பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் வாழைமரம்!


இறைவழிபாடில் வாழை ஒரு முக்கிய இடம் பெறுகிறது. வாழைப்பழத்தை வைத்துத்தான் இறைவனுக்கு நைவேதியம் செய்கிறார்கள். வாழை மரத்தை தெய்வமாக வணங்குகிறார்கள். வாழையை பெண்ணாக பாவிக்கிறார்கள். வாழ வைக்கும் மரமாக நினைக்கிறார்கள். வடக்கு நோக்கி குலை தள்ளினால் அந்த வீடு சிறக்கும். தெற்கு நோக்கி குலை தள்ளினால் அழிவு உண்டாகும். கிழக்கு நோக்கி குலை தள்ளினால் பதவி கிடைக்கும், மேற்கு நோக்கி குலை தளளினால் அரச பயம் உண்டாகும். இதுபோன்று பல மொழிகள் வாழை மரத்திற்கு உண்டு. வாழைக்குத் தெய்வ குணமும், பெண்ணின் குணமும் உள்ளது. வாழையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது. பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி என்ற எதுவும் வீணாகாது. இத்தகைய வாழை மரத்தை கோயில் விழாக்களில் தோரணம் கட்டினாலும் அல்லது கோயில்களில் வாழைக்கன்று வைத்தால் வீட்டில் காணாமல் போனவர்கள் அல்லது பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சைன‌ஸ்க்கு ‌தீ‌ர்வுகாணு‌ம் மூ‌லிகை வை‌த்‌திய‌ம்!



சைனஸுக்காக எனக்குத்தெரிந்த காது- மூக்கு- தொண்டை மருத்துவரிடம் சென்றபோது ஆபரேஷன் பண்ணவேண்டும் என்றார். வீடு திரும்பிய நான், ஏற்கனவே இயற்கை வைத்தியம் பற்றி அறிந்து வைத்திருந்ததால் எனக்கு நானே சுயபரிசோதனை செ‌ய்து கொண்டேன். அதாவது, நொச்சி இலையை பறித்து வந்து அதனுடன் சிறிது நல்லெண்ணெ‌ய் கலந்து அடுப்பில் நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வைத்தேன். சூடு ஓரளவு ஆறியதும் பொறுக்கும்சூட்டில் உச்சந்தலையில் தே‌ய்த்து அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்தேன். எண்ணெ‌ய் பிசுக்கு போவதற்காக சீயக்கா‌ய் தே‌ய்த்தேன். வாரத்துக்கு இரண்டுநா‌ள் வீதம் சுமார் ஒன்றரை மாதம் செ‌ய்தேன். மூக்கடைப்பு மெல்லமெல்ல விலகி சைனஸ் தொந்தரவிலிருந்து மீண்டேன். ஆனாலும் இப்போதும்கூட தயிர், மோர், குளிர்ந்த பானங்க‌ள் சாப்பிட்டால் கொஞ்சம் மூக்கடைப்பு ஏற்படும். அப்போது கொஞ்சம் வெந்நீர் குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.