மாவீரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்....




பிறந்தான் தமிழாய்...பிரபாகரன்.!

என்னோடு சேர்ந்து நீங்களும்  வாழ்த்துங்கள் தோழர்களே........

ஒரு இக்கட்டான நிலையிலும் இன்று தமிழினம் துவண்டு போய்விடவில்லை!
தலைவன் கொடுத்த நெஞ்சுரம் இன்று இளையோர் மனத்தில் வேர் பாய்ச்சியிருக்கிறது!
தமிழீழத் தாயகம் உலகத்தமிழர்களின் தாகம் என்று முழங்குவோம்!
ஒன்றாய் வீழ்ந்தால் பல நூறாய் எழு எழுவோம்!
இப்பொழுதும் கிடைத்துவிடுவார் திடீரென்று தோன்றி உரையாற்றுவார் என்றுதானே அனைத்து தமிழுள்ளங்களும் ஏங்கிகொண்டிருக்கின்றனர்..


முன்பும் பலமுறை
தொலைந்து தொலைந்து
மீண்டும்
கிடைத்திருக்கிறாய் எங்களுக்கு.
இப்போ பலநாட்கள் ஆகியும்
பதுங்கு குழிகள் மூடப்பட்டும்
விதையுண்ட வீரர்களின்
நினைவுத் தூண்கள்
இடியுண்ட பின்னாலும்
இன்னமும் காணோமே உன்னை.
தோழா எங்கே நீ !

எல்லோரும் எதிர்ப்பார்க்கிறோமே,
இன்றைய பொழுதுக்குள் உன் குரல் கேட்டுவிட்டால்
போதுமென்றே .... செவிபசியுடன் காத்துக் கிடக்கிறோம்.
உரிமையுடன் அழைக்கிறேன்.. வாடா அண்ணா...........

ரசிப்பு...


நான் ரசித்ததெல்லம் விலகி செல்கிறது ........................ அன்று நிலா... இன்று.................. நீ.......

குழந்தையின் சிரிப்பு.......

இறைவன் படைத்தலில் இன்றும்
 இயல்பு கெடாமல் இருக்கிறது
குழந்தையின் சிரிப்பு..............

அன்பு

அன்பு தன்னலமின்றி தருவதற்கே
அன்பு உணர்ந்து குதிப்பதற்கே
அன்பு அனைவருடன் பகிர்வதற்கே
அன்பு என்றும் தூய்மையானதே

அன்பு மகிழ்ச்சியில் துள்ளும்
அன்பு வெட்கத்தில் மலரும்
அன்பு அனுபவிக்க துடிக்கும்
அன்பு அழிவல்ல நினைக்கும்

அன்பு தருவது வலியை
அன்பு திணிப்பது களிப்பை
அன்பு வெல்வது நெஞ்சை
அன்புக்கு தேவையில்லை மூளை

அன்பு அழகில் முதலில் மயங்கும்
அன்பு செய்த மனம் தவிக்கும்
அன்பு இல்லை என்றும் பாவம்
அன்பு வெல்வது அல்ல விரும்பும்

அன்பு உண்மையை கணிக்க தவறும்
அன்பு கோபத்தையும் தூண்டும்
அன்பு வயதை அல்ல காணும்
அன்பே ஞானியை உருவாக்கும்

அன்பு விலைக்கும் வாங்கும் பொருள் இல்லை
அன்பு பொய் பேசும் கயவனுக்கு இல்லை
அன்பை வைத்து உயர்த்து உன் வாழ்வை
அன்பு இனி செல்வது சரியான பாதை

அன்பு உயர பறக்க நினைக்கும்
அன்பு அனைத்து எல்லையையும் கடக்கும்
அன்பு நெஞ்சின் ஆழத்தை தொடும்
அன்பே முன்னோர்கள் சொன்ன வாக்கும்

அன்பு என்னை அடிபணிய வைப்பது உண்மை
அன்பு என்னைத் தொடர்ந்து கவர்வது உண்மை
அன்பு உறுதியை பலப்படுத்துவதும் உண்மை
அன்பிற்கு ஈடு அன்பே என்பது நானறிந்த உண்மை

புலி


அடிமை ஈழதில் தமிழனாக இருபதை விட
சுதிந்திர ஈழதில் கல்லரையாக இருந்து விடலாம்
என்று எனது புலிகளின் நினைத்தது தவறா..........

முன்னாள் இந்திய பிரதம மந்திரி ராஜீவ் காந்தி 1987 ஆண்டு ஜூலை மாதாம் 29 ஆம் தேதி இலங்கை சென்ற பொழுது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.மறுநாள் சிங்கள இராணுவ மரியாதையை ஏற்றுக்கொள்ளும்பொழுது அவர் சிங்கள இனவெறி ராணுவ வீரனால் துப்பாக்கி கொண்டு தலையில் தாக்கப்பட்டார்….
ஒரு மாபெரும் தேசத்தின் தலைமகனுக்கே இந்த நிலை என்றால் சாதாரண அப்பாவி தமிழனின் நிலை அங்கே என்னவாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்…

Friends



                               ஒரு இதயத்தையும்பறித்துக் கொண்டது காதல்!
எனக்காகஒரு இதயத்தையேபரிசளித்தது நட்பு!
கஷ்டங்களில்யோசித்தது காதல்!
யோசிக்காமல்கைகொடுத்தது நட்பு!
துயரங்களை நோக்கிஇழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கிஅழைத்துச் சென்றது நட்பு!
கட்டுப்பாடுகளைதளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளைஉணர்த்த முயற்சித்தது நட்பு!
என் இலட்சியங்களைகனவாக்கியது காதல்!
என் கனவுகளைஇலட்சியமாக்கியது நட்பு!
காயம் தரும்காதல் வேண்டாம்!
நன்மை தரும் நட்பைக் கொடு இறைவா........