தமிழ் குடிமகன்' ஆக்குங்க : முதல்வருக்கு கோரிக்கை..

   

   கோவையில் செம்மொழி மாநாடு நடந்து முடிந்த, "உற்சாகம்' இன்னும் அங்கு குறையவில்லை. இதை நிரூபிப்பது போல், கோவையில் இருந்து ஒரு வாசகர், முதல்வருக்கு முகவரியிட்டு, தினமலர்க்கு அனுப்பியுள்ள, "இ-மெயில்' கடிதம்: ஐயா, எல்லாரும் வியக்கும்படி, எங்க ஊரில செம்மொழி மாநாடு நடத்துனீங்க... எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்னு மாநாட்டில நீங்க முழக்கமிட்டீங்க... ஆனா, தமிழகத்தில ஒரு இடத்தில மட்டும், சுத்தமா தமிழ் இல்லாம, முழுக்க, முழுக்க இங்கிலீஸ்தான் ஆக்கிரமிச்சு இருக்கு. நீங்கதான் இந்த விஷயத்தில தலையிட்டு, ஒரு நல்ல முடிவா எடுத்து, தமிழ்பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கணும்.

தமிழுக்கு மரியாதை இல்லாத அந்த இடம், "டாஸ்மாக்...' அங்க இருக்கிற சரக்குக்கு எல்லாம், தமிழ்லே பேர் வைச்சு சாதாரண, "குடி'மக்களை, "தமிழ் குடிமக்களாக' மாற்ற வேண்டுகிறேன். அதுக்காக, நானே சில பெயர்களை யோசிச்சு வைச்சிருக்கேன். இதை அப்படியே ஏத்துக்கணும்னு அவசியமில்லை. நீங்க வேணும்னா, இதுக்குன்னு தமிழ் புலவர்களைக் கொண்ட ஒரு குழு அமைச்சு, நல்ல, நல்ல பெயரா வையுங்க...

அவர் அனுப்பியுள்ள பட்டியல்:

சரக்கு பெயர் தமிழ் பெயர்

1. மிடாஸ் கோல்டு - தங்கமகன்

2. நெப்போலியன் - ராஜராஜசோழன்

3. கோல்கொண்டா - கங்கை கொண்டான்

4. வின்டேஜ் - அறுவடைத் தீர்த்தம்

5. ஆபிசர்ஸ் சாய்ஸ் - அதிகாரிகள் விருப்பம்

6. சிக்னேச்சர் - கையொப்பம்

7. ஓல்டு மங் - மகா முனி

8. ஓல்டு காஸ்க் - பீப்பாய் சரக்கு

9. கேப்டன் - தனிச் சரக்கு

10. ஜானிவாக்கர் - வெளியே வா

11. ஓட்கா - சீமைத்தண்ணி

12. கார்டினல் - பொதுக்குழு

13. மானிட்டர் - உளவுத்துறை

14. பேக் பைப்பர் - "ஊத்து'க்காரன்

15. சீசர் - கரிகாலன்

16. மெக்டவல் - "மட்டை' வீரன்

17. டிரிபிள் கிரவுன் - மூணு தலை

18. மேன்சன் ஹவுஸ் - உறுப்பினர் விடுதி

19. ராயல் சேலன்ஞ் - நாற்பதும் நமதே

20. ஹேவார்ட்ஸ் 5000 - ஓட்டுக்கு 5000

21. ஜிங்காரோ - சிங்காரி சரக்கு

22. கோல்டன் ஈகிள் - தங்க கழுகு

23. கிங் பிஷர் - மீன்கொத்தி

24. மார்பியூஸ் - மயக்கி

களவாணி பார்த்தே தீர வேண்டியபடம்

களவாணி படத்தை வீட்டு அம்மாவோடு பார்க்க வேண்டும் என்று இருந்தேன்... இருந்தாலும் படத்தை பற்றிய பேச்சு அதிகமாக இருந்த காரணத்தாலும்,விகடன் வேறு 46 மார்க் போட்டு அப்படி என்ன அந்த படத்தில் இருக்கின்றது என்று பார்க்க வைக்கும் ஆர்வம் காரணமாகவும் அந்த படத்தை நான் தனியாக பாத்து தொலைத்து விட்டேன்... படத்துக்கு அழைத்து போகின்றேன் என்று சொல்லிவிட்டு ...அழைத்து போகவில்லை என்றால்....தாகத்துக்கு தண்ணி கேட்டு அது அரைமணி நேரம் கழித்துதான் என் கம்யூட்டர் டேபிளில் லொட் என்று வைக்கபடும் என்று எனக்கு தெரியும்... இருந்தாலும் நான் உங்களுக்காக ரிஸ்க் எடுத்து இருக்கின்றன்...




