*மாங்கல்ய சரடும், தலைமுடி கூந்தலின் மகத்துவமும்

*அக்ரஹார சாஸ்த்ரம்:* *மாங்கல்ய சரடும், தலைமுடி கூந்தலின் மகத்துவமும்!* *இன்றைய காலக்கட்டத்தில் பேஷனாக எண்ணிக் கொண்டு பலரும் தங்கச்சங்கிலியில் மாங்கல்யத்தை சேர்த்து விடுகின்றனர். "மாங்கல்யச் சரடைத்தான்" சுமங்கலித்துவம் நிறைந்த மங்களப் பொருளாகக் குறிக்கின்றனர் சான்றோர்.* *பஞ்ச பூத சக்திகள் நிறைந்து கிட்டுவதுதான் சுமங்கலித்துவம் ஆகும். பருத்தி இழைகளால் ஆன மாங்கல்யச் சரடிற்குத்தான் பஞ்ச பூத தெய்வீக சக்திகளை ஈர்த்து சுமங்கலித்துவ சக்தியாக மாற்றக்கூடிய அருட்சக்தி உண்டு. ஆதலின் மாங்கல்யத்தை மாங்கல்யச் சரடில்தான் கோர்க்க வேண்டுமே தவிர தங்கச்சங்கிலியில் ஒரு போதுகூடாது.* *சரடினால் மாங்கல்யம் போடுபவர்கள் மட்டும் நீண்ட ஆயுளுடன் இருப்பாரா? என்ற சந்தேகம் எழலாம். ஆனால் நீங்கள் நினைக்கும் எண்ணம் வேறு சாதாரணமான நிலையில் கூட பெண்களின் மஞ்சள் கயிற்றுக்கு என்று ஒரு மகிமை உண்டு. தோஷங்கள் உடனே அவரை பாதிக்காது. கர்ம வினைகள் குறையத் தொடங்கும்.* *குங்கும அர்ச்சனையின் பலன்கள் சரடுக்கு உண்டு. உடனே போகும் உயிரை கூட அந்த தாலி சரடின் மகத்துவம் காக்கும். தீவினை தோஷங்களில் ஒரு பகுதியை மாங்கல்யச் சரடானது தம்முன் ஈர்த்து ஆத்மாக்னியில் பஸ்மம் செய்து விடுகின்றது.* *ஏனெனில் மாங்கல்யமானது ஒரு இல்லறப் பெண்மணியின் கழுத்தில் எப்போதும் திகழ்வதால் அதுவே தெய்வீகத் துணையாக இருந்து எப்போதும் சுமங்கலித்துவதைக் கட்டி காப்பதாகும். பெண்களுக்கு மாங்கல்யமே பிரம்ம முடிச்சு ஆகும்.* *பின்னலின் மகத்துவம்:* *பின்னல் என்பது உறவைக் குறிக்கிறது. முடியை விரித்து விடுவது அமங்கலமானது. அதாவது முடி என்பது அழகான கூந்தல். அந்த கூந்தலை பின்னி பூ வைத்து பார்ப்பதன் அழகே தனி. ஆனால் இன்றைய சூழல் அப்படியா?* *தலைமுடியின் நுனி வழியாக ஆத்மசக்தி வெளியேறுகிறது. நல்ல, தீய உணர்வுகள் அல்லது அதிர்வுகள் வந்து செல்வதற்கான ஊடகம் போன்றது முடியின் நுனி. அப்படியானால் மொட்டை அடித்துக் கொள்கிறார்களே அவர்களை என்ன சொல்வது என்ற கேள்வி எழும் உங்களுக்குள். வெளியிலிருந்து பெறுவதற்கும் ஒன்றுமில்லை. நம்மிடமிருந்து போவதற்கும் ஒன்றுமில்லை என்பதை உணர்த்துவற்காக.* *தலைவிரி கோலத்தை தவிர்ப்போம். இது உறவின் மீதான பிடிப்பை அறுக்கக்கூடியது. பின்னல் இதன் அமைப்பு திரிவேணி சங்கமத்தை ஒத்தது. 3 நதிகள் சேரும் போது இரண்டு நதிகள் கண்களுக்கு புலப்படும். (கங்கை, யமுனை) ஒரு நதி கண்களுக்கு புலப்படுவதில்லை (சரஸ்வதி). இதுபோலவே பின்னலின் 3 பகுதிகளில் இரண்டு பகுதிகளே புலப்படுகின்றன.* *பின்னலின்* *வலது - பிறந்த வீடு* *இடது - புகுந்த வீடு* *நடுப்பகுதி - பெண்.* *தன்னை மறைத்து இரு வீட்டாரையும் இணைத்து அழகுற தோற்றமளிக்கச் செய்வதே இதன் பொருளாகும். தன்னை முன்னிறுத்தும் பெண்ணை காட்டிலும் தன் குலத்தை முன்னிறுத்துபவளே உயர்ந்தவள் ஆவாள். ஆகையினால் பின்னல் வெறும் அலங்காரம் அல்ல. வாழ்வின் தத்துவம்.*

