காலம் கடந்து தெரிந்து கொண்ட உண்மைகள்.....😭

படித்ததி பிடித்தது காலம் கடந்து தெரிந்து கொண்ட உண்மைகள்.....😭😭😭😭😭 1. மனைவி,அம்மா & அப்பாவைத் தவிர வேறு யாரும் நம்மீது கடைசிவரை சுயநலமில்லாத உண்மையான அன்பு வைத்திருப்பதில்லை. 2. மதிப்பெண் சான்றிதழும் பட்டப்படிப்பு சான்றிதழும் மட்டுமே நல்ல வேலையை அமைத்துக் தராது. ஜால்ரா அடிக்க வேண்டும்... 3. ஆசிரியர்கள் கூறியது திட்டியது அனைத்துமே நம் நன்மைக்கு மட்டுமே 4. பணம் இருந்தால் மட்டுமே மதிப்பும் மரியாதையும் தேடி வரும். நம் நல்லவரா கெட்டவரா என்பதையும் பணமே தீர்மானிக்கும். 5. கடின உழைப்பு மட்டுமே முன்னேற்றத்தை கொடுக்கும். 6. நாம் கீழே விழுந்தால் அதை பார்த்து சிரிக்க ஒரு கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது. 7. நம்மளை தவிர நமக்கு உதவி செய்ய வேறு யாருமே இல்லை. தன் கையே தனக்கு உதவி. 8. குணத்தை பார்க்காமல் அழகையும் பணத்தையும் பார்த்து காதல் செய்வது தவறு. 9. போனிலேயே மூழ்கி இருந்தால் எதையும் சாதிக்க முடியாது என்று பெற்றோர் கூறியது சரியே. 10. சோம்பேறித்தனமே பல தீமைகளுக்கும் தோல்விகளுக்கும் அடிப்படை காரணம்.🙏 இவை அனைத்தையுமே நாம் காலம் கடந்த பிறகே தெரிந்து கொள்கிறோம்.