வடுவூர்
நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது.. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே...
பணம்
படித்ததி பிடித்தது
பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியாது . பணத்தால் அவமானம் படாமல் வாழலாம். 1.பணம்
உங்களிடம் இல்லை என்றால் நீங்கள் எவ்வளவு பெரிய நேர்மையாளனாக இருந்தாலும் உங்கள்
மீது எவ்வளவு மரியாதை இருந்தாலும் அது கானல் நீர் ஆகிவிடும் . 2. உங்களிடம் பணம்
இல்லை என்றால் உதாசீனப்படுத்தப்படுவீர்கள் 3. உங்களிடம் பணம் இல்லை என்றால் உங்களை
ஒதுக்கி வைத்து அவமானப்படுத்துவார்கள் 4. உங்களிடம் பணம் இல்லை என்றால் கட்டிய
மனைவி, பெற்ற பிள்ளைகள்,உறவுகள்,நண்பர்கள் இவர்களால் பல நேரங்களில் அவமானப்பட
நேரிடும். 5. மரம் சுட்டே கரியாகவில்லை மயிறு சுட்டா கரியாக போகிறது என்கிற வசனம்
எல்லாம் பேசுவதற்கு நல்லா இருக்கும். அவமானத்தை தலை குனிவதை தடுக்க இயலாது. 6.
பணத்தால் எல்லாவற்றையும் சாதித்து விட முடியாது என்கிற டயலாக் எல்லாம் தூக்கி
போடுங்கள் பணம்தான் உங்களை மரியாதை உள்ள மனிதனாக வாழ வைக்கும் .இது நான் கண்ட அனுபவ
உண்மை. 7. நம்மிடம் பணம் இல்லை என்றால் நம் மனமே நம் சொல்வதைக் கேட்காது நம் எண்ணமே
நம்மை தூற்ற தொடங்கும்.இவன் ஒரு Useless, பிழைக்கத் தெரியாதவன்,வாய் பட்டா, என்று
பேசுவது நக்கலாக பார்ப்பது இதெல்லாம் நடக்கும். 8. இளமையில் பணத்தை தேடி
சம்பாதிக்கவில்லை என்றால் முதுமையில் அவமானப்பட வேண்டி இருக்கும் .மனம் சஞ்சல
ப்படும். 9. உன்னிடம் உள்ள குறைந்த தொகை வைத்து சிறப்பாக நீ வாழ்ந்தாலும்
மற்றவரிடம் கையேந்தி நிற்காமல் இருந்தாலும் சபைகளில் சங்கடங்களுக்கு நிச்சயமாக ஆளாக
வேண்டி வரும். 10. இளமையில் சம்பாதித்த தந்தையின் சொத்தை சந்ததிகள் பாதுகாப்பாக
வைத்துக் கொள்ளுங்கள். நீங்க நன்றாக சம்பாதியுங்கள் தங்களை வளர்த்த பெற்றோர்கள்
சந்தோஷமாக வாழ பணம் ஒரு பிரதானம். 11. எனது பதிவில் நிச்சயமாக பலருக்கு மாற்று
கருத்து இருக்கலாம் .சர்க்கரை என்று சொல்லியும் பேப்பரில் எழுதியும் நாக்கால்
நக்கினால் நிச்சயம் இனிக்காது. 12. ஓடுகின்ற வரை ஓடிக்கொண்டே இருங்கள் உழைத்துக்
கொண்டே இருங்கள் பணத்தை சம்பாதித்துக் கொண்டே இருங்கள் கடைசி காலம் வரை. 13.எந்த
கஷ்டமாக இருந்தாலும் பணத்தால் அதை தீர்ப்பதற்கும் குறைப்பதற்கும் வழி வகை உண்டு .
14.ஏதோ ஒரு சில சந்தர்ப்பங்களில் பணத்தால் முடியாத சில சூழல்களும் மனிதனுக்கு
ஏற்படுவது உண்டு. 15.அதை விதிவிலக்காக வைத்துக் கொள்வோம் பணத்தைத் தேடி ஓடுவோம்
பந்தங்களும் பாசங்களும் சொந்தங்களும் நட்புகளும் நாடிவரும். உங்களை தேடி வரும்.
மீண்டும் ஒரு பதிவுடன்
எறும்புகள்
என்ன ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு*!
எறும்புகள், குளிர்காலத்திற்காக சேமித்து வைக்க வேண்டிய தானியங்கள் மற்றும் விதைகளை சேகரித்த பிறகு, அவற்றை தங்கள் கூடுகளில் சேமிப்பதற்கு முன்பு பாதியாக உடைக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏனென்றால், விதைகளை பாதியாக உடைப்பதன் மூலம், மிகவும் சரியான சூழ்நிலைகள் இருந்தபோதிலும் அவை முளைப்பதைத் தடுக்கிறது.
ஆனால் எறும்பு கூட்டில் சேமிக்கப்பட்ட கொத்தமல்லி விதைகள் எப்போதும் 2 துண்டுகளுக்குப் பதிலாக 4 துண்டுகளாக உடைக்கப்படுவதைக் கண்டுபிடித்தபோது விஞ்ஞானிகள் திகைத்துப் போனார்கள்.
சில ஆய்வக ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, கொத்தமல்லி விதை மட்டுமே இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகும் முளைக்கக்கூடிய ஒரே விதை, ஆனால் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பிறகும் முளைக்க முடியாது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
அப்படியானால் இந்த சிறிய சிறிய உயிரினங்கள் இதையெல்லாம் எப்படி அறிந்தன? மேலும் மனிதர்களாகிய நாம் கடவுளின் ஒரே புத்திசாலித்தனமான படைப்புகள் என்று நினைத்தோம்.
உண்மை என்னவென்றால், நமக்கு மிகக் குறைவாகவே தெரியும் & ஒவ்வொரு உயிரினத்திலிருந்தும் அது மிகவும் சிறியதாக இருந்தாலும் கூட கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
*கடவுள் பெரியவர் & பாரபட்சமற்றவர்*
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)