புற்றுநோய்

நண்பர் ஒருவரின் உறவினருக்கு புற்றுநோய் உள்ளது மருந்து வாங்க போக வேண்டும் என்றார். சரி என்று இருவரும் கேரளாவுக்கு கிளம்பினோம். கோவையில் இருந்து தடாகம் வழியில் சென்று ஆனைக்கட்டி சென்று அங்கிருந்து முக்காலி செல்ல வேண்டும்.. முக்காலியில் இருந்து நம் சிறியரக சடான் கார்கள் செல்ல முடியாது. ஜீப் வகைகள் வண்டியில் செல்வதே உத்தமம். மிக மோசமான வனதுறை சாலையில் போனால் இருக்கின்றது வள்ளியம்மாள் குருகுலம். பாதுகாக்கப்பட்ட வனபகுதியில் பிரம்மாண்ட கட்டிடங்களுடன் உள்ளது இந்த ஒற்றை மூலிகை வைத்தியசாலை. இது எப்படி சாத்தியம் அதுவும் கேரளத்தில் என்று சேட்டன்மார்களிடம் சம்சாரித்தால். பிரிட்டிஸ் அரசு வள்ளியம்மாள் என்கின்ற ஆதிகுடி இருளர் பெண்ணுக்கு 112ஏக்கரை பட்டயம் போட்டு தந்துள்ளார்கள். அரிய வகை மூலிகை வளர்க்க அன்று வந்த பிரிட்டிஸ் கவர்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாகும் நிலையில் இருந்தவரை இருளர் பெண் வைத்திச்சிகள் சில கிழங்கு, மரபட்டை, வேர்களை பொடி செய்து கொடுக்க அவர் மீண்டு நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருக்கின்றார். அவர் பட்டயம் செய்து கொடுத்த உரிமையில் இவர்கள் வாழ்ந்து பயன்படுத்தி வருகின்றனர். மூன்று பரம்பரை ஆட்கள் இடங்கள் இங்கு உள்ளது. அவ்வகையில் வள்ளியம்மாள், பொன்னியம்மாள், லட்சுமியம்மாள் என மூவர் உள்ளனர். முக்கியமானவர் வள்ளியம்மாள் ரவீந்திரன் வைத்தியர். பெயரை கொடுத்து விட்டு வைத்தியரை பார்க்க காத்திருந்தால் நிறைய பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் விசாரித்தால் மிகப்பெரிய ஆச்சர்யம். கும்பகோணத்தை சேர்ந்த ஒருவர் தஞ்சை மீனாட்சியில் கைவிடப்பட்டவர் மூன்று மாதம்தான் உங்கள் ஆயுள் என்று சொல்லப்பட்டவராம் எட்டு லட்சம் வரை செலவு செய்தவராம். சாகத்தானே போறோம் கடைசி முயற்சியாக இதை பார்ப்போம் என்று வந்தவர் பதினாறு மாதங்களாக வருகின்றேன் என்றார். இங்கு பெரும்பாலும் அலோபதி கைவிடப்பட்ட நிலையில் வருகின்றார்கள். பொள்ளாச்சியை சேர்ந்த முரளி என்பவர் சொல்கின்றார். ராமகிருஸ்ணாவுல பதினைந்து லட்சம் செலவு செஞ்சேனுங்க வீட்டை காட்டை வித்து பாத்தணுங்க கடைசில சாவு உனக்கு கன்பார்முடான்டானுக. . தென்னை மரத்து மாத்திரைய வாங்கி வச்சுட்டுத்தானுங்க இங்க வந்தேன்... இதை ஒரு மாசம் பாப்போம். சரியாகுலையா இருக்கற சொத்தை பொண்டாட்டி பேர்ல எழுதி வச்சுட்டு நாம செத்தரலாம்முன்னுதான் வந்தேன். இன்னிக்கு மூணு வருசம் ஆச்சுங்க..என்னோட நோய் குணமாயிருச்சு ஆனாலும் மருந்தை நிறுத்தலை இன்னும் பத்து வருசம் வாழ்ந்தா போதுங்க எம் பையனை கரையேத்திருவேன் என்று தன் மகனை கட்டியணைத்து கண்ணீர் விடுகின்றார். இப்படி பல பேரின் கதை சொல்ல...ஆச்சரியமாக உள்ளது. வைத்தியரிடம் கேட்ட போது இந்த வைத்தியம் முதல் ஸ்டேஜ்ல இருந்தால் 100%குணப் படுத்தி விடலாம். ஆனால் நம்பிக்கையிருப்பதில்லை... சுற்றிவிட்டுதான் இங்கு வருகின்றார்கள். நான்காவது ஸ்டேஜ்ஜில் 80%பேரை பிழைக்க வைத்திருக்கின்றேன்... அதற்கு மேல் இறைவன் கருணை என்றார். இது சாத்தியமா? உண்மையா? என்று அவநம்பிக்கையோடுதான் சென்றேன். அங்கு இருந்த மருந்து வாங்க வந்த 100பேர்களின் கதைகளை கேட்ட போது நம்பிக்கையுள்ளது. யாராவது உங்களுக்கு தெரிந்தவர்கள் கை விடப்பட்ட நிலையில் இருந்தால் இங்கு அனுப்புங்கள் இன்னும் கொஞ்சம் காலம் வாழட்டும். தொடர்புக்கு :83448 88786‬: #Address VALLIYAMMAL GURUKULAM, Tribal Traditional Ottamooli Cancer Treatment Center, *Ph: 09946097562, address: CHINDAKKI,MUKKALI, ATTAPADY, PALAKKAD-678581 Source: இந்த தகவல் பலருக்கும் பயனளிக்கும் என்பதனால் பகிர்கிறேன். Cp

