பனை மரம்

பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவைகள்... 1. 🌴ஆண் பனை 2. 🌴பெண் பனை 3. 🌴கூந்தப்பனை 4. 🌴தாளிப்பனை 5. 🌴குமுதிப்பனை 6.🌴சாற்றுப்பனை 7. 🌴ஈச்சம்பனை 8. 🌴ஈழப்பனை 9. 🌴சீமைப்பனை 10. 🌴ஆதம்பனை 11. 🌴திப்பிலிப்பனை 12. 🌴உடலற்பனை 13. 🌴கிச்சிலிப்பனை 14. 🌴குடைப்பனை 15. 🌴இளம்பனை 16. 🌴கூறைப்பனை 17. 🌴இடுக்குப்பனை 18. 🌴தாதம்பனை 19. 🌴காந்தம்பனை 20. 🌴பாக்குப்பனை 21. 🌴ஈரம்பனை 22. 🌴சீனப்பனை 23. 🌴குண்டுப்பனை 24. 🌴அலாம்பனை 25. 🌴கொண்டைப்பனை 26. 🌴ஏரிலைப்பனை 27. 🌴ஏசறுப்பனை 28. 🌴காட்டுப்பனை 29. 🌴கதலிப்பனை 30. 🌴வலியப்பனை 31. 🌴வாதப்பனை 32. 🌴அலகுப்பனை 33. 🌴நிலப்பனை 34. 🌴சனம்பனை பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் : பனை உணவுப் பொருட்கள் : 🌴நுங்கு 🌴பனம் பழம் 🌴பூரான் 🌴பனாட்டு 🌴பாணிப்பனாட்டு 🌴பனங்காய் 🌴பனங்கள்ளு 🌴பனஞ்சாராயம் 🌴வினாகிரி 🌴பதநீர் 🌴பனங்கருப்பட்டி 🌴பனைவெல்லம் 🌴சில்லுக் கருப்பட்டி 🌴பனங்கற்கண்டு 🌴பனஞ்சீனி 🌴பனங்கிழங்கு 🌴ஒடியல் 🌴ஒடியல் புட்டு 🌴ஒடியல் கூழ் 🌴 புழுக்கொடியல் 🌴முதிர்ந்த ஓலை 🌴 பனை குருத்து உணவுப்பொருள் அல்லாதவை : 🌴பனை ஓலைச் சுவடிகள் 🌴பனை ஓலைத் தொப்பி 🌴குருத்தோலை வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் : 🌴பனையோலை 🌴நீற்றுப் பெட்டி 🌴கடகம் 🌴பனைப்பாய் 🌴கூரை வேய்தல் 🌴வேலியடைத்தல் 🌴பனைப்பாய் 🌴பாயின் பின்னல் 🌴பனையோலைப் பெட்டி விவசாயப் பயன்பாட்டுப் பொருட்கள் : 🌴கிணற்றுப் பட்டை 🌴எரு 🌴துலா அலங்காரப் பொருட்கள் : 🌴பனம் மட்டை 🌴வேலியடைத்தல் 🌴நார்ப் பொருட்கள் 🌴தட்டிகள் பின்னல் வேறு பயன்பாடுகள் : 🌴கங்குமட்டை 🌴தும்புப் பொருட்கள் 🌴விறகு 🌴மரம் கட்டிடப்பொருட்கள் : 🌴தளபாடங்கள் 🌴பனம் விதை 🌴எரிபொருள் கிடைக்கும் பனை உணவுப் பொருட்கள் : 🌴 பனங்கருப்பட்டி 🌴பனைவெல்லம் 🌴சில்லுகருப்பட்டி 🌴சுக்கு கருப்பட்டி 🌴பனங்கற்கண்டு 🌴பனஞ்சக்கரை 🌴 பனங்கிழங்கு மாவு 🌴 பனங்கிழங்கு சத்துமாவு 🌴பதநீர் 🌴பனம்பழம் ஜுஸ் 🌴பனை விதை 🌴பனங்கன்று 🌴பனங்கிழங்கு 🌴பனைப்பாய் 🌴புழுக்கொடியல் 🌴ஓடியல் 🌴நாம் ஒவ்வொருவரும் இரு பனை விதைகளை நடவு செய்தால் வரும் காலம் எப்படி இருக்கும் என்று யூகித்துப் பாருங்கள் √