சரி இந்த படத்தை நான் பாக்கவேண்டும் என்று நினைக்க வைத்த இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த படத்தின் டிரைலர்... கட்டிக்கறேன்னு சொல்லு என்று வண்டி துடைத்துக்கொண்டு இருக்கும் போது... அந்த சின்ன பெண்ணிடம் பேசுவதும்.. ஒரே சின்ன பிள்ளையா பார்த்து ஏமாத்தறான் என்ற சொல்லாடலும் என் கிராமத்து பேச்சாக இருந்தது... என் மக்களை எந்த பகட்டும் இல்லாமல் திரையில் பார்த்தது போன்ற உணர்வு அது...
உங்களுக்கு இந்த திரைபடத்தை பற்றிய கதை உங்களுக்கு இந்நேரம் தெரிந்து இருக்கும் அல்லது படித்து இருப்பீர்கள்...

உண்மையான காதலன் என்பவன் யார் தெரியுமா? தான் காதலிக்கும் பெண்ணுக்கு எந்த நேரத்திலும் பிரச்சனையோ அல்லது அவமானமோ எற்படுத்தாதவன்தான் உண்மையான காதலன்...

அந்த பெண் குடும்பசூழ்நிலையில் வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டாலும்.. தான் காதலித்த பெண் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பவன்தான் உண்மையான காதலன்...

ஆனால் இப்போது பல காதலன்கள் அப்படி இல்லை காதலின் போர்வையில் ஒரு பெண்ணை மயக்கி அந்த பெண்ணை கிரக வைத்து... நம்பிக்கை மொழி பேசி அந்த பெண்ணின் நிர்வாணத்தை கேமரா செல்போனில் பதிவு செய்து.. அதை நண்பர்களுக்கு விருந்தாக்கி...பிறகு அந்த பெண்ணை மிரட்டி விருப்பபட்ட நண்பர்களுக்கு அந்த வீடியோவை காட்டி விருந்து வைத்து...இப்போது கூட ஜுனியர் விகடனில் அண்ணன் தம்பி இருவரும் ஒரு கல்லூரி பெண்ணை ஏமாற்றிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது...

இதுவா காதல்...காதலிக்கு எந்த சிறு அவச்சொல்லும் ஏற்படாமல் பாதுகாப்பவனே உண்மையான காதலன்.... அந்த வகையில் இந்த களவாணி கிரேட்....
ஒரு சின்ன சீன்... சொல்லறேன்...
களவாணி விமல்... தெரிந்து அல்லது தெரியாமல் செய்த களவாணித்தனம் அவன் காதலி மகேஷ்வரிக்கு தெரிந்து விடுகின்றது... அதனால் அவனை பார்பபதை தவிர்க்கின்றாள்... அவளிடம் எப்படியாவது மன்னிப்பு கேட்க அவளை சந்திக்க ஒரு திட்டம் போட்டு....

