குபீர் வருமானம் தரும் குடிநீர் தயாரிப்பு! ......வேலை வாய்ப்புகள்,




''பேக்கேஜ்டு டிரிங்கிங் வாட்டர் என்பதைப் பற்றித்தான் நீங்கள் கேட்டுள்ளீர்கள். இதற்கான ஆலையை அமைப்பதற்கு, முதலில் சுத்தமான, குறைந்த தாது மற்றும் ரசாயனப் பொருட்கள் உள்ள தண்ணீர் கிடைக்கும் இடமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். குடியிருப்பு பகுதி, விவசாயப் பகுதி சரிப்படாது. நீங்கள் அவர்களின் தண்ணீரை உறிஞ்சி எடுப்பதாக நாளை பிரச்னை வரலாம். எனவே, பிரச்னை இல்லாத, பல வருடங்களுக்கு வற்றாத நீர் ஊற்று உள்ள இடமாகத் தேர்ந்தெடுப்பது முதல் படி. அந்த நீரை பரிசோதனை கூடங்களில் கொடுத்து, சுத்திரிக்கப்பட்ட குடிநீராக மாற்றத் தகுதியுள்ள நீர்தானா என்பதை உறுதிபடுத்த வேண்டும்.
அடுத்ததாக, இந்தத் தொழிலை நடத்த மூன்று விதங்களில் தொழிற்சாலை அமைக்கலாம். ஒரு மணி நேரத்தில் 2,000 - 5,000 லிட்டர் வரை நீர் சுத்திகரிக்கும் தொழிற்சாலையை அமைப்பதற்கு, 'மேனுவல்' என்றால் 20 லட்சமும், 'செமி ஆட்டோமேட்டிக்' என்றால் 25 லட்சமும், 'ஃபுல் ஆட்டோமேட்டிக்' என்றால் 40 லட்சமும் தேவைப்படும். இத்தொழிலை 'டர்ன்கி சிஸ்டம்’ மூலம் செய்து தர பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவர்களே எந்திரங்களை நிறுவி அதற்கான பயிற்சிகளையும் அளிப்பார்கள்.

தொழிற்சாலையில் எட்டு நிலைகளில் இந்த நீர் சுத்திகரிக்கப்படும். அப்போதுதான் நீரானது, 100% சுத்தமானதாக இருக்கும். இதுதான் இந்தத் தொழிலுக்கு மிகமிக முக்கியமான தேவை. ஆனால், பேராசைப்பட்டு பணத்தை மிச்சப் படுத்துவதற்காக நீரை சரியாக சுத்தம் செய்யாமல் பேக் செய்து விற்றனர். அதன் விளைவு, 'பிஐஎஸ்' (BIS) நிறுவனத்தின் 'தரக் கட்டுப்பாடு முத்திரை'யுடன்தான் விற்பனை செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே, தரம் என்பது மிக அவசிய மான ஒன்று. தரக்கட்டுப்பாடு முத்திரை பெறுவது என்பது கட்டாயமான ஒன்று. இதன்படி சுத்திகரிக்கப்பட்ட நீர், பலகட்ட பரிசோதனையை கடந்த பின்னேதான், இந்தத் தொழிலை நடத்துவதற்கான உரிமம் கிடைக்கும்.
அடுத்ததாக, தொழில் போட்டி மற்றும் விற்பனை வாய்ப்புகள் பற்றி பார்ப்போம்.    மிக முக்கியமாக, உங்கள் பகுதியில் இத்தகைய தொழிற்சாலைகள் எத்தனை உள்ளன என்று முதலில் கணக்கெடுங்கள். அவற்றுடனான போட்டியை சமாளிக்க முடியுமா... என்பதையும் அலசி ஆராய்ந்து ஒரு முடிவெடுங்கள். பன்னாட்டு நிறுவனங்களும் இந்தக் களத்தில் உள்ளதால், போட்டி அதிகம் என்பதை கவனிக்கத் தவறாதீர்கள். சுத்திகரிக்கப்பட்ட நீரை 20 லிட்டர் கேன்களில் மட்டுமல்ல, ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் பாட்டில்களிலும் விற்பனை செய்யலாம். பெருநகரங்களில் உள்ள பங்களாக்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், அலுவலகங்கள் என்று ஏறி இறங்கினால் விற்பனை சுலபமாகும். உற்பத்தி செலவைவிட, போக்குவரத்து செலவே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தேவையான வாகன வசதி அவசியம்.
முன்பு எளிதாக துவங்கப்பட்ட இத்தொழிலுக்கு இப்போது பல கட்டுப்பாடுகள் வந்துள்ளன. பூமிக்கு அடியில் உள்ள அனைத்தும் அரசுக்கு சொந்தம், எனவே, நீரை எடுத்து விற்கும் குளிர்பானம் மற்றும் தண்ணீர் தொழில்களுக்கு ஏன் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற பொதுநல வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் தன்மையையும் கருத்தில் கொள்ளவும். மாசுக்கட்டுப்பாடு வாரியம், தரக்கட்டுப்பாடு வாரியம், குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியம், சுகாதார நிறுவனம், உணவு பாதுகாப்பு மற்றும் தரம் தகுதி சான்று என பல கட்ட சான்றிதழ்களைப் பெறவேண்டும்.
மொத்தத்தில் தொழிலைத் துவங்க நிறைய மெனக்கெட வேண்டும். அதேசமயம், விற்பனை சரியாக அமைந்துவிட்டால் மிகமிக லாபகரமான தொழில். ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை தயாரிக்க 18 முதல் 22 பைசாதான் செலவு ஆகும். 20 லிட்டர் கேன் என்றால், 5 முதல் 6 ரூபாய் வரை செலவாகும். 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யலாம். தற்போது அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கும் 'நீட்ஸ்’ (NEEDS -New Entrepreneur-cum-Enterprise Development Scheme) திட்டம், இதற்கு ஏற்ற திட்டம். இதைப் பயன்படுத்தி, இந்தத் தொழிலில் நீங்கள் ஈடுபடலாம். ஆனால், வெற்றியும் தோல்வியும்... உங்களுடைய முயற்சியில்தான் இருக்கிறது. வாழ்த்துக்கள்!''

