வெற்றிலை

*வெற்றிலை* 1. மூலிகையின் பெயர் -: வெற்றிலை. 2. தாவரப் பெயர் -: PIPER BETEL. 3. தாவரக்குடும்பம் -: PIPER ACEAE. 4. வேறு பெயர் -: தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல் என்பன. 5. வகைகள்-கம்மாறு வெற்றிலை, கற்பூரவெற்றிலை மற்றும் சாதாரண வெற்றிலை என்பன. 6. பயன்தரும் பாகங்கள் -: கொடியின் இலை மற்றும் வேர். 7. வளரியல்பு -: இது இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும், வளர்கிறது. இது ஒரு கொடி வகையைச் சேர்ந்தது. இதன் இலைகள் இதயவடிவில் பெரிதாக இருப்பதோடு நுனி கூர்மையாகவும் இருக்கும். வடிகால் வசதி இருக்கவேண்டும். அகத்தி மரங்களை இடையில் வளர்த்தி அதில் கொடிகள் வளர வளர கட்டிக்கொண்டே செல்வார்கள் மூங்கில் களிகளையும் பயன்படுத்துவார்கள். இதை ஆற்றுப் படுகைகளில் வியாபார ரீதியாக அதுகம் பயிரிடுகிறார்கள். கருப்பு நிறமுடன் நல்ல காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை. கற்பூர மணத்துடன் சறிது காரமாகவும் இருப்பது கற்பூர வெற்றலையாகும். வெற்றிலைக்கு நல்ல மணமும் , காரமும் உண்டு. இது கொடி பதியம் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. 8. மருத்துவப் பயன்கள் -: பொதுவான குணம். சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும். வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும். வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும். குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும். வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும். குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும். வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும். கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும். வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது. சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லி. வெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை நோயிக்குத் தக்க வாறு 48-96 நாள் சாப்பிட வேண்டும். குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும். வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும். விடாது மூக்கில் ஒழுகும் சளிக்கும் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட குணமாகும். ஒரிசாவில் சில பகுதிகளில் பெண்கள் குழந்தைகள் பிறக்காமல் தடுக்க 10 கிராம் வெற்றிலை வேரையும், மிளகையும் சம அளவு வைத்து அரைத்து 20-40 நாட்கள் சாப்பிட்டு வருகிறார்கள். வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள். நுரையீரல் சம்பந்தமான நோய்களிக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும். சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.

எளிய முறை இயற்கை மருத்துவம் :