அவளோடு படிக்கும் பெண் வயதுக்கு வந்து விட்டதாகவும் சடங்கு சுத்த போவதாகவும் ஒரு பத்திரிக்கை அடித்து அவள் வீட்டில் கொடுக்க வைக்கின்றான் களவாணி விமல்...
இதை உண்மை என்று நம்பி மகேஸ்வரி வீட்டை விட்டு அந்த பெண்ணின் வீட்டுக்கு சைக்கிளில் வர நடுவில் அவளை மீட் பண்ணி மன்னிப்பு கேட்பது களவாணி விமலின் பிளான்....
களவாணி தன் காதலியை பார்க்கின்றான்.... அவளிடன் தன் தரப்பு நியாத்தை சொல்கின்றான்... அவள் ஏற்றுக்கொள்ளவில்லை... உன்னிடம் இனி நான் பேச போவதில்லை என்று சொல்கின்றாள்...
தன் தங்கை பொய் பத்திரிக்கை காட்டி விட்டை விட்டு போனது தெரிந்து போய் தங்கையை கையும் களவுமாக பிடிக்க முரட்டு அண்ணன் தன் பல்சரில் விரைகின்றான்...
களவாணி தன் காதலியிடம் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் அவள் கோபித்து கொண்டு நடக்க... துரத்தில் அவள் அண்ணன் பல்சரில் வருவதை பார்த்துவிட்டு... காதலியின் அண்ணன் அவனுக்கு தெரிய கூடாது என்பதற்காக பக்கத்தில் கடக்க போகும் மினிபஸ்சில் காதலியை குண்டு கட்டாக தூக்கி ஏற்றி விட்டு, அதே பஸ்சில் ஏறி ஒரு கையால் தன் காதலி வந்த சைக்கிளை பிடித்த்துகொண்டு போக... காதலியின் அண்ணன் அந்த இடத்தை கிராஸ் செய்ததும்...அதுவரை முரண்டு பிடித்த காதலி தன் அண்ணனிடம் இருந்து தன் காதலன் காப்பாற்றியது தெரிந்ததும் அமைதியாவதும் ... அதன் பிறகு எதுவும் பேசாமல் பேருந்து விட்டு இறங்கி களவாணி விமல் நடப்பது கவிதை....

இதை கையினால் பேப்பரில்.... இந்த காட்சியை எழுதிடலாம்... ஆனால் நம்புவது போல் அந்த காட்சியை எடுத்து இருப்பதுதான் சினிமா...அந்த காட்சிக்கு நிச்சயம் மெனக்கெட்டு இருக்க வேண்டும்...

தன் பெயரையும் தன் காதலி பெயரையும் ஊர் முழுவதும் எழுதி வைத்திருக்க.... அதனை களவாணி நண்பன் கோபத்தில் இருவர் பெயரையும் எல்லோருக்கு தெரிவது போல் எழுதி விட்டு வந்து மோட்டர் கொட்டகையில், தன் காதலி தன்னை புரிந்து கொள்ளவில்லை என்று உட்கார்ந்து இருக்கும் களவாணி விமலிடம் பெருமையோடு அதை சொல்லும் போது...
கயிற்று கட்டிலில் இருந்து கோபத்தோடு வேட்டி நழுவுவது தெரியாமல் தன் நண்பனை அடித்துவிட்டு.... அந்த பொண்ணு என்னை பத்தி என்ன நினைப்பா? அந்த பொண்ணுக்கு எவ்வளவு அசிக்கம்ன்னு கோபப்படறான் பாருங்க.. அதுதான் காதல் அதுதான்படம்....

இந்த படத்தின் சிறப்பே எல்லா வயதினரும் அந்த அந்த கேரக்டர்களை படத்தில் காணலாம்...அவர்கள் எல்லோரும் வாழ்ந்து இருக்கின்றார்கள்...
களவாணி படத்தின் கதை இதுதான்....

களவாணி தனம் செய்யும் அறிவழகன்(விமல்).. பக்கத்து ஊரில் அடிதடி விஷயத்தில் கொடி கட்டி பறக்கும் ஒருவனின் தங்கையை மகேஸ்வரி (ஓவியா) காதலிக்கின்றான்...அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான்... கதை..
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
1328 முறையாக இந்த கதைகளம் தமிழ் சினிமாவுக்கு இது பழசு...ஆனால் அதனை சுவைபட சொல்லி இருப்பதில் இயக்குனர் வெற்றி பெற்று இருக்கின்றார்...

இரண்டாவது வில்லனுக்கு பழைய ஆட்களை தேடாமல் ரொம்ப இயல்பாய் ஒரு பையனை பிடித்து போட்டு இருப்பது இயக்குனரின் திறமைக்கு அவரின் தன்னம்பிக்கைக்கும் ஒரு சல்யூட்..

விமல் வெற்றிக்கு முக்கியகாரணம் அந்த அலட்சியமான டயலாகடெலிவரிதான்.... சும்மாவே ஆடுவேன்... காலில் சலங்கை வேற கட்டிவிட்டா ஆட்டத்துக்கு கேக்கவா வேனும் என்று சொல்லும் அந்த டயலாக் அற்புதம்....

