பில்லாவை முந்தும் மங்காத்தா-அஜீத்தை கண்டு உதறும் விஜய்

அஜீத் நடித்த மங்காத்தா செம எதிர்பார்ப்பை உலகம் முழுக்க உண்டாக்கியிருக்கிறது..அஜீத்,விஜய்,சூர்யா போன்றோரின் எந்த படத்துக்கும் இவ்வளவு எதிர்பார்ப்பு இருந்ததா என்றால்,பில்லாவுக்கு இந்த எதிர்பார்ப்பு ஜுரம் இருந்தது என்று சொல்லலாம்..அமெரிக்காவில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் படமாகிய மங்காத்தா


தமிழ்கத்தில் சன்பிகசர்ஸ்,ராடன் மீடியா,கிளவுட் நைன்,உதயநிதி ஸ்டாலின்,சூர்யாவின் ஆஸ்தான தயாரிப்பாளர் என பலரிடம் கைமாறி படம் வெளியாகும் முன்பே மங்காத்தா ஆட ஆரம்பித்துவிட்டது.சன் பிக்சர்ஸ் அரை மணிநேரத்துக்கு ஒருமுறை சுட்டி டிவி முதல் விளம்பரத்தை போட்டு தாக்குகிறது...

விஜய் வேலாயுதம் படத்துக்காக பாடல்வெளியீட்டுக்கு மதுரை போகிறார்.ரசிகர்களுடன் கொண்டாடுகிறார் என்றெல்லாம் செய்தி வந்தாலும் அந்தளவு எதிர்பார்ப்பு இருக்கிறதா என்றால் குறைவுதான்.அன்னா ஹசாரேவை அவர் சந்தித்தது கூட பட விளம்பரத்துக்குதான்.மங்காத்தாவின் ஓவர் விளம்பரத்தை விட்டுவிட்டு மீடியாக்கள் தன் பக்கம் திரும்பத்தான் என்ற பேச்சும் இருக்கிறது.அவர் சென்னையில் கூட்டத்தை கூட்டி உண்ணாவிரதம் இருந்திருந்தால் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு இன்னும் அதிகரித்திருக்கும் என சொல்பவர்களும் இருக்கிறார்கள்...

வேலாயுதம்,மங்காத்தா இரண்டும் கிட்டத்தட்ட பெரிய இடைவெளி இல்லாமல் வரப்போகும் சூழலில்,மங்காத்தாவுக்கான எதிர்பார்ப்பு அஜீத் நடித்த பில்லாவையே தூக்கி சாப்பிடும் போலிருக்கிறது.வசூலும் நிச்சயம் சாதனை படைக்கும்.அஜீத் படங்களில் பில்லாவுக்கு அடுத்த இடம் மட்டுமல்ல..50 வது படம் அவர் படங்களில் அதிக வசூல் படம் என்ற ரெக்கார்ட் ப்ரேக்கை தரும்.

உங்கள் விதியை உங்களாலேயே மாற்ற முடியும்

உங்கள் விதியை உங்களாலேயே மாற்ற முடியும் என்று சொல்வார் ஷீர்டி சாய்பாபா.

அது எப்படி?

விடையையும் பாபாவே சொல்லியிருக்கிறார்.

1. தினமும் கடவுளைப் பிரார்த்தனை செய்யுங்கள்.

2. எல்லாம் கடவுள் அருளால் நடக்கிறது என்பதை முழுமையாக நம்புங்கள். தீபம், ஊதுபத்தி, மெழுகுவத்தி, சாம்பிராணி ஏதாவது ஏற்றி இறைவனை வணங்குங்கள்.

3. உங்களுக்குத் தெரிந்த மந்திரங்கள், ஸ்லோகங்களைச் சொல்லுங்கள்.

4. உங்கள் வருமானத்தை நியாயமான வழியில் பெறுங்கள். முறையில்லாத வழிகளில் பணத்தை சம்பாதிக்காதீர்கள்.

5. எண்ணம், சொல், செயல்களில் உண்மையைக் கடைப்பிடியுங்கள்.

6. மற்றவர்களுக்கு எந்த பிரதிபலனும் இல்லாமல் உதவி செய்யுங்கள்.

7. பசி என்று வருபவர்களுக்கும், ஏழைகளுக்கும் உங்களாலான உதவியைச் செய்யுங்கள்.

8. வாழ்க்கை நடத்த என்ன தேவையோ அது மட்டும் இருந்தால் போதும், குறைந்த தேவைகளோடு எளிமையாக இருங்கள்.

9. தியாகம், வைராக்கியம் இரண்டையும் மறக்காமல் செயல்படுத்துங்கள்.

