வாழ்ந்து பாருங்கள்

_ படித்ததில் பிடித்தது *வாடாமல்லிக்கு ஆயுள் அதிகம் ஆனால் வாசம் இல்லை. வாசமுள்ள மல்லிக்கோ ஆயுள் குறைவு.*_ _கொம்புல்ல மானுக்கோ வீரமில்லை._ _வீரமுள்ள கீரிக்கு கொம்பு இல்லை._ _கருங்குயிலுக்கு தோகை இல்லை_ _தோகை உள்ள_ _மயிலுக்கோ இனிய குரல் இல்லை._ _*நீருக்கு நிறம் இல்லை, நெருப்புக்கு ஈரம் இல்லை, கதிரவனுக்கு நிழல் இல்லை, காற்றுக்கு உருவமில்லை.*_ _*ஆக அது இருந்தால் இது இல்லை. இது இருந்தால் அது இல்லை.*_ _ஒன்றைக் கொடுத்து ஒன்றை எடுத்தான் இறைவன்._ _ஒவ்வொன்றுக்கும் காரணம் வைத்தான்._ _எவர் வாழ்விலும் நிறைவில்லை, எவர் வாழ்விலும் குறைவுமில்லை._ _*இதைப் புரிந்து கொண்டு அமைதி கொள்ளுங்கள். வாழ்வு ஒரு முறை வாழ்ந்து பாருங்கள். இந்த பிரபஞ்சம் பரந்து விரிந்திருக்கிறது உங்களுக்காக.*_