வடுவூர்
நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது.. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே...
வீடு கட்ட நினைக்காதீர்
வெளிநாடு வேலைக்கு சேர்ந்த உடனேயே வசிக்கும் ஊரில் வீடு கட்ட நினைக்காதீர்.. ஒரு பத்து வருட அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள்..
ஊரில் இருக்கும் உறவினர்களுக்கு காண்பிப்பதற்காக கடன் வாங்கி நகைகளை வாங்காதீர்கள்.. இந்த காசுக்கு ஊருக்கு வெளியில்
வீட்டுமனை ஒன்று மூன்று லட்சம் அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக
வீட்டு மனைகளை சேர்த்து வைத்துக் கொண்டே வாருங்கள்..
நீங்கள் வசிக்கும் ஊரில் இருந்து 20+ கிலோமீட்டர் தள்ளி மனை ஒன்று மூன்று லட்சம் அளவிற்கு கிடைக்கிறது..
இங்கிருந்து உங்கள் சேமிப்பை துவங்குங்கள் பத்து வருடம் கழித்து இருக்கும் மனைகளை ஒன்றாக சேர்த்து விலைக்கு விற்று பங்களா போன்றவை கட்டிக் கொள்ளுங்கள்..
கடனுக்கு வீடு கட்டி விருந்து வைத்து உறவுகளுக்கு எல்லாம் காண்பித்து கண் திருஷ்டி பட்டு இன்னல்களுக்குள் மாட்டிக் கொள்ளாதீர்கள் இளைஞர்களே..
30 வயதில் சேமிக்க துவங்குங்கள்
45 வயதில் பங்களா கட்டிக் கொள்ளுங்கள் ..
வீட்டுக்கு வெளியில் நின்று பொய்யாக சிரித்து வீட்டுக்கு உள்ளே அமர்ந்து சோகத்தோடு வாழக்கூடாது..
நிதானமாக யோசியுங்கள்..
படித்ததில் பிடித்ததுவெளிநாடு வேலைக்கு சேர்ந்த உடனேயே வசிக்கும் ஊரில் வீடு கட்ட நினைக்காதீர்.. ஒரு பத்து வருட அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள்..
ஊரில் இருக்கும் உறவினர்களுக்கு காண்பிப்பதற்காக கடன் வாங்கி நகைகளை வாங்காதீர்கள்.. இந்த காசுக்கு ஊருக்கு வெளியில்
வீட்டுமனை ஒன்று மூன்று லட்சம் அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக
வீட்டு மனைகளை சேர்த்து வைத்துக் கொண்டே வாருங்கள்..
நீங்கள் வசிக்கும் ஊரில் இருந்து 20+ கிலோமீட்டர் தள்ளி மனை ஒன்று மூன்று லட்சம் அளவிற்கு கிடைக்கிறது..
இங்கிருந்து உங்கள் சேமிப்பை துவங்குங்கள் பத்து வருடம் கழித்து இருக்கும் மனைகளை ஒன்றாக சேர்த்து விலைக்கு விற்று பங்களா போன்றவை கட்டிக் கொள்ளுங்கள்..
கடனுக்கு வீடு கட்டி விருந்து வைத்து உறவுகளுக்கு எல்லாம் காண்பித்து கண் திருஷ்டி பட்டு இன்னல்களுக்குள் மாட்டிக் கொள்ளாதீர்கள் இளைஞர்களே..
30 வயதில் சேமிக்க துவங்குங்கள்
45 வயதில் பங்களா கட்டிக் கொள்ளுங்கள் ..
வீட்டுக்கு வெளியில் நின்று பொய்யாக சிரித்து வீட்டுக்கு உள்ளே அமர்ந்து சோகத்தோடு வாழக்கூடாது..
நிதானமாக யோசியுங்கள்..
படித்ததில் பிடித்தது
வடுவூர் தன்னரசு நாடு – தமிழகத்தின் பெருமை
சோழநாட்டு கள்ளர் நாடுகளில் ஒன்றான பாரம்பரியம் பண்பாடு கலாச்சாரம் அனைத்தையும் பாதுகாக்கும்
வடுவூர் தன்னரசு நாடு – தமிழகத்தின் பெருமை
எங்கும் பச்சை பட்டாடை உயர்த்திய நெல்வயல்கள், ஊர் எல்லையில் 364 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக வரவேற்கும் பெரிய ஏரி பறவைகள் சரணாலயம் போன்ற பல சிறப்புகளுடன் உள்ள ஊர் வடுவூர் தன்னரசு நாடு. இம்மக்கள் தன்னைத்தானே அரசாண்ட காரணத்தினால் இவர்களுக்கு வடுவூர் தன்னரசு நாடு என பெயர் எனக் கூறுகின்றனர்.
