சிந்தனைகள்

படித்ததில் பிடித்தது *1. விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் உறவினர்கள் வீடுகளுக்கு செல்லுங்கள்.* *2. எப்போதும் எதிர்காலத்தைப் பற்றியே சிந்திக்காதீர்கள்.* *3. உறவினர்களை தங்களது வீட்டுக்கு வரச்சொல்லி முழு மனதுடன் அழைப்பு விடுங்கள்.* *4. சாலைகளில் நடக்கும்போது தலையை நிமிர்ந்து நடந்து செல்லுங்கள். நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களை பார்த்தால் புன்னகை செய்து குடும்ப நலங்களை விசாரியுங்கள்.* *5. வீட்டுக்குள்ளேயே இருந்து வாழ்க்கையை கழிக்காதீங்க. பிற்காலத்தில் உதவிக்கு யாரும் வராமல் மன நோயாளியாக ஆக நேரிடும்.* *6. தங்களுடைய திறமைகள் அடுத்தவர்களுக்கு பயனுடையதாக இருக்க வேண்டும்.* *7.*வாரம் ஒருமுறையாவது குடும்பத்துடன் அருகில் இருக்கும் கோயில்களுக்கு செல்லுங்கள்.* *8. சொத்து, தங்கம் மற்றும் பணத்தை நினைத்து, நினைத்து டென்சன் ஆகாதீங்க.* *9. ஒரு நாளைக்கு பத்து முறையாவது சிரிங்க.😀😀😀* *10. நான் பெரிய ஆள், (ஈகோ) எனது கட்டளைக்கு அனைவரும் கட்டுபட வேண்டும் என்ற* *எண்ணத்தை கைவிடுங்க இல்லையேல் உங்கள் மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள்,வேலை ஆட்கள் உங்களுடன் போலியாகத்தான் பழகுவார்கள்.* *11. வங்கியில் பணத்தை சேர்ப்பதை தவிர்த்து முடிந்த அளவு தானம், தர்மம் செய்து புண்ணியத்தை சேர்க்க பழகிக்கொள்ளுங்கள்,* *12. உங்களுக்கு உள்ளேயே ஒரு வட்டம் போட்டு வாழ்க்கையை வாழாதீங்க.* *13. இன்னும் சில நொடி, சில நிமிடம், சில நாட்கள், சில மாதம், சில ஆண்டுகளில் இந்த புண்ணிய பூமியை விட்டு போய்விடுவோம் என்ற எண்ணத்தில் வாழ பழகுங்கள்.* *14. இந்த வீடு, சொத்து, கார், தொழில், பணம், செல்வாக்கு, உடன் பிறந்தவர்கள், சொந்தங்கள், வேலையாட்கள், அதிகாரம்,பதவி இவை அனைத்தும் உங்களுடன் வராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* *15. உடற்பயிற்சி, தியானம் செய்து உடலை பாதுகாப்பாக வையுங்கள்.* *16. வாழ்க்கையில் ஓர் நோக்கம் வேண்டும். அது இல்லாமலேயே ஏனோதானோ என்று இருக்கக் கூடாது.* *17. இதைப் படித்துவிட்டு இவன் முதல்ல கடைப்பிடிக்கிறானா என்று நினைக்காதீங்க. எனக்கும் இந்த சிந்தனைகள் பொருந்தும்.* 🙏🙏🙏🏻🙏🏻✨🙏🏻