சின்ன சின்ன விஷயங்களில் கவனித்து அறுவடை செய்து இருக்கின்றார்கள்...

உதாரணத்துக்கு டுடோரியலில் வாத்தியார் சிகரேட் கேட்க... பாக்கெட் புல்லாக வைத்துக்கொண்டு ஒண்ணு தான் இருக்கு சார் என்று சொல்லி விட்டு முழு பாக்கெட்டையும் வீசிவிட்டு... அதன் பிறகு அதை எடுப்பது என்று நிறைய விஷயம் புதிதாய் சொல்லி இருக்கின்றார்கள்...
இளவரசு மற்றும் சரண்யா வாழ்ந்து இருக்கின்றார்கள்... எங்க அப்பன் ஆத்தாளை திரையில் பார்பது போல இருக்கு...அதுதான் அந்த இருவரின் வெற்றி
ஊரில் வம்பு பேசுவது அப்படியே டிஷ் வழியா எல்லாருக்கும் போவது போலான அந்த காட்சி அற்புதம்....
விமலோட தங்கச்சி கேரக்டர்... அதுக்காவே டைரக்டரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்...ரொம்ப இய்ல்பாக அந்த பெண்ணை நடிக்க வைத்து இருக்கின்றர்கள்...அதே போல் கதாநாயகியின் அப்பாவின் கிராமத்து வாசம் அந்த பேச்சிலும் முகத்திலும்... அற்புதமான தேர்வு
படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் படத்துக்கு பெரிய பலம்...ஊர் திருவிழா,டாஸ்மார்க் இன்டோர் மற்றும் நைட் சீன் எல்லாவற்றிலும் உழைப்பு தெரிகின்றது...
டாப் ஆங்கிளில் வயல்களையும் அதில் கருப்பு ரிப்பன் போலான தார் சாலைகளையும் அப்படியே அழகாய் அள்ளி எடுத்து வந்து இருக்கின்றார்கள்...
துரத்தல் காட்சிகளில் எந்த கன்பியசனும் பார்வையாளனுக்கு இல்லை...
அதே போல் ஒரு பாடல்காட்சியில் கோவில் மேல் நடப்பது போலான அந்த காட்சி நல்ல விஷுவல் டேஸ்ட்.. அதே போல் நண்டு வளைக்குள் கேமரா இருப்பது போலான காட்சிகள் என்று நிறைய மெனகெட்டு இருக்கின்றார்கள்...
பிகல் கிராமம் என்றால் இதுதான்.. யமாஹா வைத்து இருக்கின்றார்கள்... டிஷ் வைத்து இருக்கின்றார்கள்...பல்சர் இருக்கின்றது...கோவில் திருவிழாவில் ரீட்டா நடனம் இருக்கின்றது... செல்போன் இருக்கின்றது... பெரியப்பா என்பவர் பேச்சுக்கும், சித்தப்பன் பேச்சுக்கும் சட்டென கட்டுபடுவது...இரட்டை சடையோடு யூனிபார்மில் பள்ளிக்கு போகும் கிராமத்து பெண் பிள்ளைகள்...நைட்டு தற்கொலை செய்து கொள்ளுவாள் என தாவணியை தன் புடைவையோடு படு முடிச்சி போட்டுக்கொண்டு படுப்பது, தண்ணி அடிக்க அலையும் இளைஞர்கள், என டிபிகல் கிராமத்தை கண் முன் நிறுத்துகின்றார் இயக்குனர் சற்குணம்....

வேலை வெட்டி இல்லாத தன் பையனுக்கு காதலால்தான் பயிரை பாதுகாத்தான் என தெரிந்து சட்டென கொதிக்கும் இளவரசுக்கு இந்த படம் அவர் கேரியரில் குறித்து வைத்துகொள்ளகூடிய ஒன்று...
பாடல்களில் டம்ம டும்மா சாங்.. ஒரு நல்லசாங்....
பள்ளி சிருடையில் ஒரு மாதிரி இருக்கும் ஓவியா... மாண்டேஜ் ஷாட்டுகளில் முக்கியமாக விமல் நண்பர்களோடு டீ குடிக்கு அந்த காட்சிகளில் ரொம்ப மெச்சூரிட்டியாக அழகாக தெரிகின்றார்....