10. உங்களின் ஒவ்வொரு விநாடியும் கடவுளால் கண்காணிக்கப்படுகிறது என்பதையும், அவரது ஆசியுடன்தான் வாழ்கிறீர்கள் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

ஆமாம். பாபா சொன்ன இந்தப் பத்து விதிகளையும் யார் கடைப்பிடிக்கிறார்களோ அவர்களுக்கு வாழ்வில் எந்தப் பிரச்னையும் வராது. விதியையே மாற்றியமைக்கும் வல்லமை அவர்களுக்கு உண்டு என்று சொல்லி ஆசி வழங்குகிறார் பாபா.

என்ன, பாபாவுடன் அவரது விதிகளையும் பின் பற்றுவோமா?

மராட்டியில் புலமை பெற்ற அறிஞர் தாஸ்கணு. ஏராளமான நூல்களையும் எழுதியிருக்கிறார். பாபாவின் சிறந்த பக்தரான தாஸ்கணு, ஈசோபனிஷத்துக்கு மராட்டிய மொழியில் உரை எழுத ஆரம்பித்த நேரம் அது.

உபநிஷதங்கள், ஆழ்ந்த பொருள் தரும் மந்திர நூல்கள். வேதங்கள், மந்திரங்கள், சடங்குகள் ஆகியன பற்றி முழுமையாகச் சொல்லும் அவற்றிற்கு உரை எழுதுவது அத்தனை சுலபமல்ல. அதிகமான புலமையும், கடினமான பயிற்சியும் இருந்தால் தான் அவற்றைப் புரிந்து கொள்ளவே முடியும். அதுவும் ஈசோ உபநிஷதம் என்பது, உபநிடதங்களின் தாய் போன்றது. அதாவது மற்ற உபநிஷதங்களில் எல்லாம் ஈசோ உபநிஷத்தில் கூறப்பட்டுள்ள விஜயங்களின் விளக்கம்தான் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

தீமை செய்யத் தூண்டும் மயக்கங்களுக்கும், கவலைகளுக்கும் இடையில் கலக்கமடையாத கர்ம யோகம் என்னும் போதனைத் தொகுப்புக்கு முன்னோடிதான் ஈசோ உபநிஷதம்.

அத்தனை சிறப்பு வாய்ந்த ஈசோ உபநிஷதத்தினை அறிஞர் தாம்கணு, மராத்திய யாப்பு வகையில் மொழி பெயர்த்தார். ஆனால் அந்த உரை அவருக்கு திருப்தியாக வரவில்லை. எத்தனை முறை எழுதிப் பார்த்தும் சரியாக வரவில்லை.

சில அறிஞர்களிடம் கலந்து பேசினார். அவர்களது அபிப்பிராயங்களைக் கேட்டு, மாறுதல் செய்தும் பார்த்தார். ம்ஹூம். அதுவும் நன்றாக வரவில்லை.

என்ன செய்வது? எப்படி செய்வது?

யோசித்தார் தாஸ்கணு.

ஈசோ உபநிஷதம் என்பது வேதங்களின் சாராம்சம். பிறப்பு, இறப்பு என்னும் கட்டுகளை அறுத்தெறியக்கூடிய ஆயுதம். எனவே அதை, தன்னைப் போன்ற ஒரு வெறும் புலவரால் மட்டும் மொழி பெயர்க்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார்.

வேறு எப்படி?

பற்றுதல் எதுவும் இல்லாத ஒரு மகா ஞானி மனது வைத்தால் மட்டுமே தன்னால் உரை எழுத முடியும் என்று புரிந்தது அவருக்கு.

அப்படிப்பட்டவர் ஒரே ஒருவர்தானே இருக்கிறார்? நம் சாயி பாபா தானே அவர்.

அடுத்த ரயிலிலேயே ஷீர்டிக்குக் கிளம்பினார் தாஸ்கணு.

பாபாவின் பாதங்களில் விழுந்தார். “நான் அறிஞன்தான். நிறைய படித்தவன்தான். ஆனால் என்னால் உரை எழுத முடியவில்லை. அந்த ஈசோ உபநிஷதத்தின் சரியான பொருளைப் புரிந்து கொள்ளக் கூட என்னால் இயலவில்லை. அதில் எனக்கு நிறைய சந்தேகங்கள் எழுகின்றன. ஐயங்களை எல்லாம் போக்கி எனக்க சரியான தீர்வை தாங்கள்தான் தர வேண்டும்’ என்று வேண்டினார்.

அதற்கு பாபா என்ன சொன்னார் தெரியுமா?