தேவர், வடிவிராயர் ,கண்டியர், வன்னியர், சேண்டாப்பிரியர், ஆர்சுத்தியார் , சோழகர், குமரர், இராசாளியார், வாண்டையார், ஓந்திரியர், புள்ளவராயர், மண்ணையார், கிளாவர், காளிங்கராயர், நந்தியர், இருங்களர், அதியமார், நாட்டார், வள்ளாலதேவர், வாயாடியார், தொண்டைமார், வம்பாளியார், ஈழங்கொண்டார், சோமாசியார், கண்டபிள்ளை, வெட்டர் தென்கொண்டார் பட்டம் உடைய கள்ளர்கள் வடுவூர் தன்னரசு கள்ளர் நாட்டில் வாழ்கின்றனர் .வடுவூர் தன்னரசு நாட்டின முதல் நாட்டாமை தேவர் பட்டம் கொண்ட வடுவூர் தென்பாதி தேவர்கள்.
கள்ளர்களின் கண்டியர் தெரு, வன்னியர் தெரு, மண்ணையர் தெரு, வடிவிராயர் தெரு, தேவர் தெரு…. என்று கள்ளர்கள் பட்டங்களில் பல தெருக்கள் உள்ளன.
வடுவூர் தன்னரசு நாட்டில் கள்ளர்களின் வன்னியர் பட்டம் கொண்டவர்கள் அதிகம் வன்னியர் தெரு, காகா வன்னியர் தெரு, செருக்க வன்னியர் தெரு, குஞ்சான் வன்னியர் தெரு, எழுவநாச்சி வன்னியர் தெரு என்று உள்ளன.
திருவாரூர் தேரழகு, மன்னார்குடி மதிலழகு, வடுவூர் சிலையழகு என்று ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட கிராமங்களில் கூறுவார்கள். முதலிரண்டு விஷயங்களும் பெருமபாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். வடுவூர் சிலை அழகு ஸ்ரீ கோதண்டராமர் சிலையைத்தான் மக்கள் இப்படி அழைக்கிறார்கள். மற்ற கோயில்களில் உள்ள சாமி சிலைகளை விட இந்த ராமர் சிலைக்கு அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா, பார்ப்பவர் பரவசம் கொள்ளும் வகையில், மந்தகாச புன்னகை காட்சி தருகிறார். வேறு எங்கும் இது போல் சிலைகளைப் பார்க்க முடியாது என்கிறார்கள் ஆன்மீக பெரியோர்கள். இதற்கு சாட்சியாக வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஒரு முறை வந்து வந்து விட்டு, ஸ்ரீ ராமரின் மந்தகாச புன்னகையில் மயங்கி, அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் ஏராளம். இந்தக் கோவில் வரலாறு பற்றி காண்போம்
வடுவூர் தன்னரசு நாட்டில் ஓர் அபூர்வமும் உண்டு . அது, ராமபிரான் தனக்குத்தானே சிலை வடித்து பிரதிஷ்டை செய்த இடம் என்பதுதான்.
இவ்வூரில், கோபாலன் இருந்த இடத்தில்தான் கோதண்டராமர் மூலவராக எழுந்தருளி உள்ளார்.
அவர் இங்கு கோயில் கொண்ட விதம் சுவையானது.
தந்தையின் வாக்குறுதியைக் காப்பாற்ற பதினான்கு ஆண்டு காலம் வனவாசம் மேற்கொண்ட ராமன், பின்னர் அயோத்தி நோக்கிப் பயணிக்க ஆயத்தமானார். ஆனால் ராமபிரானின் அருள் ஒளியில் திளைத்துப் பழிகிய ரிஷிகளோ ராமபிரானைப் பிரிய மனமின்றி அவர் தம்முடனே இருக்க வேண்டுமென வேண்டினார்கள்.
அன்புக்கும் கடமைக்கும் இடையில் நின்று சிந்தித்த ராமன் அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவிட்டு தமது ஆசிரமத்தில் அமர்ந்து யோசித்தார்.
அதையடுத்து ராமர் தமது சந்தரவடிவை தன் கையாலேயே சிலையாக வடித்து தமது ஆசிரம வாயிலில் வைத்துவிட்டு உள்ளே சீதாபிராட்டியுடன் இருந்தார்.