ரீட்டா ஆடல் பாடல் காட்சிகளில் கூட தொப்புள் காட்டபடவில்லை... இரத்தம் தொப்புள் என காட்சிகள் வைக்க நிறைய சான்ஸ இருந்தும் ரொம்ப டீசன்டாக படத்தை கொடுத்து இருக்கின்றார் இயக்குனர்...

படம் முடிந்து யாரும் எழுந்து போகாமல் நின்று இளவரசு சரண்யா லுட்டியை பார்த்து விட்டு போவது படத்தின் வெற்றி....
தியேட்டர் டிஸ்க்கி....

தியேட்டரில்தான் டிக்கெட் கிடைத்து...நிறைய காதலர்கள் நிழலுக்கு ஒதுங்க படத்துக்கு வந்து இருந்தார்கள்...
தியேட்டரில் யாராவது நின்னாலே ஸ்கிரின் மறைத்தது....
என் ரோவில் கடைசி சீட்டுக்கு போகும் காதலர்களில் காதலி இருட்டில் தடுக்கி என் மடியில் விழுவது போல் உட்கார்ந்து சட்டென தாங்கி பிடித்து கடைசி சீட்டுக்கு அனுப்பி வைக்க இன்டர்வெல்லில் அந்த பெண் என்னை பார்த்தும் வெட்கத்தில் குனிந்து கொண்டது...
நடு சீட் நம்பர் டிக்கெட் எடுத்து விட்டு ஒரு ஜோடி ஓர சீட்டில் உட்கார பெருமுயற்சி எடுக்க.... ஒழிந்து போங்கள் என தியேட்டர் சிப்பந்தி விட்டார்...
தியேட்டர் முழுவதும் படத்தை உற்சாகமாக பார்த்தார்கள்.... என்ன யாராவது நடந்து போனால் திரை தெரிய மறுக்கின்றது....
================
நீங்க வேன பாருங்க ஆனி போய் ஆவடி முடிஞ்சிதுன்னா அவன் டாப்பா வருவான் என்று சொல்லும் சரண்யா... அப்போது கொஞ்சமும் நினைத்து பார்த்து இருக்கமாட்டார்... இந்த படமும் டாப்பாக ரசிக்கபடும் என்று...

க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை!