வாழ்க்கை வேறு மாதிரி

எனக்குத் தெரிந்து 80 -களில் தொலைக்காட்சிப் பெட்டி வரும் வரை வாழ்க்கை வேறு மாதிரி இருந்தது....! * சாயங்கால வேளைகளில் வீட்டில் விளக்கேற்றி விட்டு, பெரியவர்கள் சிறிது நேரம் வாசலில் உட்கார்ந்து கொண்டு, அக்கம், பக்கத்தவர்களுடன் பேசிக்கொண்டிருப்பார்கள். * குழந்தைகள் அனைவரும் ஓடி, ஆடி, விளையாடிக் கொண்டிருப்பார்கள். * தெருவில் வேக வாய்த்த கடலை, கருப்பு உளுந்து, பஞ்சு மிட்டாய், இன்னும் பல நொறுக்குத் தீனி விற்பவர்கள் விற்றுக் கொண்டிருப்பார்கள். * மெல்ல பொழுது சாயும் நேரத்தில், குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்ய சென்றவுடன், அம்மாக்களும் வீட்டுக்குள் சென்று விடுவார்கள். * வேலை முடிந்து அப்பாக்களும் வரும் நேரம் அது. சில வீடுகளில் அப்பாக்கள் வெளியே செல்லும் நேரமும் கூட..! பாட்டிக்கள் மட்டும் யாருடனாவது பேசிக் கொண்டிருப்பார்கள். * வாழ்க்கைச் சக்கரம் மெதுவாக நிதானமாக போய் கொண்டிருந்தது..! * ஆல் இந்தியா ரேடியோவில் பகல் வேளையில் பல நல்ல நிகழ்ச்சிகளை ஒலிப்பரப்புவார்கள்...! மிக நல்ல கருத்துகளையும், புதிர்களையும் நடு நடுவே சொல்வார்கள்...! * இரவுகளில், இனிமையான, அருமையான பாடல்கள் ஒலிப்பரப்பாகும். எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டு, அந்த அமைதியானச் சூழலில் TMS, AM ராஜா, P.சுசீலா, PB Srinivas, SPB...... பாடிய பழைய பாடல்களை கேட்க ஆனந்தமாக இருக்கும்...! * வணிக விளம்பரம் இல்லாமல், முழுப் பாடல்களையும் கேட்க முடிந்த காலமது...! இலங்கை வானொலியும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருந்தது. * அப்துல் ஹமீது , கே.எஸ். ராஜாவின் காந்தக் குரலால் கவரப்பட்டவர்கள் பலர். பல நிகழ்ச்சிகளையும் நிறைய தகவல்களுடன் கேட்பவர் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் தொகுத்து வழங்கியவர்கள்...! * அநேகமாக எல்லோர் வீட்டிலும் வானொலி பெட்டி மிகவும் பெரியதாக இருந்தது. அதை on பண்ணியவுடன், நிதானமாக(?) ஒரு பல்பு உள்ளே எரியும். அதைத் தொடர்ந்து சிறிய சத்தத்துடன் வேண்டுமென்ற அலை வரிசையில் பாட்டு கேட்கலாம். * உள்ளே இருக்கும் vaccum tubes எல்லாம் வெளியே தெரியும். knobs எல்லாம் பெரியதாக இருக்கும். பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருக்கும் அந்த வானொலி பெட்டிகள் எல்லாம் எடையும் அதிகம். மின் இணைப்பில் மட்டுமே