*நம் நெல் அறிவோம்*கல்லுருண்டை

*நம் நெல் அறிவோம்* *கல்லுருண்டை நாம் மறந்து போன பாரம்பரிய நெல் வகைகளின் நன்மைகளை இந்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தினமும் ஒரு பாரம்பரிய நெல் இரகத்தின் அரிசியை பற்றி பதிவிட்டு வருகிறேன். அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது *கல்லுருண்டை* என்கிற பாரம்பரிய ரகம் நெல் பற்றி தான்.  பாரம்பரிய நெல்  வகையைச்சார்ந்த கல்லுருண்டை நெல் தமிழகத்தநாகப்பட்டினம்மாவடபகுதிகளில் விளையக்கூடிய நெல் இரகமாகு 126 சென்டிமீட்டர் உயரம் வரையில் வளரக்கூடிய இதன் நெற்பயிர், 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. களிகலப்பு மண் வகைக்கு ஏற்ற, மற்றும் நன்கு வளரக்கூடிய இந்த கல்லுருண்டையின் நெற்பயிர், வறட்சி,  பூச்சி மற்றும் உப்புத் தன்மையை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட நெல் இரகமாகும். கல்லுருண்டை நெல்லின் தானியமணி, கருப்பு நிற மங்கிய கோடுகளுடன் காணப்படும், மஞ்சள் நிறமுடைய நெல்லாகும். மேலும் இதன் நெல் மணி சற்று தடித்தும் (மோட்டா) வெளிறிய மஞ்சள் நிறமுடன் உள்ளது. உணவு பயன்கள் இந்த நெல்லின் அரிசி இட்லி, தோசையும், மற்றும் பிற உணவு வகைகளுக்கும் ஏற்றதாக உள்ளது. மேலும் இந்த நெற்பயிரிலிருந்து கிடைக்கக்கூடிய  வைக்கோல், கூரை  வேய்தலுக்குப் பயன்படுகின்றது. பருவகாலம் குறுகியகாலப் பயிரான கல்லுருண்டை, தாளடி, பிசாணம் எனப்படும் பின்சம்பா (பட்டம்) பருவகாலமான செப்டம்பர் 15 முதல், - பிப்ரவரி 14 முடிய உள்ள இடைப்பட்ட காலத்திலும், மற்றும் நவரை பட்டம் எனப்படும் டிசம்பர் 15 முதல், - மார்ச் 14 முடிய, இந்த இரகத்திற்கு ஏற்ற பருவங்களாகும். கல்லுருண்டை சம்பா அரிசியில் செய்த உணவுகளை உண்பவர்களுக்கு தோள் வலிமைபெறும். அதாவது மல்யுத்தக்காரர்கள் கூட எதிர்க்க இயலாத தோள் வலிமையை தரும். கல்லுருண்டை சம்பா அரிசியில் செய்த உணவுகளை உண்பவர்களுக்கு நல்ல வார்த்தை வளமும் உண்டாக்கும்.