நமக்கான நேரம் வரும்
படித்ததில் பிடித்தது
இரண்டு மாம்பழங்களும் ஒரே மரத்தின் ஒரே கிளையில்தான் வளர்ந்துள்ளன. ஒன்று ஏற்கனவே பழுத்துவிட்டது, மற்றொன்று இன்னும் பழுக்கவில்லை. பழுக்க அதற்கு இன்னும் அதிக நேரம் தேவைப்படுகிறது.
இந்த மாம்பழங்கள் மூலம் இயற்கை நமக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்பிக்கிறது. நமக்கு முன்னால் சிலர் வெற்றி பெற்றுவிடுவதால், நாம் தோல்வியடைந்தவர்கள் என்று அர்த்தமல்ல. நமது நேரம் இன்னும் வரவில்லை என்று அர்த்தம். எனவே, நாம் பொறுமையாக இருக்க வேண்டும், உற்சாகமாக இருக்க வேண்டும், விரக்திக்கு அடிபணியாமல் இருக்க வேண்டும். நம் சொந்த வெற்றியின் சந்தோஷத்தை அடைவதற்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படலாம் அவ்வளவுதான்.
நினைவில் கொள்ளுங்கள்!
நமக்கான நேரம் வரும் - அதற்கு தேவை பொறுமை, விடாமுயற்சி மற்றும் நம்பிக்கை ...
அமோகமாக வாழும்
ஒவ்வொரு குடும்பத்துலயும் ஒரு நல்ல பிள்ளை ஒன்னு இருக்கும்.
அது இளிச்சவாயா இருக்கும்.
அது எல்லாத்துக்கும் எல்லாத்தையும் குடுத்துரும்.
கொடுக்கலைன்னாலும் கொடுக்க வச்சிருவாங்க.
அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி எல்லாரும் நல்லா இருக்கட்டும்னு நினைக்கும்.
But அந்த ஒரு ஜீவன் மட்டும் அப்போதைக்கு நல்லாவே வாழாது.
அதுகிட்ட இருந்து எடுத்துக்கிட்டவங்க யாரும் திருப்பி எதுவும் செய்ய மாட்டாங்க.
பொழைக்க தெரிலனு comment வேற செய்வாங்க.
அதெல்லாம் அது எதையும் கண்டுக்காது.
கண்டிப்பா கஷ்டம் தான் படும்.
ஆனாலும் திரும்ப திரும்ப நல்லது தான் செய்யும்.
அது வாங்கற அடி யாராலும் வாங்கியிருக்க முடியாது.
அவ்வளவு அடி மேலே அடி வாங்கிட்டு திரும்ப வந்து செஞ்சிட்டே இருக்கும் அந்த இளிச்ச வாய் ஜீவன் .
பிகு.
இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன்.
அது கெட்டு போகாது.
அமோகமாக வாழும் ...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)