உடல் உறுப்புகள் பலப்படவீட்டில் உள்ள பொருட்கள் மூலம் எளிய முறை இயற்கை மருத்துவம் : நமது தினசரி உணவு பழக்கத்தில் சில பழங்கள் மற்றும் பொருட்களை சேர்ப்பதன் மூலம் நோயற்ற ஆரோக்கிய வாழ்வை பெறலாம். கல்லீரல் பலப்பட : தினசரி ஒரு கொய்யா பழம் சாப்பிட கல்லீரல் பலப்படும். வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து மிக்கது. இரத்த அழுத்தம் சரியாக : டீ, காபிக்கு பதிலாக ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் சீராகும். இதயத்திற்கு பலம் கிடைக்க : மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ஈரல் இதயம் வலுவடையும். ஜீரண சக்தி அதிகரிக்கும். அத்திப்பழம் தேனில் ஊற வைத்து சாப்பிட மாதவிடாய் பிரச்சனை வயிற்று வலி குறையும். ஊமத்தன் பூவை பிழிந்து சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் காதுவலி குணமாகும். விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட பித்தம் குறையும். எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் சரியாகும். கறிவேப்பிலை மிளகு சேர்த்து நெய்யில் வறுத்து சுடுநீர் ஊற்றி அரைத்து குழந்தைகளை குளிப்பாட்டிய உடன் கொடுக்க மாந்தம் குறையும். பசி எடுக்கும். துளசி சாறு கல்கண்டு சேர்த்து சாப்பிட வாந்தி நிற்கும். அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்று கடுப்பு குணமாகும். அன்னாசி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் சரியாகும். கோவைப்பழம் தினசரி ஒன்று சாப்பிட சர்க்கரை நோய் கட்டுப்படும். நெல்லி முள்ளி, தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் குடிநீரில் ஊற வைத்து காலையில் வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் சரியாகும். வெங்காயத்தை நசுக்கி அதன் சாற்றை ஒரு சொட்டு கண்ணில் விட தூக்கம் வரும். வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்று கடுப்பு நீங்கும். வேப்பம் கொழுந்தை பசுமோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண் மீது பூச புண் ஆறும். மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். அரசமரத்து பாலை பித்த வெடிப்பு மீது தடவி வர குணமாகும். வாழைப்பழம், ஏலக்காய் பொடி செய்து பிசைந்து சாப்பிட வயிற்று வலி சரியாகும். முருங்கை பூவை பாலில் காய்ச்சி சாப்பிட மோகம் ஏற்படும். துத்து இலை அதன் வேரையும் கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர பல்வலி, பல் கூச்சம், பல் ஆட்டம் சரியாகும். இலந்தை பழம் தினசரி சாப்பிட்டால் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு உண்டாகும். பசி ஏற்படும். முருங்கை இலை ஒருபிடி, 10 கிராம் கொத்தமல்லி இரண்டையும் வேகவைத்து நீரை குடித்து வந்தால் கர்ப்பிணிகளுக்கு பேறுகால வலி குறையும். தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர நரை மாறும். ஆல மரத்தின் இளம் கொழுந்தை மை போல் அரைத்து பசும்பாலில் கலந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர விந்து கெட்டிப்படும். அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவ தலைவலி குறையும். எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும். எத்தனை பூக்கள் விழுங்குகிறோமோ அத்தனை வருடம் கண்வலி ஏற்படாது. அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் சாப்பிட ஆண்மை பெருகும். காய்ச்சிய வேப்ப எண்ணை தடவி வர சேற்றுப்புண் குணமாகும். தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட நரம்புத் தளர்ச்சி சரியாகும். அத்திப்பாலை பற்று போட்டு வர மூட்டு வலி குணமாகும். மாவிலையை பொடி செய்து பல் துலக்கினால் பற்கள் சுத்தமாகவும், உறுதியாகவும் இருக்கும். கர்ப்பிணிகள் மாம்பழம் சாப்பிட்டு வர பிறக்கும் குழந்தை ஊட்டச்சத்துடன் இருக்கும். நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தம் உறைவதை தடுக்கலாம். குழந்தைகளுக்கு நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுக்க கண் சூடு குணமாகும். இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட ரத்தம் சுத்தமாகும். தினசரி இரவு ஒரு செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வர தொற்று நோய் நம்மை அணுகாது. பீர்க்கன்காய் வேர் கஷாயம் சாப்பிட்டு வர ரத்தசோகை நீங்கும். தலைவலி குணமாக : விரவி மஞ்சளை விளக்கு எண்ணெய்யில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச தலைவலி, நெஞ்சுவலி முதலியன அகலும். இருமல் குணமாக : அரசு மரத்துப்பட்டையை காயவைத்து வறுத்து கரியானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீரில் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை, பால் சேர்த்து குடித்தால் இருமல் குணமாகும். ஜலதோஷம் : ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும். வறட்டு இருமல் குணமாக : கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும் வெள்ளை முதலான நோய்கள் குணமாகும். ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக : முசுமுசுக்கை இலையை அரிந்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும். சளிகட்டு நீங்க : தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிகட்டு நீங்கும். பிரயாணத்தின் போது வாந்தி நிறுத்த : தினசரி ஒரு நெல்லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டால் வாந்தி வராது. காசம் இறைப்பு நீங்க : கரிசலாங்கன்னி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இறைப்பு குணமாகும். தலைப்பாரம் குறைய : நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும். தும்மல் நிற்க : தூதுவளை பொடியை மிளகு பொடி அல்லது தேனில் அல்லது பாலில் கலந்து சாப்பிட்டால் தும்மல் நிற்கும்.