வீடு கட்ட நினைக்காதீர்

வெளிநாடு வேலைக்கு சேர்ந்த உடனேயே வசிக்கும் ஊரில் வீடு கட்ட நினைக்காதீர்.. ஒரு பத்து வருட அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள்.. ஊரில் இருக்கும் உறவினர்களுக்கு காண்பிப்பதற்காக கடன் வாங்கி நகைகளை வாங்காதீர்கள்.. இந்த காசுக்கு ஊருக்கு வெளியில் வீட்டுமனை ஒன்று மூன்று லட்சம் அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக
வீட்டு மனைகளை சேர்த்து வைத்துக் கொண்டே வாருங்கள்.. நீங்கள் வசிக்கும் ஊரில் இருந்து 20+ கிலோமீட்டர் தள்ளி மனை ஒன்று மூன்று லட்சம் அளவிற்கு கிடைக்கிறது.. இங்கிருந்து உங்கள் சேமிப்பை துவங்குங்கள் பத்து வருடம் கழித்து இருக்கும் மனைகளை ஒன்றாக சேர்த்து விலைக்கு விற்று பங்களா போன்றவை கட்டிக் கொள்ளுங்கள்.. கடனுக்கு வீடு கட்டி விருந்து வைத்து உறவுகளுக்கு எல்லாம் காண்பித்து கண் திருஷ்டி பட்டு இன்னல்களுக்குள் மாட்டிக் கொள்ளாதீர்கள் இளைஞர்களே.. 30 வயதில் சேமிக்க துவங்குங்கள் 45 வயதில் பங்களா கட்டிக் கொள்ளுங்கள் .. வீட்டுக்கு வெளியில் நின்று பொய்யாக சிரித்து வீட்டுக்கு உள்ளே அமர்ந்து சோகத்தோடு வாழக்கூடாது.. நிதானமாக யோசியுங்கள்.. படித்ததில் பிடித்ததுவெளிநாடு வேலைக்கு சேர்ந்த உடனேயே வசிக்கும் ஊரில் வீடு கட்ட நினைக்காதீர்.. ஒரு பத்து வருட அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள்.. ஊரில் இருக்கும் உறவினர்களுக்கு காண்பிப்பதற்காக கடன் வாங்கி நகைகளை வாங்காதீர்கள்.. இந்த காசுக்கு ஊருக்கு வெளியில் வீட்டுமனை ஒன்று மூன்று லட்சம் அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக வீட்டு மனைகளை சேர்த்து வைத்துக் கொண்டே வாருங்கள்.. நீங்கள் வசிக்கும் ஊரில் இருந்து 20+ கிலோமீட்டர் தள்ளி மனை ஒன்று மூன்று லட்சம் அளவிற்கு கிடைக்கிறது.. இங்கிருந்து உங்கள் சேமிப்பை துவங்குங்கள் பத்து வருடம் கழித்து இருக்கும் மனைகளை ஒன்றாக சேர்த்து விலைக்கு விற்று பங்களா போன்றவை கட்டிக் கொள்ளுங்கள்.. கடனுக்கு வீடு கட்டி விருந்து வைத்து உறவுகளுக்கு எல்லாம் காண்பித்து கண் திருஷ்டி பட்டு இன்னல்களுக்குள் மாட்டிக் கொள்ளாதீர்கள் இளைஞர்களே.. 30 வயதில் சேமிக்க துவங்குங்கள் 45 வயதில் பங்களா கட்டிக் கொள்ளுங்கள் .. வீட்டுக்கு வெளியில் நின்று பொய்யாக சிரித்து வீட்டுக்கு உள்ளே அமர்ந்து சோகத்தோடு வாழக்கூடாது.. நிதானமாக யோசியுங்கள்.. படித்ததில் பிடித்தது