பாபா புன்னகைத்தார். “அந்த சந்தேகங்களைச் சொல்ல நான் எதற்கு? நீ உன் ஊருக்குத் திரும்பிச் செல்லும் வழியில் மும்பையின் புறநகர்ப் பகுதியில் ஒரு பக்தர் வீட்டு வேலைக்காரச் சிறுமியே உன் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பாள்’ என்று பதில் சொன்னார் பாபா.

கூடியிருந்தவர்கள் மெல்லச் சிரித்தார்கள். “பாபா வேடிக்கை செய்கிறாரா என்ன? எல்லாம் படித்த தனக்கே ஈசோ உபநிஷத் புரியவில்லை என்று தாஸ்கணு சொல்லும்போது, படிப்பறிவில்லாத யாரோ வேலைக்காரி பதில் சொல்வாள் என்கிறாரே?’ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

ஆனால் பக்தர் தாஸ்கணு அப்படி நினைக்கவே இல்லை. பாபா என்ன சொன்னாலும் அது சரியாகத்தான் இருக்கும். பாபாவின் சொல், ஆண்டவன் கட்டளை என்று முழுமையாக நம்பிய அவர் ஷீர்டியை விட்டு கிளம்பினார்.

வீட்டுக்குச் செல்லும் முன்பு, மும்பையின் கடைப் பகுதியான விலேபார்லேயில் உள்ள நண்பர் சாஹேத் தீட்சித்தைக் காணச் சென்றார். அன்றைக்கு அவர் வீட்டிலேயே தங்கினார்.

பொழுது விடிந்தது. எழுந்து குளித்து முடித்து விட்டு, கண் மூடி பாபாவை நினைத்துப் பிரார்த்தனை செய்து முடித்தார்.

அப்போதுதான் அந்த வீட்டில் வேலைக்காரச் சிறுமி வாசலில் அமர்ந்து பாத்திரங்களைக் கழுவியபடி இனிமையாகப் பாடிக் கொண்டிருப்பது அவர் காதில் விழுந்தது.

உற்று கவனித்தார்.

“சிவப்பு கலர் பாவாடை எத்தனை அழகு!

அதன் பார்டர் கூட எத்தனை அருமை!

எம்ப்ராய்டரி கூட எத்தனை அற்புதம்!’

இப்படித்தான் தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தாள் அந்த வேலைக்காரச் சிறுமி. பாவாடை பற்றிப் பாடிய அவள் அணிந்திருந்த பாவாடையோ கிழிந்து போய் அழுக்கடைந்து காணப்பட்டது. அவளது முகமோ ஏக்கத்துடனும் வருத்தத்துடனும் இருந்தது.

நெகிழ்ந்து போய்விட்டார் தாஸ்கணு. உடனே அவளுக்கு ஒரு புத்தாடை வாங்கிக் கொடுத்தார். மகிழ்ந்து போய்விட்டாள் அந்தச் சிறுமி. உடனே அதை அணிந்து கொண்டாள் சுற்றிச் சுற்றி ஓடினாள். நடனமாடினாள். உற்சாகம் பொங்கி வழிந்தது அவளுக்குள்.

ஆனால் மறுநாள், வழக்கம் போல் பழைய கிழிந்த உடையிலேயே வலம் வந்தாள். அவள் வேலைக்காரச் சிறுமி. அப்படித்தான் இருக்க வேண்டிய நிலை.

ஆனால் இதுநாள் வரை அவள் முகத்தில் இருந்த ஒரு சோகம் இப்போது காணவில்லை. அவளுக்குச் சொந்தமாக ஒரு புத்தாடை இருப்பதால், அவள் அன்று முதல் மகிழ்வுடனேயே காணப்பட்டாள்.

அதைக் கண்ட தாஸ்கணு துள்ளிக் குதித்தார். இதுநாள்வரை அவருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வந்த ஈசோ உபநிஷதப் பாடலுக்கு அவருக்கு விளக்கம் கிடைத்துவிட்டது.

ஆமாம். நமது இன்ப துன்ப உணர்ச்சிகள் எல்லாம் நம் மனத்தில் பாங்கைப் பொருத்தே அமைகின்றன. கடவுள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். கடவுளால் நமக்கு கிடைக்கும் எல்லாவற்றையும் மகிழ்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லாமே கடவுளின் பரிசு தான் என்று நினைப்பவனுக்குக் கவலை என்பதே தோன்றாது.

இதுதான் ஈசோ உபநிஷத்தின் அடிப்படைத் தத்துவம். இதுநாள் வரை அறிஞர் தாஸ்கணுவைக் குழப்பி ஆட்டம் காட்டிய விளக்கம் ஓர் ஏழைச் சிறுமியைக் கண்டதால் சுலபமாகத் தீர்ந்தது.

