு. 🌝 களர் கெட பிரண்டையைப் புதை. 🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு. 🌝 நன்னிலம் கொழுஞ்சி நடுநிலம் கரந்தை கடை நிலம் எருக்கு. 🌝 நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய். 🌝 ஆடிப்பட்டம் பயிர் செய். 🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும். 🌝 மழையடி புஞ்சை மதகடி நஞ்சை. 🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை. 🌝 உழவில்லாத நிலமும் மிளகில்லாத கறியும் வழ வழ. 🌝 அகல உழவதை விட ஆழ உழுவது மேல் . 🌝 புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு. 🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை. 🌝 ஆடு பயிர் காட்டும் ஆவாரை கதிர் கட்டும். 🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் . 🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை. 🌝 நிலத்தில் எடுத்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும். 🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும். 🌝 தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம். 🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை. 🌝 சொத்தைப் போல் விதையை பேண வேண்டும். 🌝 விதை பாதி வேலை பாதி. 🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை. 🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு. 🌝 கோப்பு தப்பினால் குப்பையும் பயிராகாது. 🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம். 🌝 கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும். அடர விதைத்தால் போர் உயரும். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும். #உழவே_தலை. தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம். நீர் இன்றி அமையாது உலகு. "என் மக்கள்" கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம். கடைசி மரமும் வெட்டி உண்டு கடைசி மரமும் விஷம் ஏறிக் கடைசி மீனும் பிடி பட அப்போதுதான் உறைக்கும். இனி பணத்தைச் சாப்பிட முடியாது என்பது!! ஆறும் குளமும் மாசு அடைந்தால் சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!. நீர் நிலைகளை காப்போம். இணைவோம். நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை. மேழிச் செல்வம் கோழை படாது... #முன்னோர்கள் சொன்ன பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள் உள்ளது.. அனைவரும் அறிந்துகொள்ள #பகிருங்கள்... 😍😍👌👌👍👇