வடுவூர் தன்னரசு நாடு – தமிழகத்தின் பெருமை

சோழநாட்டு கள்ளர் நாடுகளில் ஒன்றான பாரம்பரியம் பண்பாடு கலாச்சாரம் அனைத்தையும் பாதுகாக்கும் வடுவூர் தன்னரசு நாடு – தமிழகத்தின் பெருமை எங்கும் பச்சை பட்டாடை உயர்த்திய நெல்வயல்கள், ஊர் எல்லையில் 364 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக வரவேற்கும் பெரிய ஏரி பறவைகள் சரணாலயம் போன்ற பல சிறப்புகளுடன் உள்ள ஊர் வடுவூர் தன்னரசு நாடு. இம்மக்கள் தன்னைத்தானே அரசாண்ட காரணத்தினால் இவர்களுக்கு வடுவூர் தன்னரசு நாடு என பெயர் எனக் கூறுகின்றனர். தேவர், வடிவிராயர் ,கண்டியர், வன்னியர், சேண்டாப்பிரியர், ஆர்சுத்தியார் , சோழகர், குமரர், இராசாளியார், வாண்டையார், ஓந்திரியர், புள்ளவராயர், மண்ணையார், கிளாவர், காளிங்கராயர், நந்தியர், இருங்களர், அதியமார், நாட்டார், வள்ளாலதேவர், வாயாடியார், தொண்டைமார், வம்பாளியார், ஈழங்கொண்டார், சோமாசியார், கண்டபிள்ளை, வெட்டர் தென்கொண்டார் பட்டம் உடைய கள்ளர்கள் வடுவூர் தன்னரசு கள்ளர் நாட்டில் வாழ்கின்றனர் .வடுவூர் தன்னரசு நாட்டின முதல் நாட்டாமை தேவர் பட்டம் கொண்ட வடுவூர் தென்பாதி தேவர்கள். கள்ளர்களின் கண்டியர் தெரு, வன்னியர் தெரு, மண்ணையர் தெரு, வடிவிராயர் தெரு, தேவர் தெரு…. என்று கள்ளர்கள் பட்டங்களில் பல தெருக்கள் உள்ளன. வடுவூர் தன்னரசு நாட்டில் கள்ளர்களின் வன்னியர் பட்டம் கொண்டவர்கள் அதிகம் வன்னியர் தெரு, காகா வன்னியர் தெரு, செருக்க வன்னியர் தெரு, குஞ்சான் வன்னியர் தெரு, எழுவநாச்சி வன்னியர் தெரு என்று உள்ளன. திருவாரூர் தேரழகு, மன்னார்குடி மதிலழகு, வடுவூர் சிலையழகு என்று ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட கிராமங்களில் கூறுவார்கள். முதலிரண்டு விஷயங்களும் பெருமபாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். வடுவூர் சிலை அழகு ஸ்ரீ கோதண்டராமர் சிலையைத்தான் மக்கள் இப்படி அழைக்கிறார்கள். மற்ற கோயில்களில் உள்ள சாமி சிலைகளை விட இந்த ராமர் சிலைக்கு அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா, பார்ப்பவர் பரவசம் கொள்ளும் வகையில், மந்தகாச புன்னகை காட்சி தருகிறார். வேறு எங்கும் இது போல் சிலைகளைப் பார்க்க முடியாது என்கிறார்கள் ஆன்மீக பெரியோர்கள். இதற்கு சாட்சியாக வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஒரு முறை வந்து வந்து விட்டு, ஸ்ரீ ராமரின் மந்தகாச புன்னகையில் மயங்கி, அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் ஏராளம். இந்தக் கோவில் வரலாறு பற்றி காண்போம் வடுவூர் தன்னரசு நாட்டில் ஓர் அபூர்வமும் உண்டு . அது, ராமபிரான் தனக்குத்தானே சிலை வடித்து பிரதிஷ்டை செய்த இடம் என்பதுதான். இவ்வூரில், கோபாலன் இருந்த இடத்தில்தான் கோதண்டராமர் மூலவராக எழுந்தருளி உள்ளார். அவர் இங்கு கோயில் கொண்ட விதம் சுவையானது. தந்தையின் வாக்குறுதியைக் காப்பாற்ற பதினான்கு ஆண்டு காலம் வனவாசம் மேற்கொண்ட ராமன், பின்னர் அயோத்தி நோக்கிப் பயணிக்க ஆயத்தமானார். ஆனால் ராமபிரானின் அருள் ஒளியில் திளைத்துப் பழிகிய ரிஷிகளோ ராமபிரானைப் பிரிய மனமின்றி அவர் தம்முடனே இருக்க வேண்டுமென வேண்டினார்கள். அன்புக்கும் கடமைக்கும் இடையில் நின்று சிந்தித்த ராமன் அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவிட்டு தமது ஆசிரமத்தில் அமர்ந்து யோசித்தார். அதையடுத்து ராமர் தமது சந்தரவடிவை தன் கையாலேயே சிலையாக வடித்து தமது ஆசிரம வாயிலில் வைத்துவிட்டு உள்ளே சீதாபிராட்டியுடன் இருந்தார். மறுநாள், ரிஷிகளும் முனிவர்களும் ராமனை வழக்கம் போல் தரிசிக்க ஆசிரமத்துக்கு வந்தனர். அப்போது ஆசிரம வாயிலில் இருந்த ராமரின் சுந்தரச்சிலையில் இதயத்தைப் பறிகொடுத்து மயங்கி நின்றனர். பின்னர் உள்ளே சென்று ராமரை தங்களுடனே தங்கியருள மீண்டும் வேண்டி நின்றனர். அப்போது அந்தn சீலர்களை நோக்கி ராமர், “உங்களுக்கு நான் வேண்டுமா? என்து சிலை உருவம் வேண்டுமா?’ எனக் கேட்டார். சிலையை கண்டு மனம் மயங்கியிருந்த தவசீலர்களின் மனம் அதிலேயே லயித்து இருந்ததால் சிலைக்கு மாற்று எது என்பதை மறந்து, தங்களுக்கு அந்தச் சிலையே வேண்டும் எனக் கூறிவிட்டனர். புன்னகையுடன் அதற்கு சம்மதித்த ராமர், அச்சிலையை அங்கேயே விட்டுவிட்டு லட்சுமணர், சீதாபிராட்டி சகிதம் காட்டை விட்டு நாட்டை நோக்கிப் பயணமானார். வெகுகாலம் கழித்து, காட்டில் அச்சிலைகளைக் கண்ட திருக்கண்ணபுரம் வாசிகள் ராமபிரானின் சிலையை தங்கள் ஊருக்குக் கொணர்ந்து பிரதிஷ்டை செய்து ஆராதித்து வரலாயினர். பின்னர் ஒரு காலத்தில் திருக்கண்ணபுரவாசிகள் ராமபிரானின் சிலையோடு தாங்கள் செய்து வைத்திருந்த சீதை, லட்சுமணர், பரதன், அனுமன் சிலைகளையும் திருத்துறைப்பூண்டியை அடுத்த தலைஞாயிறு எனும் கிராமத்தில், ஓர் அரசமரத்தின் அடியில் பாதுகாப்புக்காக புதைத்து வைத்தனர். காலவெள்ளத்தில் எத்தனையோ ஆண்டுகள் கடந்தன. அப்போது தஞ்சையை சரபோஜி மன்னர் ஆண்டு வந்தார். ஒரு நாள் மன்னரின் கனவில் ராமரே காட்சியளித்து, தாம் தலைஞாயிறு எனும் இடத்தில் குறிப்பிட்ட மரத்தினடியில் புதையுண்டிருப்பதாகவும்; தம்மை வெளியில் எடுத்து பிரதிஷ்டை செய்து ஆராதிக்குமாறும் கூறினார். திடுக்கிட்டெழுந்த மன்னர், தம் பரிவாரங்கள் படைசூழ தலைஞாயிறு சென்று குறிப்பிட்ட இடத்தில் தோண்டி விக்ரகங்களை வெளியே எடுத்து வியந்தார். பின்னர் அச்சிலைகளுடன் மன்னர் பரிவாரம் கிளம்ப, அந்த நள்ளிரவில் உள்ளூர் மக்கள் விழித்தெழுந்து, சிலைகளை மன்னர் கொண்டு செல்லாமல் தடுத்தனர். அவர்களை சமாதானம் செய்து பரதர், லட்சுமணர் சிலைகளை மட்டும் அவர்களிடம் கொடுத்தவிட்டு, ராமர், சீதை, அனுமன் சிலைகளுடன் மன்னர் புறப்பட்டார். தஞ்சை நோக்கித் திரும்பும் வழியில் நடுநிசி ஆகிவிடவே வடுவூரில் விக்ரகங்களுடன், தம் பரிவாரம் புடைசூழ மன்னர் சற்று தங்கி ஓய்வெடுத்தார். ஒற்றுமையும் பண்பாடும்மிக்க வடுவூர் தன்னரசு நாட்டு பெருமக்கள் ஒரு சேரத் திரண்டு, மேற்படி அந்த சிலைகளை மன்னர் எடுத்துச் செல்ல வேண்டாமென கூறினார்கள் வடுவூர் தன்னரசு நாடுலேயே ஏற்கனவே இருந்த கோபாலன் கோயிலில் தாங்கள் கொண்டுவந்த ராமரை பிரதிஷ்டை செய்துவிட வேண்டுமென கூறினர். முதலில் மன்னர் மறுத்தார். ஆனால் வடுவூர் தன்னரசு நாட்டு ஊர்மக்கள் மன்னரை சூழ்ந்துகொண்டனர் சிலர் ஆலயத்தின் மொட்டை கோபுரத்தில் ஏறி நின்று குதித்து உயிர்த்தியாகம் செய்ய உறுதி பூணவே, மன்னர் அவர்களின் உறுதிக்கும், பக்திக்கும், ஒற்றுமைக்கும் மெச்சி வியந்து, அச்சிலைகளை வடுவூர் தன்னரசு நாட்டிலே பிரதிஷ்டை செய்ய சம்மதித்தார். சன்னதியில் ராமராக, ராமரே செய்தருளிய ராமரின் விக்ரகம் இன்றும் காண்போரைக் கவர்வதாய் உள்ளது. பிற்காலத்தில் வடுவூர் மக்கள் லட்சுமணர் சிலையையும் வார்த்தனர். அது பென் வடிவாகவே அமைந்துவிடவே, அதை அழகிய சுந்தரி அம்மனாக பிரதிஷ்டை செய்து, அதற்குத் தனி ஆலயம் அமைந்துள்ளது. மேலும் வடுவூர் தன்னரசு நாட்டில் வடிவழகி அம்மன் உடனுறை கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.இந்த கோவில் இறைவன் ஈசானிய மூலையில் மேற்கு பார்த்து அமைந்திருக்கிறது மேற்கு பார்த்து அமைந்த கோவில் மிகவும் குறைவு என்று ஆன்றோர்கள் கூறுவார்கள் அதனால் இந்த சிவன் கோவில் வடுவூர் பெற்ற பெரிய சிறப்பாகவே கூறப்படுகிறது மார்ச் முதல் செப்டம்பர் மாதத்தில் 6 நாள் சூரிய ஒளி இந்த இறைவன் மீது படுவது தனிச்சிறப்பாகும். வடுவூர் தன்னரசு நாடு வடுவூர் தென்பாதி , வடுவூர் வடபாதி,வடுவூர் புதுக்கோட்டை , வடுவூர்மேல்பாதி, வடுவூர்அடிசேரி போன்ற ஊர்களை உள்ளடக்கி உள்ளது. இந்த ஊர்களின் பெயருக்கு முன்னால் வடுவூர் சேர்த்துச் சொல்வதுதான் வழக்கம். வடுவூர் இரண்டு மூன்று விஷயங்களுக்குப் பிரபலம், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வடுவூரின் ஏரி, வடுவூரில் உள்ள ராமர் சிலை அப்புறம் கபடி விளையாட்டு. அந்தக் கிராமத்தில் இருந்துதான் இந்தியக் கபடி அணியின் கேப்டன் வந்தார். விளையாட்டை மூலதனமாகவைத்து மொத்தக் கிராமத்தையும் முன்னேற்றத் திசையில் கொண்டுசெல்ல முடியும் என்று நிரூபித்திருக்கும் அந்த ஊர்… வடுவூர்! இந்த ஊர் நிர்வாக வசதிக்காக தற்போது 3 ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்தும் சேர்த்து தன்னரசு நாடு அழைக்கப்படுகிறது. இந்த ஊருக்கு வடுவூர் என்ற பெயர்க்காரணமே சுவாரஸ்யமானது. சேரர் மற்றும் தொண்டை மண்டலத்தார் என பெரும் படையை எதிர்த்து மாமன்னர் கரிகால சோழன் வெற்றி கண்ட வெண்ணிப்பறந்தலைப் (தற்போது கோவில்வெண்ணி) தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது. இந்த