நமக்கான நேரம் வரும்

படித்ததில் பிடித்தது இரண்டு மாம்பழங்களும் ஒரே மரத்தின் ஒரே கிளையில்தான் வளர்ந்துள்ளன. ஒன்று ஏற்கனவே பழுத்துவிட்டது, மற்றொன்று இன்னும் பழுக்கவில்லை. பழுக்க அதற்கு இன்னும் அதிக நேரம் தேவைப்படுகிறது. இந்த மாம்பழங்கள் மூலம் இயற்கை நமக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்பிக்கிறது. நமக்கு முன்னால் சிலர் வெற்றி பெற்றுவிடுவதால், நாம் தோல்வியடைந்தவர்கள் என்று அர்த்தமல்ல. நமது நேரம் இன்னும் வரவில்லை என்று அர்த்தம். எனவே, நாம் பொறுமையாக இருக்க வேண்டும், உற்சாகமாக இருக்க வேண்டும், விரக்திக்கு அடிபணியாமல் இருக்க வேண்டும். நம் சொந்த வெற்றியின் சந்தோஷத்தை அடைவதற்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படலாம் அவ்வளவுதான். நினைவில் கொள்ளுங்கள்! நமக்கான நேரம் வரும் - அதற்கு தேவை பொறுமை, விடாமுயற்சி மற்றும் நம்பிக்கை ...