அவ‌னுக்கு வ‌ய‌து 22. மாநிற‌ம். . அதிர்ந்து பேச‌மாட்டான். மிக‌ அமைதியான‌வ‌ன். சொந்த‌ ஊர் என்ன‌வோ திருவ‌ண்ணாம‌லைதான். ஆனால் வ‌சிப்ப‌து வ‌றுமைக்கோட்டுக்கு கீழே‌. அவ‌னுடைய‌ த‌ந்தை. தேர்ந்த‌ நெச‌வாளி. அவ‌ருக்கு உத‌வியாய் அவ‌ன‌து அம்மா. க‌ல்லூரி செல்லும் வ‌ய‌தில் ஒரு த‌ங்கை. அவ‌னுடைய‌ த‌ந்தை என்ன‌மோ ஸ்ரீபெரும்புதூர் ஜாம்ப‌வான்க‌ளுக்கு அடிப‌ணியாத‌வ‌ர்தான். ஆனால் அவ‌ன் ப‌ணிந்துபோக‌ த‌யாராக‌யிருந்தான். வ‌றுமைக்கோடு. எப்பாடுப‌ட்டேனும் இந்த‌ கோட்டிலிருந்து வில‌கி த‌ன் குடும்ப‌த்தை ஒரு ந‌ல்ல‌ நிலைமைக்குக் கொண்டுவ‌ந்துவிட‌ வேண்டும் என்கிற‌ வெறி. பெரும் முய‌ற்சிக்குப் பின்ன‌ர், துபாயில் ஒரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தில் அவ‌னுக்கு வேலை கிடைத்த‌து. மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் ரூ.10000.
பிற‌ந்த‌து முத‌ல், அதிக‌ப‌ட்ச‌ம் இர‌ண்டு நாட்க‌ளுக்கு மேல் த‌ன் பெற்றோரை பிரிந்த‌தில்லை அவ‌ன். ப‌ணியில் சேர்ந்த‌ பின் 2 வருடத்துக்கு ஒரு முறைதான் வீட்டுக்குப் போக‌ முடிந்த‌து. இந்த‌ பிரிவு அவ‌னை வ‌ருத்த‌ம‌டைய‌ச் செய்தாலும், த‌ன் குடும்ப‌ம் ந‌ல்ல‌ பொருளாதார‌ நிலைமைக்கு உய‌ர‌ இது அவ‌சிய‌ம் என்று க‌ருதி த‌ன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.
ப‌ண‌ம்..ப‌ண‌ம்..ப‌ண‌ம்..இது ஒன்றே முக்கிய‌ம். குடும்ப‌த்தின் வ‌றுமை ஒழிய‌ த‌ன் க‌வ‌ன‌ம் முழுதும் ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌திலேயே இருக்க‌ வேண்டும் என்ப‌து அவ‌னுடைய‌ ல‌ட்சிய‌ம், வெறி, சித்தாந்த‌ம், கொள்கை, கோட்பாடு எல்லாமே. காலை 6:30 ம‌ணிக்கு அவ‌னுடைய‌ ஷிஃப்ட் துவ‌ங்கும். ஆறு ம‌ணிக்கு முன்னே அலுவ‌ல‌க‌த்துக்குச் சென்றுவிடுவான்.
அன்று திங்க‌ள் கிழ‌மை. ப‌னி வில‌காத‌ காலை நேர‌ம். ஆறாவ‌து த‌ள‌த்தில் உள்ள‌து அலுவ‌ல‌க‌ம். த‌ரைத் த‌ள‌த்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தினான். ஆறாம் த‌ள‌ம் சென்ற‌டைந்த‌வுட‌ன் லிஃப்ட் க‌த‌வு திற‌ந்த‌போது கீழே விழுந்த‌து அவ‌னுடைய‌ உயிர‌ற்ற‌ உட‌ல்!
அங்கிருந்த‌ செக்யூரிட்டிக‌ள் அவ‌னுடைய‌ டீமுக்கு த‌க‌வ‌ல் அளித்து அவ‌னை ம‌ருத்துவ‌ம‌னைக்குக் கொண்டு செல்ல‌ ஏற்பாடு செய்த‌ன‌ர். ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ரிசோதித்த‌ ம‌ருத்துவ‌ர் ம‌றுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ் நோ மோர்". 'டெட் ஆன் அரைவ‌ல்' என்று ரிப்போர்ட்டில் ப‌திவு செய்தார்.
பின்ன‌ர் அவ‌னுக்கு நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்த‌போது தெரிய‌வ‌ந்த‌து. அவ‌னுக்கு புகை, குடி என்று எந்த‌ ப‌ழ‌க்க‌மும் இல்லை. ஒவ்வொரு மாத‌மும் அவ‌னுக்கென்று ரூ.3000 எடுத்துக்கொண்டு மீதி ப‌ண‌த்தை த‌ன் குடும்ப‌த்துக்கு அனுப்பிவிடுவான். அந்த‌ 3500ல் போக்குவ‌ர‌த்து, அலைபேசி, உண‌வு ஆகிய‌வ‌ற்றிற்கான‌ செல‌வுக‌ள் அட‌ங்கும். செல‌வைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ அவ‌ன் மேற்கொண்ட‌ ஒரு முடிவு..தினமும் காலை உண‌வைத் த‌விர்த்து ஒரு நாளைக்கு இரு வேளை ம‌ட்டுமே உண்ணுவ‌து.
இந்த‌ ப‌ழ‌க்க‌ம் வெகு நாட்க‌ளாய்த் தொட‌ர்ந்து உட‌லுக்குள் வாயு உருவாகி அது இத‌ய‌த்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வ‌ய‌தில் மார‌டைப்பு! இது ஏதோ க‌ற்ப‌னையாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ வ‌ரி அல்ல‌. அவ‌னுடைய‌ உண‌வு ப‌ழ‌க்க‌த்தை அவ‌ன் ந‌ண்ப‌ர்க‌ள் கூற‌க்கேட்டு அறிந்த‌ பின் ம‌ருத்துவ‌ர் சொன்ன‌து.
ப‌ண‌ம் ஒன்றையே பிராத‌ன‌மாக‌க் க‌ருதி ப‌ர‌ப‌ர‌வென‌ ப‌ற‌ந்துகொண்டிருக்கும் இந்த‌ யுக‌த்தில், ந‌ம்மில் பெரும்பாலானோர் காலை உண‌வைத் த‌விர்த்துவிடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும் கார‌ண‌ம்.."டைம் இல்ல‌". சாப்பிடுவ‌த‌ற்குக் கூட‌ நேர‌மில்லாம‌ல் அப்ப‌டி என்ன‌ கிழித்துவிட‌ப் போகிறோம்?