மறுநாள், ரிஷிகளும் முனிவர்களும் ராமனை வழக்கம் போல் தரிசிக்க ஆசிரமத்துக்கு வந்தனர். அப்போது ஆசிரம வாயிலில் இருந்த ராமரின் சுந்தரச்சிலையில் இதயத்தைப் பறிகொடுத்து மயங்கி நின்றனர். பின்னர் உள்ளே சென்று ராமரை தங்களுடனே தங்கியருள மீண்டும் வேண்டி நின்றனர்.
அப்போது அந்தn சீலர்களை நோக்கி ராமர், “உங்களுக்கு நான் வேண்டுமா? என்து சிலை உருவம் வேண்டுமா?’ எனக் கேட்டார். சிலையை கண்டு மனம் மயங்கியிருந்த தவசீலர்களின் மனம் அதிலேயே லயித்து இருந்ததால் சிலைக்கு மாற்று எது என்பதை மறந்து, தங்களுக்கு அந்தச் சிலையே வேண்டும் எனக் கூறிவிட்டனர்.
புன்னகையுடன் அதற்கு சம்மதித்த ராமர், அச்சிலையை அங்கேயே விட்டுவிட்டு லட்சுமணர், சீதாபிராட்டி சகிதம் காட்டை விட்டு நாட்டை நோக்கிப் பயணமானார்.
வெகுகாலம் கழித்து, காட்டில் அச்சிலைகளைக் கண்ட திருக்கண்ணபுரம் வாசிகள் ராமபிரானின் சிலையை தங்கள் ஊருக்குக் கொணர்ந்து பிரதிஷ்டை செய்து ஆராதித்து வரலாயினர்.
பின்னர் ஒரு காலத்தில் திருக்கண்ணபுரவாசிகள் ராமபிரானின் சிலையோடு தாங்கள் செய்து வைத்திருந்த சீதை, லட்சுமணர், பரதன், அனுமன் சிலைகளையும் திருத்துறைப்பூண்டியை அடுத்த தலைஞாயிறு எனும் கிராமத்தில், ஓர் அரசமரத்தின் அடியில் பாதுகாப்புக்காக புதைத்து வைத்தனர்.
காலவெள்ளத்தில் எத்தனையோ ஆண்டுகள் கடந்தன. அப்போது தஞ்சையை சரபோஜி மன்னர் ஆண்டு வந்தார். ஒரு நாள் மன்னரின் கனவில் ராமரே காட்சியளித்து, தாம் தலைஞாயிறு எனும் இடத்தில் குறிப்பிட்ட மரத்தினடியில் புதையுண்டிருப்பதாகவும்; தம்மை வெளியில் எடுத்து பிரதிஷ்டை செய்து ஆராதிக்குமாறும் கூறினார்.
திடுக்கிட்டெழுந்த மன்னர், தம் பரிவாரங்கள் படைசூழ தலைஞாயிறு சென்று குறிப்பிட்ட இடத்தில் தோண்டி விக்ரகங்களை வெளியே எடுத்து வியந்தார். பின்னர் அச்சிலைகளுடன் மன்னர் பரிவாரம் கிளம்ப, அந்த நள்ளிரவில் உள்ளூர் மக்கள் விழித்தெழுந்து, சிலைகளை மன்னர் கொண்டு செல்லாமல் தடுத்தனர். அவர்களை சமாதானம் செய்து பரதர், லட்சுமணர் சிலைகளை மட்டும் அவர்களிடம் கொடுத்தவிட்டு, ராமர், சீதை, அனுமன் சிலைகளுடன் மன்னர் புறப்பட்டார்.
தஞ்சை நோக்கித் திரும்பும் வழியில் நடுநிசி ஆகிவிடவே வடுவூரில் விக்ரகங்களுடன், தம் பரிவாரம் புடைசூழ மன்னர் சற்று தங்கி ஓய்வெடுத்தார். ஒற்றுமையும் பண்பாடும்மிக்க வடுவூர் தன்னரசு நாட்டு பெருமக்கள் ஒரு சேரத் திரண்டு, மேற்படி அந்த சிலைகளை மன்னர் எடுத்துச் செல்ல வேண்டாமென கூறினார்கள் வடுவூர் தன்னரசு நாடுலேயே ஏற்கனவே இருந்த கோபாலன் கோயிலில் தாங்கள் கொண்டுவந்த ராமரை பிரதிஷ்டை செய்துவிட வேண்டுமென கூறினர்.