நீண்டகாலப்_பயிர்கள்_நடும்_பொழுது_கவனிக்கவேண்டிய_முக்கிய_இடைவெளிகளின்_அளவீடுகள்

நீண்டகாலப்_பயிர்கள்_நடும்_பொழுது_கவனிக்கவேண்டிய_முக்கிய_இடைவெளிகளின்_அளவீடுகள் ☘️ #வாழை_மரம் 8' × 8' ☘️ #தென்னை_மரம் 24' × 24' ☘️ #பப்பாளி_மரம் 7' × 7' ☘️ #மாமரம்_உயர்_ரகம். 30' × 30' ☘️ #மாமரம்_சிறிய_ரகம் 15' × 15' ☘️ #பலா_மரம் 22' × 22' ☘️ #கொய்யா_மரம் 14' × 14' (அப்பிள் கொய்யா 15'× 15') ☘️ #மாதுளை_மரம் 9' × 9' ☘️ #சப்போட்டா_மரம். 24' × 24' ☘️ #அன்ன_மீனா_மரம். 10' × 10' ☘️ #தோடை_மரம். 15' × 15' ☘️ #எலுமிச்சை_மரம் 14' × 14' ☘️ #திராட்சை. 9' × 6' ☘️ #நெல்லி_மரம் 14' × 14' ☘️ #முந்திரிகை_மரம். 14' × 14' ☘️ #கறிவேப்பிலை_மரம். 7' × 8' ☘️ #முருங்கை_மரம். 12' × 12' ☘️ #கராம்பு_மரம். 18'× 18' ☘️ #கறுவா_மரம். 10' × 10' ☘️ #கோபி_மரம். 7' × 7' ☘️ #கொக்கோ_மரம். 24' × 24' ☘️ #வேப்பமரம். 15' × 15' ☘️ #பனைமரம். 10' × 10' ☘️ #கமுகுமரம். 7' × 7' ☘️ #தேக்கு_மரம் 10' × 10' ☘️ #மலைவேம்பு_மரம். 10' × 10' ☘️ #சந்தன_மரம். 15' × 15' ☘️ #நாவல்_மரம். 30' × 30' ☘️ #கற்றாழை 1.5' × 2' இந்த அளவீடுகள் குறையாது கட்டாயம் இருக்க வேண்டிய அடி அளவுகள் ஆகும் இவ்வாறு இடைவெளி இருந்தால் அவற்றின் இலைகள் மற்றும் ஓலைகள் நன்கு பரப்பி வளர முடிகிறது இந்த இடைவெளிகளையும் விட குறைவாக இருந்தால் மரங்கள் காய்க்காமல் நீண்டு ஒல்லியாக வளர்ந்து கொண்டு போகும் இதன்பின் காய்த்தாலும் காய்கள் திரட்சி இல்லாமல். காய்கள் சிறிதாக இருக்கும் மர தேவைக்காக வளர்க்கப்படும் மரங்கள் எனில் அம்மரங்கள் மெலிதாக நீண்டு வளரும். நீண்டு வளர்ந்தாலும் இதன் கேள்வி குறைவாகவே இருக்கும் இடைவெளிகள் அதிகமானால் மரங்கள் குறைந்த உயரத்தில் காய்க்க ஆரம்பிக்கும் அதோடு காய்கள் நன்கு பெருத்து திரட்சியாக காய்க்க ஆரம்பிக்கும் மரத்தின் சுற்றளவு நன்கு விருத்தியடையும். 6 ,7, 8 , மாதங்களில் மரம் நட ஏற்ற பருவம். நன்றி