போரில் வெற்றி கண்ட கரிகால சோழன், வீரர்கள் இந்த ஊரில் தங்கி இளைப்பாறி, விழுப்புண் ஆற்றிச் சென்றனர். வடுக்களைப் பெற்ற போர்வீரர்கள் தங்கி சென்ற ஊர் என்ற பொருளில் வடு + ஊர் = வடுவூர், அதனால் மாமன்னன் கரிகாலச்சோழன் வடுவூர் என்று பெயர் வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் அழகுமிக்க, இளமையான ஊர் எனும் பொருளில் வடிவு +ஊர் என அழைக்கப்படுகிறது. அந்த காலத்தில் மகிழ மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் மகிழங்காடு, வெகுளாரண்யம் என்றும், பாஸ்கர ஷேத்திரம், தக்ஷிண அயோத்தி, ஏகாதசி கிராமம் என பல்வேறு பெயர்களும் உண்டு என்கிறார்கள் இந்த ஊர் பற்றி ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள். ஒரு காலத்தில் தஞ்சை அரசர்களால் ஓர் ஏகாதசி தினத்தன்று வித்வான்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட வடுவூரை ‘ஏகாதசி கிராமம்’ எனவும் அழைப்பர். வடுவூர்… தமிழகத்தின் பெருமை தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் இருக்கும் வடுவூர், விளையாட்டு வீரர்களின் சொர்க்கபுரி. ரயில்வே முதல் ராணுவம் வரை வெற்றியடையும் வடுவூர்க்காரர்களின் வீடுகள்தோறும் பதக்கங்கள் பளிச்சிடுகின்றன. வடுவூர் தன்னரசு கள்ளர் நாட்டை சேர்ந்த ராஜசேகரன், கடுமையான ஓட்ட வீரர். விளையாட்டின் மீது தீராத் தாகம்கொண்ட அவர் கரடுமுரடான வயல்காட்டில் ஓடிப் பயிற்சிபெற்று, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 10.௫ விநாடிகளில் ஓடிச் சாதனை படைத்தார். 1952-ல் ஜகர்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் முதல் இடம் பெற்றார். உச்சகட்டமாக 1964-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோ வரை சென்று 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தடம்பதித்து ஒலிம்பியனாக ஜொலித்தார். பிறகு, இந்தியத் தடகள அணியின் பயிற்சியாளராக இருந்தார். அவர்தான் ஊர் இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தார். அதில் தொடங்கிய பயணம், அதன் பிறகு வரிசையாக ஆயிரக்கணக்கான வீரர்களும், வீராங்கனைகளும் வடுவூர் தன்னரசு கள்ளர் நாட்டில் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். கபாடி, வாலிபால், தடகளம், நீச்சல், கராத்தே, சிலம்பாட்டம், ஸ்குவாஷ் என அனைத்து விளையாட்டுகளுமே வடுவூர்க்காரர்களுக்கு அத்துப்படி முக்கியமாக கபாடி . அரசுப் பணிக்குப் போவதற்காக இவர்கள் விளையாடவில்லை. விளையாட்டு இவர்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக இருக்கிறது. ஊருக்குள் நுழைந்து ஒரு சுற்றுவந்தால் விதவிதமான விளையாட்டுகளில் பயிற்சியெடுக்கும் ஆண்களையும் பெண்களையும் காணலாம். இரவு 8 மணி வரையிலும் பயிற்சிகள் தொடர்கின்றன. வடுவூர் தன்னரசு நாட்டு மக்களின் விளையாட்டுத் திறமையை பார்த்து மத்திய அரசு 6 கோடி மதிப்பில் உள்விளையாட்டு அரங்கம் அமைத்து கொடுத்துள்ளது இதற்குத் தேவைப்பட்ட நிலம் வடுவூர் தன்னரசு நாட்டு மக்களால் இலவசமாக அளிக்கப்பட்டது . மேலும் வடுவூர் தன்னரசு நாட்டில் உள்ள அரசு மருத்துவமனை, துணை மின் நிலையம் இவற்றிற்கு தேவைப்பட்ட நிலம் வடுவூர் தன்னரசு நாட்டு மக்களால் இலவசமாக வழங்கப்பட்டது. வடுவூரில் பயிற்சி பெற்று வளர்ந்த இந்தியக் கபடி அணியின் கேப்டனாக இருந்தபோதுதான், கபடியில் ஆசிய அளவில் இருமுறை தங்கப் பதக்கம் வென்றது இந்தியா. செல்வராணி, கவிதா, இந்திரா, வளர்மதி, ஜெயந்தி, சாந்தி, லட்சுமி, நிலவு, சுதா போன்ற வீராங்கனைகள் கபடியிலும் வாலிபாலிலும் சாதனை பதித்து அரசுப் பணிகளில் இருக்கிறார்கள். தங்கள் ஊரைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள். பதக்கம் வென்று ஊர் திரும்பும் ஒவ்வொரு முறையும், ஊரே கூடி ஆரத்தி எடுத்து வரவேற்கிறது. விளையாட்டின் மூலம் வேலை பெற்றவர்கள் பணி நிமித்தம் உலக சாதனை படைத்த வடுவூர் நாயகி செல்வி.நிவேதா வீரையன் கண்டியர். தமிழகத்திலே 364 ஏக்கர் பரப்புள்ள மிகப்பெரிய வடுவூர் பறவைகள் சரணாலயம் இவ்வூரில் உள்ளது. வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் வந்து செல்கின்றன . வடுவூர் தன்னரசு நாடு சொந்தமான இந்த ஏரி 1911 ஆம் ஆண்டு பராமரிக்க முடியாமல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது…

