நமக்கு இதுவே தேவை!!
மண்ணை உழுபவருக்கு பெண்ணைக் கொடு..
மரத்தை நடுபவருக்கு விருதைக் கொடு..
பொது வேலையில் ஈடுபட சொல்லிக் கொடு..
பொது சேவை செய்பவருக்கு புகழ் கொடு..
தண்ணீரை சேமிக்க சொல்லிக் கொடு..
தாமதித்தால் பாலைவனமாகும் என்பதை சொல்லி விடு..
தாய் தந்தைக்கு நல்லதைச் செய்..
அவர்கள் தளர்ந்த பின் நீ தளராமல் செய்..
உனக்காக ஒர் மரம் வை..
உன் குடும்பத்திற்காக ஒரு பத்து மரம் வை..
இதை சொந்தங்களையும் செய்யச் சொல்லி வை..
பிள்ளை பிறந்தாலும் மரம் வை..
பேர் வைத்தாலும் மரம் வை..
மகள் பெரியவள் ஆனாலும்
மரம் வை..
நாட்டுக்காக நாளும்
நூறு மரம் வை..
இச்செயலை நண்பர்களையும் செய்ய வை..
இதை ஊராரிடமும் சொல்லி வை..
பசுமையைப் பற்றி சொல்லிக் கொடு..
அதை உருவாக்க இப்பவே முயற்சியை எடு..
பணம்..வாழத் தேவை..
காற்று..வாழவே தேவை.
மரம் அதற்குத் தேவை..
நமக்கு இதுவே தேவை..
மறந்தால் நாம் தான் பேதை..
குளத்தை வெட்டி வை..
மரத்தை நட்டு வை..
நிலத்தை உழுது வை..
தண்ணீரை சேமித்து வை..
பல்லுயிரும் செழிக்க
பசுமை வேண்டும் என்று சொல்லி வை..
பூமித்தாயை குளிர்விக்க
நாம் விதைப்போம் ஒரு செடியை..
நம்மை குளிர்விக்க அந்த செடி மரமாக வளர்ந்து நமக்கு ஆயுளைத் தரும்!!!