பூண்டின் மருத்துவபலன்கள்:-



*புற்றுநோய் வராமல் தடுக்கும்.

*இரத்தத்தில் உள்ள தேவையற்ற சர்க்கரை அளவை குறைக்கிறது. இதனால் நீரிழிவு நோயாளிகள் குணம் அடைவார்கள்.

*உயர் இரத்த அழுத்தத்தை சீராக்கி சாதாரண நிலைக்கு கொண்டு வரும்.

*கல்லீரலில் உள்ள கொழுப்பை அகற்றும்.

*எலும்பு நோய் வராமல் தடுக்கும்.

*கர்ப்பிணி பெண்கள் பூண்டு சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தைகளின் எடை அதிகரிக்கும்.

*சைனஸ் நோயை கட்டுப்படுத்தும்.

*வைரஸ் கிருமிகள் உடலை தாக்காமல் தடுக்கும்.

*ஆண்மை விருத்தியை அதிகரிக்கும். மலட்டுத்தன்மையை போக்கும்.

*கண்ணில் புரைவளர்வது தவிர்க்கப்படும்.

*சளியை போக்கும்.

*உடல் பருமனை குறைக்கும். தேவையற்ற தசை குறையும்.

*முதுகுவலி குறையும்.

*காசநோய் வராமல் தடுக்கும்.

*நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

*உடலை இளமையாக வைத்துக்கொள்ளும். முதுமையை தள்ளிப்போடும்.

இத்தகைய மகத்துவம் கொண்ட பூண்டுவை அன்றாடம் உணவில் சேர்ப்பது நல்லது. தினமும் காலை ஒரு மடக்கு தண்ணீர் அருந்திவிட்டு பூண்டு பல் 2 -ஐ எடுத்துஅரை குறையாக மென்று சாப்பிட வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சற்று வெல்லம் சேர்த்து சாப்பிடலாம். பச்சையாக சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் வாரம் ஒரு முறை பூண்டு கஞ்சி வைத்து சாப்பிடலாம். பசும் பாலில் பூண்டு போட்டு காய்ச்சியும் குடிக்கலாம். பசும்பாலில் பூண்டு காய்ச்சும்போது ஒரு தம்ளர் பாலுக்கு குறைந்தபட்சம் ஒரு பூண்டு போடப்பட வேண்டும்

பாத வெடிப்பு- பாட்டி வைத்தியம்:



பலருக்கு முகத்தில் பருக்கள் தோன்றுவதை போல் பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. ஆரம்பத்திலேயே பாதங்களை பராமரிப்பதில் ஆர்வம் காட்டினால் நிரந்தரமாக வெடிப்பு வருவதை தடுக்க முடியும்.
பாதங்களை பராமரிக்க சில எளிய டிப்ஸ்

மருதாணியை நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும் பின்பு தண்ணீரால் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும். பாதம் தாங்கும் அளவிற்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பும் எலும்பிச்சை சாறும் சேர்த்து அதில் பாதத்தை வைத்திருந்து பின்பு சொரசொரப்பான பொருட்களால் தேய்த்து வந்தால் கெட்ட செல்கள் உதிரும்.

வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து அரைத்து, விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளில் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு குணமடையும். பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதனை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் நன்கு தேய்த்து வர வெடிப்பு குணமாவதுடன் எரிச்சல் குறையும். தரமான காலணிகளை பயன்படுத்துவதன் மூலம் வெடிப்புகளை தவிர்க்கலாம்.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவில் எடுத்துக்கொண்டு அதில் மஞ்சளை சேர்த்து பாதத்திற்கு தடவி வந்தால் வெடிப்பு ஏற்படாது.
இரவு நேரங்களில் படுக்க செல்லும் முன்பு காலை சுத்தப்படுத்தி சிறிது தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் வெடிப்பு வருவதை தவிர்க்கலாம். தினமும் குளித்ததும் பாதத்தை துணியால் துடைத்து பின் விளக்கெண்ணெய் தேய்த்து வந்தாலும் வெடிப்பை தவிர்க்கலாம்