சாப்பிட வேண்டிய உணவுகள்!

🍇🍎🍏🍑🍓🍉🍇🍒🍋🍐🍍🍌🍊🍈🌽🍅🍆

உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

🍴🍹🍡
அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் & ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.

🍴🍹🍡
பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.

🍴🍹🍡
மிளகு சேர்ப்பதால், உணவில் உள்ள விஷம் நீங்குவதோடு உடலில் உள்ள விஷமும் முறிகிறது.

🍴🍹🍡
உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல்; குளிர்ச்சியையும் தருகிறது.

🍴🍹🍡
வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் அது உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.

🍴🍹🍡
கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.

🍴🍹🍡
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.

🍀🌹
உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.

🍀🌹
காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.

🍀🌹
உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது.

🍀🌹
இடதுகையை கீழே ஊன்றிக் கொண்டை சாப்பிடக்கூடாது.

🍀🌹
சாப்பிடும் சமயம் டி.வி பார்க்கக் கூடாது.

🍀🌹
வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.

🍀🌹
காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது.

🍀🌹
சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.

🍀🌹
உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். தயவுசெய்து வலைத்தளம் முதலியன அப்போது வேண்டாமே!

🍀🌹
இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.

🍀🌹
சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது.

🍀🌹
நின்று கொண்டு சாப்பிக் கூடாது.

🍀🌹
அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.

🍀🌹
சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது.

🍀🌹
தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.

🍀🌹
இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்.

🍀🌹
ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.
🌹
எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது.
🌹
வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.
🍀🌹
புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.
🍀🌹
வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.
🌹
நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.
🍀🌹
இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.
🌹
உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.
🌹
அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.
🔥🔥🍍
உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.
💖💖💖🍎🍏🍑🍉🌺🌸

சோற்றுக்கற்றாழை பயன்கள்:



இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு.சோற்றுக்கற்றாழையை வெட்டி பச்சை நிறத்தோலை நீக்கிவிட்டு, 7 முதல் 8 முறை தண்ணீர்விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து, அடுப்பில் ஏற்றி 1 கிலோ கற்றாழைக்கு 1 கிலோ கருப்பட்டியைத் தட்டிப்போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கருப்பட்டி தூள் கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும் அதனுடன் கால் கிலோ தோல் உரிக்கப்பட்ட பூண்டினை போட்டு மீண்டும் கிளற வேண்டும். பூண்டு வெந்த பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிட்டு தயிர்கடையும் மத்தினால் கடைய வேண்டும். அல்வா பதத்திற்கு வந்தவுடன் அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவிற்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல்,நீர்க்கட்டிகள், நீர் எரிச்சல், மாதவிடாய்க் கோளாறுகள்,பெண்மலடு ஆகியவை உடனே சரியாகும். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல் வலுவாகும்.

சர்க்கரை நோயை இனி கட்டுக்குள் வைக்கலாம்: 5 ரூபாயில் புதிய ஆயுர்வேத மூலிகை மாத்திரை அறிமுகம்


சத்தமே இல்லாமல் உயிருக்கு ‘உலைவைக்கும்’ சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கக்கூடிய மலிவுவிலை ஆயுர்வேத மாத்திரை நேற்று அறிமுகம் செய்விக்கப்பட்டது.

'BGR-34' என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாத்திரை நான்குவகை அரியமூலிகைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. ‘டைப் டூ’ என்றழைக்கப்படும் அதிதீவிரத்தன்மை கொண்ட நீரிழிவால் பாதிக்கப்பட்ட உயிரினங்களிடம் ஆரம்பகட்டத்தில் இந்த மாத்திரையைகொண்டு நடத்தப்பட்ட ஆய்வக பரிசோதனையில் 67 சதவீதம் வெற்றிகரமான விளைவுகள் கண்டறியப்பட்டுள்ளன.

ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சமன்படுத்தியும், அதிகமாக சுரக்கும் குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தியும், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு பின்விளைவுகளை இந்த 'BGR-34' மாத்திரை பெருமளவில் தடுப்பதாக ஆய்வுகளில் தெரியவந்தது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரியால் அறிமுகம் செய்விக்கப்பட்ட இந்த மாத்திரை நேற்று வர்த்தகரீதியாக விற்பனைக்காக வெளியிடப்பட்டது. 100 மாத்திரைகளின் விலை 500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ள, பக்கவிளைவுகள் ஏதும் இல்லாத இந்த 'BGR-34' இன்னும் 15 நாட்களில் நாட்டிலுள்ள அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

வருந்தவில்லை

நீ பிரிந்ததிற்காக நான் வருந்தவில்லை
புரிந்து கொள்ளாமல் சென்றுவிட்டாயே
என்பது தான் என் வருத்தம்..!!
பிரிவு என்பது மறக்க முடியாத சோகம்...!!! 
கண்ணீரால் நடத்தப்படும் யாகம்...!!!