இத‌ற்கு மேல் இதைப்ப‌ற்றி நீங்க‌ளே சொல்லுங்க‌ள்!

                       நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
               உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
                                        உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
                 அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!

வாழ்கையில் வெற்றி பெற....

அறிவாளி,வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வான்.
புத்திசாலி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வான்!

கடவுளை நம்பு!
அனால்,
கடவுளை மட்டுமே
நம்பிக்கொண்டு இருக்காதே!
நாளை வரப்போகும்
இன்ப துன்பம் அனைத்தும்
நேற்றில் அடங்கியது!
நாளை நமக்காக
காத்து இருக்கிறது!
சோர்வை அகற்றி
நம்பிக்கை வளர்ப்போம்!

விரும்பியதை செய்வது
சுகந்திரம்!
செய்வதை விரும்புவது
சந்தோசம்!

நமது தோற்றம் எதிரே
இருப்பவரின் கண்களை கவரும்;
நடத்தை இதையத்தை கவரும்.

வழியைக் கண்டுபிடி!
அல்லது
உருவாக்கு!

நாளை, நாளை என்று
எந்த ஒரு செயலையும்
ஒத்தி போடுவது
வெற்றிக்கு தடையாகும்!
கவலை
நாளைய துயரங்களை
அழிப்பதில்லை!
இன்றைய வலிமையை
அழித்துவிடும்!
பூனை கருப்ப,
வெள்ளையணு கவலைப்படாதே...
அது எலியைப் பிடிக்கிரதானு
மட்டும் பாரு!
சொர்க்கமோ, நரகமோ
நாம் தேடி கண்டுபிடிக்க வேண்டிய
இடங்கள் அல்ல; நாமே உருவாக்கி
கொள்கிற இடங்கள்!

வீழ்வது வெட்கமல்ல....
ஆனால்,
வீழ்ந்தே கிடப்பது தான்
வெட்கம்.

துணிவுடன் வாழ்க்கையில்
எதையும் செய்-அதன்
தன்மையில் புது அர்த்தங்கள்
மலரும்!

நம்பிக்கையுள்ளவர்
ஒவ்வொரு சிரமத்திலும்
ஒரு வாய்ப்பை காண்கிறார்!
நம்பிக்கை இல்லாதவர்
ஒவ்வெரு வாய்ப்பிலும்
ஒரு சிரமத்தை காண்கின்றார்!
யாரும் உன்னை குறை கூறினால்
அது உண்மையாயின் திருத்தி கொள்!
பொய்யாயின் நகைத்து விடு!

முயற்சிகள் தவறலாம்!
அனால்,
முயற்சிக்க தவறாதே!

முடியும் வரை முயற்சி செய்!
உன்னால் முடியும் வரை அல்ல!
நீ நினைத்த செயல்
முடியும் வரை!

சோகம் எனும் பறவை
உங்கள் தலைக்கு மேல்
பறப்பதை தடுக்க இயலாது!
ஆனால், தலைக்கு மேல்
கூடு கட்டுவதை தவிர்க்கலாம்!
வாழ்க்கையில் நீ சந்திக்கும்
ஒவ்வெரு மனிதனும்
உனக்கு ஆசான்!
அவர்களிடம் நீ கற்றுக்கொள்
ஏதேனும் ஒன்று இருக்கும்!

முயல் வெல்லும்!
ஆமையும் வெல்லும்!
முயலாமை வெல்லாது!