காலம் கடந்து தெரிந்து கொண்ட உண்மைகள்.....😭

படித்ததி பிடித்தது காலம் கடந்து தெரிந்து கொண்ட உண்மைகள்.....😭😭😭😭😭 1. மனைவி,அம்மா & அப்பாவைத் தவிர வேறு யாரும் நம்மீது கடைசிவரை சுயநலமில்லாத உண்மையான அன்பு வைத்திருப்பதில்லை. 2. மதிப்பெண் சான்றிதழும் பட்டப்படிப்பு சான்றிதழும் மட்டுமே நல்ல வேலையை அமைத்துக் தராது. ஜால்ரா அடிக்க வேண்டும்... 3. ஆசிரியர்கள் கூறியது திட்டியது அனைத்துமே நம் நன்மைக்கு மட்டுமே 4. பணம் இருந்தால் மட்டுமே மதிப்பும் மரியாதையும் தேடி வரும். நம் நல்லவரா கெட்டவரா என்பதையும் பணமே தீர்மானிக்கும். 5. கடின உழைப்பு மட்டுமே முன்னேற்றத்தை கொடுக்கும். 6. நாம் கீழே விழுந்தால் அதை பார்த்து சிரிக்க ஒரு கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது. 7. நம்மளை தவிர நமக்கு உதவி செய்ய வேறு யாருமே இல்லை. தன் கையே தனக்கு உதவி. 8. குணத்தை பார்க்காமல் அழகையும் பணத்தையும் பார்த்து காதல் செய்வது தவறு. 9. போனிலேயே மூழ்கி இருந்தால் எதையும் சாதிக்க முடியாது என்று பெற்றோர் கூறியது சரியே. 10. சோம்பேறித்தனமே பல தீமைகளுக்கும் தோல்விகளுக்கும் அடிப்படை காரணம்.🙏 இவை அனைத்தையுமே நாம் காலம் கடந்த பிறகே தெரிந்து கொள்கிறோம்.

வாழ்க்கையில் வெற்றி பெற மூன்று வழிகள்

வாழ்க்கையில் வெற்றி பெற மூன்று வழிகள். 1) பிறரைக்காட்டிலும் அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள். 2) பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்க கற்றுக்கொள்ளுங்கள். 3) பிறரைக்காட்டிலும் குறைவாக எதிர்பாருங்கள். - வில்லியம் ஷேக்ஸ்பியர். வாழ்க்கையில் நீங்கள் கடந்து வந்த கடினமான சூழ்நிலைகளைத் திரும்பிப் பாருங்கள். நீங்கள் அவைகளை விட மிகவும் சக்தி வாய்ந்தவர், பிரத்யேகமானவர். 🙏🏼 *இனிய காலை வணக்கம்* 🙏🏼