உணவு 👍🏻

”வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்ததும் சா*க வேண்டியதுதான்” என்று கிராமங்களில் விரக்தியாகச் சொல்வதைக் கேள்விப் பட்டிருக்கிறோம். இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சில இடங்களில் அதை நடைமுறையிலும் பார்க்க முடிகிறது. ஆனால் நம் முன்னோர்கள் உணவை மருந்தைப் போல அளவாகவும், பத்தியமாகவும் உண்டார்கள். மருந்தே உணவாக இருந்தது என்று கூடச் சொல்லலாம். அவர்களது சமையலறையில் மருத்துவ குணமுள்ள பொருட்களே அதிகம் இருந்தன. மிளகு, சீரகம், வெந்தயம், மல்லி(தனியா) என்று பல மூலிகைப் பொருட்களை உணவில் பயன்படுத்தினர். இவைகளைப் பயன்படுத்தி குழம்பு, ரசம் எல்லாம் சமையல் செய்தனர். மஞ்சள் பொடி முக்கிய இடம் வகித்தது. அது உணவுப் பொருள் வேகும்போது சத்துக்களை இழந்துவிடாமல் இருக்கவும், குடல் புண்ணை ஆற்றவும், கிருமி நாசினியாகவும் பயன்பட்டது. துவரம் பருப்பை அவர்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளவில்லை. பாசிப்பயிரையே அவர்கள் அதிகம் பயன்படுத்தியுள்ளனர். காரம் தேவைப்படும் போதெல்லாம் மிளகையே பயன்படுத்தியுள்ளனர். கறிவேப்பிலை கரைத்த நீர் மோர், சுக்கு பொடியிட்ட பானகம், கொத்துமல்லிக் காபி போன்றவற்றையே விருந்தினர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். உளுந்தை அவர்கள் குறைவாகவே உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். காலையில் நீராகாரத்தை உண்டனர். தயிரைவிட மோர் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இரவு செப்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசியைப் போட்டு வைத்து, அதிகாலையே எழுந்து அந்த நீரைப் பருகிவிட்டு தியானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். மேலும் வாழையிலை, வாழை மரப்பட்டைகள் இணைந்த ஏடுகள், மந்தார இலை இவற்றையே உணவு உண்ண பயன்படுத்தி இருக்கிறார்கள். மற்ற உலோகங்களில் சூடான உணவை போடும் போது ஏற்படும் இரசாயன மாற்றம் இந்த இலைகளில் ஏற்படுவதில்லை. மாறாக நன்மையே செய்கிறது என்று அறிந்து வைத்திருந்தார்கள். மதிய உணவுக்கு ஒருமணி நேரத்திற்கு முன்பே அவர்கள் வேறு எதையும் உட்கொள்ளமாட்டார்கள். உணவுக்கு முன் நீர் அருந்தினால் அது ஜடாராக்கினியை அவித்துவிடும் என்று உணவுக்கு முன் நீர் அருந்தமாட்டார்கள். எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுப் பண்டங்கள், கடின முயற்சியால் ஜீரணமாகும் உணவுப் பண்டங்கள் என்று அவர்கள் உணவு பிரிக்கப்பட்டிருந்தது. பசியினால் சுருங்கியிருக்கும் உணவுக் குழாயில் சேதம் ஏற்பட்டு விடும் என்பதால் பரிமாறி முடிக்கும் வரை உணவை தொடமாட்டார்கள். உண்ணும்போது அந்தக் குழாயை சிறிதுசிறிதாக அகலப்படுத்தும் முறையாகவே அவர்கள் உணவுப் பழக்கம் இருந்தது. இலையில் பதார்த்தங்கள் பரிமாறியதும் சாதம் வரும். அதற்கருகிலேயே பருப்பு வைக்கப்படும். நெய்யை சாதத்தின் மீது ஊற்றிய பின்னர் உண்ணத் துவங்குவார்கள். அதுவும் முதலில் சிறிதளவு நீரைக் கையில் எடுத்து இலையைச் சுற்றி ஊற்றிவிட்டு, மீதம் உள்ள துளிகளைப் பருகுவார்கள். இலையைச் சுற்றி ஊற்றுவதால் இலைக்கு சிறு பூச்சிகள் எறுப்புகள் வராது. மீதமுள்ள துளிகளைப் பருகுவதால் அது சுருங்கிய உணவுக் குழாயில் ஈரப்பசையை உண்டாக்கி முன் செல்லும். இப்படி நீரால் சிறிது உணவுக் குழாய் விரிவடையும் போது, பருப்பு நெய் கலந்த சாதத்தை உண்ணுவார்கள். அது நெய்யினால் வழுக்கிக் கொண்டு போவதுடன் உணவுக் குழாயை மேலும் விரித்து விடும். பருப்பு ஜீரணமாக அதிக சக்தி தேவை என்பதால் உணவு உஷ்ணமாக இருக்கும் போதே பருப்பு மற்றும் சாம்பார் சாதத்தை சாப்பிட்டு விடுவார்கள். இந்த இரண்டு உணவுகளுக்குமே ஜீரண சக்தி அதிகம் தேவைப்படும் என்பதால் அடுத்ததாக எளிதில் ஜீரணமாகக் கூடிய மற்றும் ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் மருத்துவ குணமுள்ள ரசம் சாதத்தை உண்பார்கள். அடுத்து மோர் சாதம். இது உணவைப் புளிக்க வைத்து எளிதில் ஜீரணமாக உதவும். அதற்க்குத் துணையான ஊறுகாய்களும், அதிலுள்ள அமிலத் தன்மை (எலுமிச்சை, நார்த்தை) உப்பு, மிளகு போன்றவைகளும் மேலும் ஜீரணத்திற்கு உதவும். பண்டைய காலங்களில் ஊறுகாய்க்கு கடுகு எண்ணெயும், மிளகுமே பயன்பாட்டில் இருந்திருக்கிறது. இன்றோ நாகரீகம் என்ற பெயரில் மசாலா நாற்றத்துக்கு மயங்கி, கண்ட கண்ட வேளைகளில் கண்ட கண்ட உணவுகளை உள்ளே தள்ளி குடலையும், உடலையும் கெடுத்துக் கொள்கிறோம். இப்படி எல்லாம் நடக்காமல் இருக்க, திட்ட மிட்ட உணவுப் பழக்கங்களைக் கையாண்ட நம் முன்னோர்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. நாமும் இயன்றவரை முன்னோர் உணவுப் பழக்கங்களை கையாள முயற்ச்சிப்போம். “ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம்” “ஆரோக்ய சமூகம் உருவாகட்டும்".. -படித்ததில் பிடித்தது

