*50 வயதைக் கடந்து 60 நோக்கி

*50 வயதைக் கடந்து 60 நோக்கிச்
சென்று கொண்டிருக்கும் ஒருவரிடம் 'உங்களிடம் என்ன மாற்றங்களை உணர்கிறீர்கள் ?' என்று கேட்டேன்.* அவர் அனுப்பிய பதில் இதோ : *1) என் பெற்றோரை, என் உடன் பிறந்தவர்களை, என் மனைவியை, என் குழந்தைகளை, என் தோழர்களை நேசித்த பிறகு, இப்போது என்னை நேசிக்கத் துவங்கி உள்ளேன்.* *2) நான் 'உலக வரைபடம்' அல்ல என்று உணர்ந்து கொண்டுள்ளேன். இந்த உலகத்தை என் தோள்களில் சுமப்பதில்லை.* *3) காய்கறி விற்கும் தங்கச்சியிடம், பழம் விற்கும் தம்பியிடம் பேரம் பேசுவதை நிறுத்தி விட்டேன். பத்து ரூபாய் அதிகமாகக் கொடுத்து விட்டேனே என்று மண்டையை உடைத்துக் கொள்வதில்லை. அவர்கள் மகள்களின் படிப்புச் செலவுக்கு சேமிக்க இது உதவட்டுமே.* *4) உணவகங்களில் கூடுதலாக டிப்ஸ் தருகிறேன். அன்றாட வாழ்க்கையை நடத்த, என்னை விட அதிகமாகப் போராடும் சர்வர் முகம் மலரலாம்.* *5) 'எத்தனை தடவை இந்தக் கதையைச் சொல்லுவீங்க' என்று இப்போதெல்லாம் முதியவர்களிடம் சொல்வதில்லை. அவர்கள் இந்தக் கதைகளால், தமது பழைய நினைவுகளை அசை போடுகிறார்கள்; கடந்த காலத்திலிருந்து விடுபடுகிறார்கள்.* *6) சில நேரங்களில் பிறர் சொல்வது தவறு என்று தெரிந்தாலும், அவர்களைத் திருத்தாமலிருக்கக் கற்றுக் கொண்டேன்.* *எல்லோரையும் திருத்தும் பொறுப்பு என்னுடையது அல்ல.* *எல்லோரும் சரியாக இருக்க வேண்டும் என்பதை விட என் மன அமைதி எனக்கு முக்கியம்.* *7) பெருந்தன்மையுடன், தாராளமாகப் பாராட்டுகிறேன். இது, பாராட்டுப் பெறுபவருக்கு மட்டுமல்ல, என்னுடைய மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. சின்ன ஆலோசனை - ஒருவர் உங்களைப் பாராட்டும்போது, ஒருபோதும் மறுக்காதீர்கள், நன்றி சொல்லி முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள்* *8) என்னுடைய ஆடையில் எண்ணெய்க் கறை பட்டு விட்டால் அலட்டிக் கொள்வதில்லை. தோற்றத்தை விட ஆளுமைதான் உரக்கப் பேசுகிறது.* *9) என்னுடைய மதிப்பை உணராதவர்களிடம் இருந்து விலகிப் போகிறேன். அவர்கள் என் மதிப்பை அறியாமல் இருக்கலாம், நான் அறிவேன்.* *10) யாராவது பந்தயத்தில் என்னை முந்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, மோசமாகச் செயல் பட்டாலும் நான் நிதானமாகவே இருக்கிறேன். நான் பந்தயத்தில் இல்லை. என் வாழ்க்கையை வாழ்கிறேன்.* *11) என் உணர்வுகளை எண்ணி சங்கடப்படாமல் இருக்கக் கற்றுக் கொள்கிறேன். என்னை மனுசனாக்குபவை என் உணர்வுகள் மட்டும்தான்.* *12) ஒரு உறவை முறித்துக் கொள்வதை விட, ஈகோ-வை விட்டு விடுவது நல்லது என்று அறிந்து கொண்டுள்ளேன். என் ஈகோ என்னைத் தனிமைப்படுத்தும்; உறவுகளால் நான் தனிமைப்பட்டுப் போக மாட்டேன்.* *13) ஒவ்வொரு நாளையும், இறுதி நாளைப் போல வாழக் கற்றுக் கொண்டுள்ளேன். இது கடைசி நாளாகவும் இருக்கலாம்.* *14) என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பவற்றைச் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய சந்தோசத்திற்கு நான்தான் பொறுப்பு. மகிழ்ச்சி என்பது ஒரு தேர்வு. அதைத் தேர்ந்தெடுத்து எந்த நேரத்திலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.* - *இப்பதிவில் சொன்ன பதில் எல்லா வயதினருக்கும் பொருத்தமானது என்று நினைக்கிறேன், இதைச் செயல்படுத்த 50, 60, 70 வயது வரை காத்திருக்க வேண்டுமா என்ன ? சிந்திப்போம்....