எண்ணெய் குளியலின் விலைமதிப்பற்ற நன்மைகள்

தலையையும், உடலையும் எண்ணெய்யில் ஊற வைத்து குளிப்பதால் சருமம் மட்டுமின்றி, உள்ளுறுப்புகளும் புத்துணர்வு பெறும் என ஆயுர்வேதம் கூறுகிறது. எழுதியது: சத்யா பங்காற்றியது: டாக்டர் ரேகா குமார், ஆயுர்வேத மருத்துவர் ரேவதி (சென்னை) எண்ணெய் குளியல் என்றாலே தீபாவளி பண்டிகை நாள் அன்று மட்டும் காலை நடைபெறும் சடங்காக மாறிவிட்டது. ஆனால் ஆயுர்வேத மருத்துவர்கள் வாரம் ஒரு நாளாவது சில நிமிடங்களை ஒதுக்கி எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். எண்ணெய் குளியல் பற்றி சென்னையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ரேவதி நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்: எண்ணெய் குளியலை ஆயுர்வேதத்தில் அபயங்க ஸ்நானம் என அழைப்பார்கள். தீபாவளி தினத்தன்று எடுக்கும் எண்ணெய் குளியலை கங்கா ஸ்நானம் என்பர். இந்தியாவில் பழங்காலத்திலிருந்தே மிகவும் மதிக்கப்படும் சுகாதார செயல்முறை தான் இந்த எண்ணெய் குளியல். ஆயுர்வேதத்தில் மட்டுமின்றி தென்னிந்தியாவில் சித்த மருத்துவ முறையிலும் எண்ணெய் குளியல் கடைபிடிக்கப்படுகிறது. பழங்காலத்தில் இருந்தே எண்ணெய் குளியல்! பழங்காலத்திலிருந்தே, எண்ணெய் குளியலை எப்படி செய்ய வேண்டும் என ஒரு முழுமையான பரிந்துரைகள் இருந்தது. எண்ணெய் குளியல் எடுக்க ஆண்களுக்கு உகந்த நாட்கள் மற்றும் பெண்கள் உகந்த நாட்களைத் தேர்ந்தெடுப்பது, குறிப்பிட்ட எண்ணெய்கள் மற்றும் மூலிகைகள், எண்ணெய் தடவிய பின் நீண்ட ஆயுளுக்காக சொல்ல வேண்டிய ஸ்லோகம், மற்றும் எண்ணெய் குளியலுக்கு பிந்தைய பத்திய உணவு முறை என அவற்றை வடிவமைத்து உள்ளனர். மேலும் புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய தாய்மார்களுக்கு, ஆயுர்வேத குழந்தை பராமரிப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாக, விரிவான எண்ணெய் குளியல் முறை உள்ளது. இது குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் குழந்தை பெற்ற தாய் விரைவாக மீண்டு வரவும் முக்கிய பங்காற்றும். ஆனால் சமீப காலமாக எண்ணெய் குளியல் பழக்கம் இந்தியா முழுவதும் வெகுவாக குறைந்துள்ளது. 5 நாட்களும் வேலை, பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்திவிட்டு, வார இறுதி நாட்களில் ஷாப்பிங், சுற்றுலா, சினிமா என கிளம்பி விடுகின்றனர். இதனால் இந்த விலைமதிப்பற்ற பழக்கத்தை கடைப்பிடிக்க பலரால் முடிவதில்லை. வாரம்தோறும் ஞாயிறு விடுமுறை நாளில் அனைவரும் ஒரு மணி நேரம் ஒதுக்கி எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும். இது வயதாவதை தள்ளிப்போடும் என்கிறது ஆயுர்வேதம். எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய் சிறந்தது. இவ்வாறு அவர் கூறினார். புத்துணர்வு தரும் எண்ணெய் குளியல் எண்ணெய் குளியலின் முக்கியத்துவத்தை ஆயுர்வேத மருத்துவர் ரேவதி விளக்கிய நிலையில், அதன் பயன்கள் குறித்து ஈரோட்டைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் அருண்குமார் விளக்கியுள்ளார். எண்ணெய் குளியலின் அறிவியல் பூர்வ பயன்கள் குறித்து அவர் கூறியதாவது: நான்கு நாட்களுக்கு ஒரு நாள் ஆவது எண்ணெய் தேய்த்து குளிக்க ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. எண்ணெய் குளியல் தொடர்பாக வெளிநாடுகளில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. தோல் வறட்சியைத் தடுக்கும் பலருக்கு வறண்ட தோல் பிரச்னை இருக்கும். கை, கால்கள், முகங்களில் இதனால் சரும வெடிப்பு காணப்படும். இவற்றுடன் வெயிலில் செல்லும் போது அவை புண் ஆக மாறி தோல் நோயை உண்டாக்கும். இத்தகைய வறண்ட சருமம் உடையவர்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பதால், அவர்களது தோல் வறட்சியடையாமல் இருக்கும். சருமம் பொலிவு பெறும். எண்ணெய் தேய்த்து 30 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர், குளிக்க செல்கையில் சோப்பு கட்டியை அப்படியே சருமத்தின் மீது தேய்த்து குளிக்கக் கூடாது. மிக மென்மையாக சோப்பு நுரையை கொண்டு கழுவினால் போதும். அதன் பிறகு இருக்கும் எண்ணெய் பசையை அப்படியே விட்டு விடுவது தான் பயனளிக்கும். குழந்தைகளுக்கான பயன்கள் அமெரிக்காவின் மியாமி மருத்துவ கல்லூரி மற்றும் அலபாமா பல்கலை, கைக்குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் தந்து குளிப்பாட்டுவதால் ஏற்படும் பயன்கள் குறித்து ஆராய்ச்சி செய்தது. மிக மென்மையாக குழந்தைகளுக்கு எண்ணெய் தடவி நீவி விட்டு குளிக்க வைக்கும் போது, கார்டிசால் எனும் பதற்றத்தை உண்டு பண்ணும் ஹார்மோன் அளவு குறைந்து, குழந்தை சாந்தமடைகிறது என தெரியவந்துள்ளது. மேலும் மூளையில் செரட்டோனின் எனும் மகிழ்ச்சி ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. நன்கு பசியை தூண்டுகிறது. ரிலாக்ஸாக உணர வைக்கிறது. நிம்மதியான தூக்கத்தை தருகிறது என கண்டறிந்துள்ளனர். சிலர் குழந்தைகளை படுக்க வைத்து கடுமையாக எண்ணெய் தடவி, கதற கதற மசாஜ் செய்கிறார்கள். அப்படி செய்ய கூடாது. சளி பிடிக்குமா? எண்ணெய் தேய்த்து குளிப்பதால் சளி பிடிக்கும் அபாயம் இருப்பதாக கருதி, பலர் விருப்பம் இருந்தும் எண்ணெயை தொடுவதில்லை. இது குறித்து மருத்துவர் அருண்குமார் கூறியதாவது: சளி, காய்ச்சல் போன்றவை வெளியில் இருந்து தொற்றும் வைரஸ் கிருமிகளால் ஏற்படக் கூடியது. எண்ணெய் தேய்த்து குளிப்பதால் சளி பிடிக்காது. எனவே பயமின்றி குளிக்கலாம். என்றார். எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்! எண்ணெய் குளியலுக்கு எந்தெந்த எண்ணெய் பயன்படுத்தலாம் என ஆயுர்வேத மருத்துவர் ரேவதி விளக்கினார். நமக்கு எளிதாக கிடைக்கும் நல்லெண்ணெய் பயன்படுத்தியே எண்ணெய் குளியல் எடுக்கலாம். அதனை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தடவி தேய்த்து ஊற விட்டு அரை மணி நேரம் கழித்து குளித்தால் புத்துணர்வு கிடைக்கும். நல்லெண்ணெய்யில் ஆன்டிசெப்டிக் தன்மை உண்டு. தோலில் உள்ள தீங்கு தரும் நுண்ணுயிரிகளை கொல்லக் கூடும். நல்லெண்ணெய் வாசம் பிடிக்காதவர்கள் தைல எண்ணெய், எலுமிச்சை எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இவற்றை சில சொட்டுக்கள் தேங்காய் எண்ணெய் உடன் கலந்து தான் பயன்படுத்த வேண்டும். அப்படியே பயன்படுத்த உகந்தது அல்ல. வாத உடம்பு எனில் நல்லெண்ணெய்யில் ஒரு பல் பூண்டை தட்டிப் போட்டு, சூடு காட்டி பயன்படுத்துங்கள். பித்த உடம்பு எனில் ஒரு அரு நெல்லிக்காயை ஒன்றை எண்ணெயில் உடைத்துப் போட்டு சூடு பண்ணி பயன்படுத்தலாம். கபம் உடம்பு எனில் இரண்டு மிளகை பொடித்து போட்டு நல்லெண்ணெயை சூடு செய்து பயன்படுத்தலாம் என்று அவர் கூறினார்.