வேலை செய்யும். * வெளியே ஏதாவது மோட்டார் பைக் சென்றாலோ அல்லது வேறு அதிர்வு ஏற்பட்டாலோ , ரேடியோ கொர்ர் ர் ர் ர் ...... என்று சத்தம் போடும்..! * அப்போதெல்லாம் மர்பி ரேடியோ மிகவும் பிரபலம். அந்த விளம்பரத்தில் வாயில் விரலை வைத்து இருக்கும் கொழுகொழு குழந்தை படம் அதை விடவும் பிரபலம். * காலையில் அம்மா எழுந்து ஸ்கந்த ஷஷ்டி கவசம் , சுப்ரபாதம் போன்ற பாடல்களை டேப் ரெக்கார்டரில் போட்டுக் கேட்டுக் கொண்டே வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பார். அதற்கென்று ஒரு சிறிய டேப் ரெக்கார்டர் வைத்திருந்தார். * நடு நடுவே பாட்டு நிற்கும் பொழுது, கேசட்டை வெளியே எடுத்து ஒரு பேனாவோ , பென்சிலோ வைத்து மெதுவாக அந்த துளையில் வைத்து சுற்றி சரி செய்வார்கள்...! * விவரம் தெரியாத குழந்தைகள் டேப் மேக்னடிக் ரீலை முழுவதுமாக உருவி அலம்பல் செய்வதும் உண்டு...! * சில சமயங்களில், மேக்னடிக் ரீல் உள்ளே மாட்டிக்கொண்டு 'கிர்' என்ற சத்தத்துடன் நின்று போவதும் உண்டு...! * இன்றும், பாட்டுக் கேட்டு கொண்டே வீட்டு வேலைகள் செய்வதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது...! * பல (தமிழ்/ஹிந்தி ) சினிமா பாடல் காசெட்டுகள், சுவாமி பாட்டு காசெட்டுகள், ஐயப்பன் சீசனில் யேசுதாஸ், மதுரை சோமுவின் பாடல்கள், கார்த்திகை மாதத்தில் TMS - இன் உள்ளம் உருக வைக்கும் முருகன் பாடல்கள்,சினிமா வசனங்கள் உள்ள காசெட்டுகள், சௌராஷ்டிரா நாடகங்கள், நாங்கள் பேசி அதை ரெக்கார்ட் செய்த காசெட்டுகள் என்று பலவும் எங்களிடம் இருந்தன. பட்டிக்காடா பட்டணமா , தில்லானா மோகனம்பாள், திருவிளையாடல், திரிசூலம் மற்றும் பல சிரிப்புக் காட்சி வசனங்கள் மனப்பாடம் செய்யும் அளவுக்கு கேட்டிருக்கிறோம். * இதற்கு முன், கிராமபோன் இருந்தது. அதை சுற்ற சுற்ற , ஊசி முனையை கவனமாக இசைத்தட்டின் மேல் வைத்தால் பாட்டு கேட்கும். ஸ்பீக்கர் மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும். இன்னும் சிலர், அதை வைத்திருக்கிறார்கள்...! இசைத்தட்டுக்கள் சிறிய மற்றும் பெரிய வடிவங்களில் கிடைக்கும். * பிறகு, கையில் வசதியாக பிடித்துக் கொள்ளும் வகையில், மிகச் சிறிய வானொலி பெட்டி வந்தது. அதை எங்கு வேண்டுமென்றாலும் எடுத்து செல்லலாம். மிகவும் வசதியாக இருந்தது. * பள்ளி, கல்லூரி நாட்களில் மாணவர்கள் காதோடு காதாக கிரிக்கெட் ஸ்கோர் கேட்கவும், கமெண்டரி கேட்கவும் வசதியாக இருந்தது. அதுதான், அப்போதைய பேஷன்...! * ஆர்வ மிகுதியால், உள்ளே என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்து விட்டு (அழகாக சிறியதாக இருந்த diode , capacitors ), மூட தெரியாமல் அடி வாங்கிய அனுபவமும் உண்டு...