எல்லாம் பாபாவின் அருள். பாபாவின் கருணை. பாபாவின் ஆசி.

சரி, இந்த விளக்கத்தை பாபாவே நேரடியாகச் சொல்லியிருக்கலாமே, எதற்காக ஓர் ஏழைச் சிறுமியின் மூலம் இதைச் சொல்ல வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கலாம்.

அந்த அபலைச் சிறுமிக்கு ஒரு புத்தாடை தர வேண்டும் என்று கடவுள் நினைத்திருக்கிறார். அதை இப்படி நிறைவேற்றியிருக்கிறார். அவ்வளவுதான்.

தாஸ்கணு, பாபாவை நம்பினார். கொஞ்சம் கூடச் சந்தேகம் கொள்ளவில்லை. எங்கோ பம்பாய் அருகே ஒரு வேலைக்காரச் சிறுமி மூலம் விடை கிடைக்குமா என்றெல்லாம் அவர் சந்தேகப்படவேயில்லை.

அவர் நினைத்தது நடந்தது.

நடை - நோய்க்கு தடை...



"யாதும் ஊரே, யாவரும் கேளிர்!" என்ற கணியன் பூங்குன்றன் வரிகளை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இதற்கு அடுத்த வரி, "நன்றும் தீதும் பிறர்தரவாரா!" இதன்பொருள் "நன்மையும் தீமையும் அடுத்தவர்களால் வராது. நமக்கு நாமே காரணம்! நமது உடலுக்கு வரும் நோய்க்குக் காரணம் நாம்தான். சரிவிகித உணவுமுறை, தேவையான அளவு தண்ணீர், முறையான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, உண்ணாநோன்பு ஆகிய ஆரோக்கிய வழிமுறைகளைப் பின்பற்றினால் நோயின்றி நலமுடன் வாழ முடியும்.

மேற்கண்டவற்றில் உடற்பயிற்சி பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். தற்போதைய விஞ்ஞான யுகத்தில், பரபரப்பான வாழ்க்கை முறையில் எல்லா வயதினரும் முறையான உடற்பயிற்சி செய்வது கடினம்.

இதற்கு சரியான மாற்று வழி என்ன?

நடைப்பயிற்சி ஒன்றுதான்! ஆண், பெண், சிறுவர் சிறுமியர் வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது நடைப்பயிற்சிதான்!

நடைப்பயிற்சியில் சாதாரண நடை, வேக நடை, நடை ஓட்டம், ஓட்டம் இப்படி பல வகை உண்டு. அவரவர் வயது, உடல்நிலை, சூழ்நிலை, மனநிலைக்கேற்ப நடைப்பயிற்சியில் ஈடுபடலாம்!

நடைப் பயிற்சிக்கு முன்:

* முதல்நாள் இரவு உணவை நீங்கள் தூங்கப்போவதற்கு மூன்று மணி நேரம் முன்னதாகவே உண்ண வேண்டும்.
* தூங்குவதற்கு முன்பாக பல் துலக்க வேண்டும்.
* இரவு 10 மணிக்குப் பிறகு அவசியம் தூங்கிவிட வேண்டும்.
* காலை 4 மணி முதல் 5 மணிக்குள்ளாக படுக்கையிலிருந்து எழுந்துவிடவேண்டும்.
* எழுந்தவுடன் வாய் கொப்பளித்துவிட்டு 6 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* மலச்சிக்கல் இல்லாமல் காலைக்கடனை முடிக்க வேண்டும்.
* மலச்சிக்கல் இருப்பின் "இயற்கை எனிமா" கருவி மூலம் குடலைக் கழுவ வேண்டும்.
* நடைப்பயிற்சிக்கு முன் எதுவும் சாப்பிடக்கூடாது.

நடைப்பயிற்சி:

* போக்குவரத்து இல்லாத, சுற்றுப்புறக் காற்று மாசுபடாத நிலையில் உள்ள இடத்தில் நடக்க வேண்டும்.
* வயல் வெளிகளில் நடக்கலாம்.
* வீட்டு மொட்டை மாடி, வீட்டுத்தாழ்வாரம் ஆகிய இடங்களில் நடக்கலாம்.
* வீட்டுக்கு வெளியில் போக முடியாத சூழ்நிலையில் உள்ள பெண்கள் 10 x 10 உள்ள தாழ்வாரம், கூடம், அறையில் "8" என்ற எண்களை வரைந்து அதன் மேலேயே நடந்து பழகலாம்.
* கடற்கரை ஓரம், ஏரிக்கரை, குளக்கரை, கண்மாய்க்கரை ஆகிய இடங்களில் நடக்கலாம்.
* நடக்கும்போது தலைநிமிர்ந்து, நெஞ்சு நிமிர்த்தி, இரு கைகளையும் நன்றாக வீசி பட்டாள நடை நடக்க வேண்டும்.
* உடல் முழுதும், வியர்த்துக் கொட்டினாலும் கவலைப்படாமல் நடக்கவேண்டும்.
* தினமும் காலை குறைந்தது மூன்று கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். தூரத்தை விட நேரம் தான் முக்கியம்.
* மாலையில் உடலில் வெய்யில்படுமாறு நடந்தால் மிக நல்லது!

நடப்பதால் என்ன நன்மை?

* உச்சி முதல் உள்ளங்கால் வரை இரத்த ஓட்டம் ஒரே சீராக இயங்கும்.
* உடலும், மனமும் இளமையாகவும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
* நரம்பு மண்டலங்கள் சுறுசுறுப்பாக இயங்கும்.
* நுரையீரல் வலுவடையும், மார்புச் சளி குணமாகும்.
* இதயம் சீராக இயங்கும். நாளமில்லாச் சுரப்பிகள் புத்துணர்ச்சியடையும்.
* குண்டான உடல் மெலியும், தொப்பை மறையும்.
* மன அழுத்தம் குறையும். மனதில் உற்சாகம் பிறக்கும்.
* ஆஸ்துமா, நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் குணமாகும்.
* கண் பார்வை தெளிவாகும். இரவில் நன்றாகத் தூக்கம் வரும்.
* முதுகு கூன் விழாமல் நிமிர்ந்து நிற்கும்.
* இடுப்பு சதைகள் மறையும். உடலில் உள்ள அசுத்தம் முழுவதும் வியர்வை மூலம் வெளியேறும்.
* உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறைந்து உடல் உறுதியடையும்.
* நாள் முழுவதும் எவ்வளவு உழைத்தாலும் சோர்வு இருக்காது.
* நோயின்றி நீண்ட நாட்கள் வாழமுடியும்.
* முதுகு வலி, மூட்டு வலி குணமாகும். உடலிலுள்ள திசுக்களுக்கு உயர்க்காற்று நிறைய கிடைக்கிறது.
* கால்களின் தசைகளுக்கு தாங்கும் சக்தி கிடைக்கும்.
* மன இறுக்கம் (டென்ஷன்) குறைந்து தன்னம்பிக்கை பிறக்கும்.
* சிந்திக்கும் ஆற்றல் பெருகும்.
* உடல் முழுவதும் மின்சாரம் பாய்வது போல் அற்புத உணர்வு பரவும்.
* மாலை வெய்யிலில் தினமும் நடந்தால் தோல் நோய்கள் வராது.

மற்ற எல்லா உடற்பயிற்சிகளையும் விட, நடைப்பயிற்சியே மிகவும் எளிமையானது. சிறந்தது. டாக்டர், மருந்து, மாத்திரை, காசு செலவில்லாதது நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி முடிந்து வியர்வை அடங்கியபிறகு சுமார் பதினைந்து நிமிடங்களுக்குப்பின், தண்ணீர், பழச்சாறு, அருகம்புல் சாறு குடிக்கலாம். நடைப்பயிற்சி முடிந்து அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலைக்கு ஊற்றிக் குளிக்க வேண்டும். இதனால் தலையில் உள்ள சூடு குறைந்து மறையும். தலைக்குத் தண்ணீர், ஊற்றிக் குளிக்காமல், உடம்பில் மட்டும் படுமாறு குளித்தால் உடலின் சூடு முழுவதும் தலைக்குச் சென்று ஏதேனும் நோய் வரலாம். நடைப்பயிற்சியின் போது உடலிலுள்ள 72,000 நாடி நரம்புகளுக்கும் இரத்தம் பாய்ந்து சுறுசுறுப்பு அடைகிறது.
"நடைப்பயிற்சி செய்யாதவர்களுக்கெல்லாம் மரணம் ஒவ்வொரு இரவும் படுக்கையைத் தட்டிப் போடுகிறது" என்பதை மறவாதீர்கள். "சூரிய ஒளி, தண்ணீர், காற்று, சரிவிகித உணவு, நடைப்பயிற்சி, சரியான ஓய்வு இவை ஆறும் உங்களிடம் காசு வாங்காத டாக்டர்கள்!" என்பதை நினைவில் கொள்ளுங்கள்.