வாழ்க்கை♥️

_*நம்ம*_ _*வாழ்க்கையில் இவர்களை*_ _*எல்லாம் மறக்கவே*_ _*கூடாதுன்னு*_ _*சில பேரை மனசுல வச்சிருப்போம்.*_ _அவர்களை எல்லாம் இப்ப_ _நினைச்சுப் பாருங்க, அழகாய் அவங்களை மட்டும்_ _மறந்திருப்போம்._ _*யார் இல்லாம இருக்கவே*_ _*முடியாதுன்னு*_ _*நினைச்சிட்டு*_ _*இருந்தமோ,*_ _*அவர் இல்லாமல் தான்*_ _*கூடிய சீக்கிரம் இருக்கப்*_ _*போறோம்னு இந்த உலகம் காட்டும்,*_ _*அவர்களை இழக்கப் போறோம்னு காட்டும்.*_ _எப்பவுமே இங்க ஒரு_ _புதுப்பித்தல் தேவைப்படுகிறது,_ _ஃபோன் அப்டேட் மாதிரி_ _எல்லா மனிதர்களும்_ _ஒவ்வொரு_ _காலகட்டத்திலும்_ _ஒவ்வொரு_ _விதமாய்ப் புதிதை நோக்கி ஓடத் தொடங்குகின்றனர்._ _*அது ஒவ்வொரு நட்பாய்,*_ _*ஒவ்வொரு காதலாய்,*_ _*ஒவ்வொரு உறவாய்,*_ _*ஒவ்வொரு பழக்கமாய்*_ _*மாறி மாறி எதுவும் நிரந்தரமற்ற நிலையாய் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.*_ _எல்லாம் மாறக் கூடியதே,_ _எதுவும் நிரந்தரம் அல்ல,_ _அந்த சமயத்தில்_ _அந்த நேரத்தில்_ _இருப்பவை_ _எவையாவினும்_ _ஒரு விலகலோடு_ _ஒரு புரிதலோடு பழகினால் ஒரு இடைவெளி விட்டு நேசம் கொண்டால் பிரியும் போது வலி இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால் பிரிவின் வலி சாவை விடக் கொடியது.பகிர்வு

மரணம்

படித்ததில் பிடித்தது கட்டிய மனைவி சலிப்படைந்து எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். பெற்ற பிள்ளை சனியனே என்று சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். சொத்து சேர்த்த தகப்பனை தவிக்க விட்டு சொத்துக்கு மக்கள் அடித்துக் கொள்ளும் நிலை வருவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். இழுத்துக் கொண்டிருப்பதை பார்த்து நாளை போக வேண்டும் என்று கடவுளை மகள் வணங்குவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். மூன்று வேளை உணவில் ஒருவேளை உணவை கொடுத்து தின்னு தொலை சனியனே என்று சொல்லும் முன் மரணம் வந்து விட வேண்டும். உறவுகள் எல்லாம் கூடி அறியாமல் செய்த பாவத்தை எடுத்துரைத்து கைத்தட்டி சிரிப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். நோயில்லாத உடல் ஆரோக்கியமாக இருக்கும் நேரத்தில் மரணம் வந்துவிட வேண்டும். பெற்ற பிள்ளைகள், கட்டிய மனைவி எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும். நீ எல்லாம் வாழ்ந்து என்ன பயன் என்று மனைவியும் மக்களும் மற்றவர்களும் சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.......

சிந்தனைகள்

படித்ததில் பிடித்தது *1. விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் உறவினர்கள் வீடுகளுக்கு செல்லுங்கள்.* *2. எப்போதும் எதிர்காலத்தைப் பற்றியே சிந்திக்காதீர்கள்.* *3. உறவினர்களை தங்களது வீட்டுக்கு வரச்சொல்லி முழு மனதுடன் அழைப்பு விடுங்கள்.* *4. சாலைகளில் நடக்கும்போது தலையை நிமிர்ந்து நடந்து செல்லுங்கள். நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களை பார்த்தால் புன்னகை செய்து குடும்ப நலங்களை விசாரியுங்கள்.* *5. வீட்டுக்குள்ளேயே இருந்து வாழ்க்கையை கழிக்காதீங்க. பிற்காலத்தில் உதவிக்கு யாரும் வராமல் மன நோயாளியாக ஆக நேரிடும்.* *6. தங்களுடைய திறமைகள் அடுத்தவர்களுக்கு பயனுடையதாக இருக்க வேண்டும்.* *7.*வாரம் ஒருமுறையாவது குடும்பத்துடன் அருகில் இருக்கும் கோயில்களுக்கு செல்லுங்கள்.* *8. சொத்து, தங்கம் மற்றும் பணத்தை நினைத்து, நினைத்து டென்சன் ஆகாதீங்க.* *9. ஒரு நாளைக்கு பத்து முறையாவது சிரிங்க.😀😀😀* *10. நான் பெரிய ஆள், (ஈகோ) எனது கட்டளைக்கு அனைவரும் கட்டுபட வேண்டும் என்ற* *எண்ணத்தை கைவிடுங்க இல்லையேல் உங்கள் மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள்,வேலை ஆட்கள் உங்களுடன் போலியாகத்தான் பழகுவார்கள்.* *11. வங்கியில் பணத்தை சேர்ப்பதை தவிர்த்து முடிந்த அளவு தானம், தர்மம் செய்து புண்ணியத்தை சேர்க்க பழகிக்கொள்ளுங்கள்,* *12. உங்களுக்கு உள்ளேயே ஒரு வட்டம் போட்டு வாழ்க்கையை வாழாதீங்க.* *13. இன்னும் சில நொடி, சில நிமிடம், சில நாட்கள், சில மாதம், சில ஆண்டுகளில் இந்த புண்ணிய பூமியை விட்டு போய்விடுவோம் என்ற எண்ணத்தில் வாழ பழகுங்கள்.* *14. இந்த வீடு, சொத்து, கார், தொழில், பணம், செல்வாக்கு, உடன் பிறந்தவர்கள், சொந்தங்கள், வேலையாட்கள், அதிகாரம்,பதவி இவை அனைத்தும் உங்களுடன் வராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* *15. உடற்பயிற்சி, தியானம் செய்து உடலை பாதுகாப்பாக வையுங்கள்.* *16. வாழ்க்கையில் ஓர் நோக்கம் வேண்டும். அது இல்லாமலேயே ஏனோதானோ என்று இருக்கக் கூடாது.* *17. இதைப் படித்துவிட்டு இவன் முதல்ல கடைப்பிடிக்கிறானா என்று நினைக்காதீங்க. எனக்கும் இந்த சிந்தனைகள் பொருந்தும்.* 🙏🙏🙏🏻🙏🏻✨🙏🏻