*நாட்டு மருந்து🙏🏻

*நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..? *பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!* *அருகம்புல் பொடி* அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பொடி* பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது *கடுக்காய் பொடி* குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். *வில்வம் பொடி* அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது *அமுக்கரா பொடி* தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. *சிறுகுறிஞான் பொடி* சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். *நவால் பொடி* சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது. *வல்லாரை பொடி* நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது. *தூதுவளை பொடி* நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது. *துளசி பொடி* மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது. *ஆவரம்பூ பொடி* இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும். *கண்டங்கத்திரி பொடி* மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது. *ரோஜாபூ பொடி* இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும். *ஓரிதழ் தாமரை பொடி* ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா. *ஜாதிக்காய் பொடி* நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும். *திப்பிலி பொடி* உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது. *வெந்தய பொடி* வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது. *நிலவாகை பொடி* மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும். *நாயுருவி பொடி* உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது. *கறிவேப்பிலை பொடி* கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு. *வேப்பிலை பொடி* குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது. *திரிபலா பொடி* வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். *அதிமதுரம் பொடி* தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும். *துத்தி இலை பொடி* உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து. *செம்பருத்திபூ பொடி* அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது. *கரிசலாங்கண்ணி பொடி* காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது. *சிறியா நங்கை பொடி* அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது. *கீழாநெல்லி பொடி,* மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது. *முடக்கத்தான் பொடி* மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது *கோரைகிழங்கு பொடி* தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது. *குப்பைமேனி பொடி* சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது. *பொன்னாங்கண்ணி பொடி* உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது. *முருஙகைவிதை பொடி* ஆண்மை சக்தி கூடும். *லவங்கபட்டை பொடி* கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது. *வாதநாராயணன் பொடி* பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும். *பாகற்காய் பவுட்ர்* குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். *வாழைத்தண்டு பொடி* சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது. *மணத்தக்காளி பொடி* குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும். *சித்தரத்தை பொடி* சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது. *பொடுதலை பொடி* பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும். *சுக்கு பொடி* ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது. *ஆடாதொடை பொடி* சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது. *கருஞ்சீரகப்பொடி* சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும். *வெட்டி வேர் பொடி* நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும். *வெள்ளருக்கு பொடி* இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும். *நன்னாரி பொடி* உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது. *நெருஞ்சில் பொடி* சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும். *பிரசவ சாமான் பொடி* பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது. *கஸ்தூரி மஞ்சள் பொடி* தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும். *பூலாங்கிழங்கு பொடி* குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும். *வசம்பு பொடி* பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும். *சோற்று கற்றாழை பொடி* உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும். *மருதாணி பொடி* கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும். *கருவேலம்பட்டை பொடி* பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும். ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை,இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும். இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..? 1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். 2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். 3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும். 4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். 5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும். 6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். 7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும். நன்றி வணக்கம்.