முதலில் மன்னர் மறுத்தார். ஆனால் வடுவூர் தன்னரசு நாட்டு ஊர்மக்கள் மன்னரை சூழ்ந்துகொண்டனர் சிலர் ஆலயத்தின் மொட்டை கோபுரத்தில் ஏறி நின்று குதித்து உயிர்த்தியாகம் செய்ய உறுதி பூணவே, மன்னர் அவர்களின் உறுதிக்கும், பக்திக்கும், ஒற்றுமைக்கும் மெச்சி வியந்து, அச்சிலைகளை வடுவூர் தன்னரசு நாட்டிலே பிரதிஷ்டை செய்ய சம்மதித்தார்.
சன்னதியில் ராமராக, ராமரே செய்தருளிய ராமரின் விக்ரகம் இன்றும் காண்போரைக் கவர்வதாய் உள்ளது.
பிற்காலத்தில் வடுவூர் மக்கள் லட்சுமணர் சிலையையும் வார்த்தனர். அது பென் வடிவாகவே அமைந்துவிடவே, அதை அழகிய சுந்தரி அம்மனாக பிரதிஷ்டை செய்து, அதற்குத் தனி ஆலயம் அமைந்துள்ளது. மேலும் வடுவூர் தன்னரசு நாட்டில் வடிவழகி அம்மன் உடனுறை கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.இந்த கோவில் இறைவன் ஈசானிய மூலையில் மேற்கு பார்த்து அமைந்திருக்கிறது மேற்கு பார்த்து அமைந்த கோவில் மிகவும் குறைவு என்று ஆன்றோர்கள் கூறுவார்கள் அதனால் இந்த சிவன் கோவில் வடுவூர் பெற்ற பெரிய சிறப்பாகவே கூறப்படுகிறது மார்ச் முதல் செப்டம்பர் மாதத்தில் 6 நாள் சூரிய ஒளி இந்த இறைவன் மீது படுவது தனிச்சிறப்பாகும்.
வடுவூர் தன்னரசு நாடு வடுவூர் தென்பாதி , வடுவூர் வடபாதி,வடுவூர் புதுக்கோட்டை , வடுவூர்மேல்பாதி, வடுவூர்அடிசேரி போன்ற ஊர்களை உள்ளடக்கி உள்ளது. இந்த ஊர்களின் பெயருக்கு முன்னால் வடுவூர் சேர்த்துச் சொல்வதுதான் வழக்கம். வடுவூர் இரண்டு மூன்று விஷயங்களுக்குப் பிரபலம், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வடுவூரின் ஏரி, வடுவூரில் உள்ள ராமர் சிலை அப்புறம் கபடி விளையாட்டு.
அந்தக் கிராமத்தில் இருந்துதான் இந்தியக் கபடி அணியின் கேப்டன் வந்தார். விளையாட்டை மூலதனமாகவைத்து மொத்தக் கிராமத்தையும் முன்னேற்றத் திசையில் கொண்டுசெல்ல முடியும் என்று நிரூபித்திருக்கும் அந்த ஊர்… வடுவூர்!
இந்த ஊர் நிர்வாக வசதிக்காக தற்போது 3 ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்தும் சேர்த்து தன்னரசு நாடு அழைக்கப்படுகிறது. இந்த ஊருக்கு வடுவூர் என்ற பெயர்க்காரணமே சுவாரஸ்யமானது. சேரர் மற்றும் தொண்டை மண்டலத்தார் என பெரும் படையை எதிர்த்து மாமன்னர் கரிகால சோழன் வெற்றி கண்ட வெண்ணிப்பறந்தலைப் (தற்போது கோவில்வெண்ணி) தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது. இந்த போரில் வெற்றி கண்ட கரிகால சோழன், வீரர்கள் இந்த ஊரில் தங்கி இளைப்பாறி, விழுப்புண் ஆற்றிச் சென்றனர். வடுக்களைப் பெற்ற போர்வீரர்கள் தங்கி சென்ற ஊர் என்ற பொருளில் வடு + ஊர் = வடுவூர், அதனால் மாமன்னன் கரிகாலச்சோழன் வடுவூர் என்று பெயர் வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் அழகுமிக்க, இளமையான ஊர் எனும் பொருளில்
வடிவு +ஊர் என அழைக்கப்படுகிறது. அந்த காலத்தில் மகிழ மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் மகிழங்காடு, வெகுளாரண்யம் என்றும், பாஸ்கர ஷேத்திரம், தக்ஷிண அயோத்தி, ஏகாதசி கிராமம் என பல்வேறு பெயர்களும் உண்டு என்கிறார்கள் இந்த ஊர் பற்றி ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள். ஒரு காலத்தில் தஞ்சை அரசர்களால் ஓர் ஏகாதசி தினத்தன்று வித்வான்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட வடுவூரை ‘ஏகாதசி கிராமம்’ எனவும் அழைப்பர்.
வடுவூர்… தமிழகத்தின் பெருமை
தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் இருக்கும் வடுவூர், விளையாட்டு வீரர்களின் சொர்க்கபுரி. ரயில்வே முதல் ராணுவம் வரை வெற்றியடையும் வடுவூர்க்காரர்களின் வீடுகள்தோறும் பதக்கங்கள் பளிச்சிடுகின்றன.
வடுவூர் தன்னரசு கள்ளர் நாட்டை சேர்ந்த ராஜசேகரன், கடுமையான ஓட்ட வீரர். விளையாட்டின் மீது தீராத் தாகம்கொண்ட அவர் கரடுமுரடான வயல்காட்டில் ஓடிப் பயிற்சிபெற்று, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 10.௫ விநாடிகளில் ஓடிச் சாதனை படைத்தார். 1952-ல் ஜகர்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் முதல் இடம் பெற்றார். உச்சகட்டமாக 1964-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோ வரை சென்று 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தடம்பதித்து ஒலிம்பியனாக ஜொலித்தார். பிறகு, இந்தியத் தடகள அணியின் பயிற்சியாளராக இருந்தார். அவர்தான் ஊர் இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்தார். அதில் தொடங்கிய பயணம், அதன் பிறகு வரிசையாக ஆயிரக்கணக்கான வீரர்களும், வீராங்கனைகளும் வடுவூர் தன்னரசு கள்ளர் நாட்டில் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள்.
கபாடி, வாலிபால், தடகளம், நீச்சல், கராத்தே, சிலம்பாட்டம், ஸ்குவாஷ் என அனைத்து விளையாட்டுகளுமே வடுவூர்க்காரர்களுக்கு அத்துப்படி முக்கியமாக கபாடி . அரசுப் பணிக்குப் போவதற்காக இவர்கள் விளையாடவில்லை. விளையாட்டு இவர்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக இருக்கிறது. ஊருக்குள் நுழைந்து ஒரு சுற்றுவந்தால் விதவிதமான விளையாட்டுகளில் பயிற்சியெடுக்கும் ஆண்களையும் பெண்களையும் காணலாம். இரவு 8 மணி வரையிலும் பயிற்சிகள் தொடர்கின்றன. வடுவூர் தன்னரசு நாட்டு மக்களின் விளையாட்டுத் திறமையை பார்த்து மத்திய அரசு 6 கோடி மதிப்பில் உள்விளையாட்டு அரங்கம் அமைத்து கொடுத்துள்ளது இதற்குத் தேவைப்பட்ட நிலம் வடுவூர் தன்னரசு நாட்டு மக்களால் இலவசமாக அளிக்கப்பட்டது . மேலும் வடுவூர் தன்னரசு நாட்டில் உள்ள அரசு மருத்துவமனை, துணை மின் நிலையம் இவற்றிற்கு தேவைப்பட்ட நிலம் வடுவூர் தன்னரசு நாட்டு மக்களால் இலவசமாக வழங்கப்பட்டது.
வடுவூரில் பயிற்சி பெற்று வளர்ந்த இந்தியக் கபடி அணியின் கேப்டனாக இருந்தபோதுதான், கபடியில் ஆசிய அளவில் இருமுறை தங்கப் பதக்கம் வென்றது இந்தியா. செல்வராணி, கவிதா, இந்திரா, வளர்மதி, ஜெயந்தி, சாந்தி, லட்சுமி, நிலவு, சுதா போன்ற வீராங்கனைகள் கபடியிலும் வாலிபாலிலும் சாதனை பதித்து அரசுப் பணிகளில் இருக்கிறார்கள்.
தங்கள் ஊரைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள். பதக்கம் வென்று ஊர் திரும்பும் ஒவ்வொரு முறையும், ஊரே கூடி ஆரத்தி எடுத்து வரவேற்கிறது. விளையாட்டின் மூலம் வேலை பெற்றவர்கள் பணி நிமித்தம்
உலக சாதனை படைத்த வடுவூர் நாயகி செல்வி.நிவேதா வீரையன் கண்டியர்.
தமிழகத்திலே 364 ஏக்கர் பரப்புள்ள மிகப்பெரிய வடுவூர் பறவைகள் சரணாலயம் இவ்வூரில் உள்ளது. வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் வந்து செல்கின்றன . வடுவூர் தன்னரசு நாடு சொந்தமான இந்த ஏரி 1911 ஆம் ஆண்டு பராமரிக்க முடியாமல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது…
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)